Saturday, September 18, 2010
ஒரு வனதேவதையின் உக்கிரம்
ஆதியில்
தண் பசுமையும் குளிர் காற்றும்
பட்சிகளின் வாழ்வும்
பகலவனின் ஒளி புகாத
கானகத்தினுள்
ஒரு வேம்பினடியில்
மடித்து வைத்த பாதங்களோடு
அமர்ந்து சாந்தம் கொண்டிருந்தேன்.
கொடும் கரம் கொண்டு பசுமையழித்து
கரும் நிறம் கொண்ட சாலைகள் போட்டு
என்னை ஒரு நாற் சுவருக்குள்
அடைத்தது ஒரு கூட்டம்.
தூக்கிய காலும் வெறித்த பார்வையுமாய்
மாறிப்போன எனக்கு
தினந்தோறும் பூசைகள்
பலிகல்லில் வடிக்கப்பட்ட குருதி
தெளிக்கப்பட்ட பன்னீர், வாடிய மாலைகள்
என எதுவும் பிரியமில்லை.
அறிந்துகொள்ளுங்கள் மக்களே
நான் இன்னும் சாந்தம் கொள்ளவில்லை
எனக்கு ஒரு கானகம் வேண்டும்.
படங்கள் : இணையத்திலிருந்து.
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
வந்து எங்கள் எல்லோரையும் போட்டுத் தள்ளுங்கள் தாயே.... நாங்கள் இருக்கும் வரை இந்தப் பூமியில் ஒரு புல் பூண்டு கூட முளைக்காது.. எங்களுக்கெல்லாம் எந்த சன்மத்திலும் பாவமும் விமொட்ஷனமும் கிடையாது..
ReplyDelete// பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
ReplyDeleteவந்து எங்கள் எல்லோரையும் போட்டுத் தள்ளுங்கள் தாயே.... நாங்கள் இருக்கும் வரை இந்தப் பூமியில் ஒரு புல் பூண்டு கூட முளைக்காது.. எங்களுக்கெல்லாம் எந்த சன்மத்திலும் பாவமும் விமொட்ஷனமும் கிடையாது..//
நம்மை எல்லாம் கொல்ல வேண்டாம் பிரகாஷ். !!. இருக்கும் மரம் செடி கொடிகளை விட்டு வைத்தால் போதும். அதுவும் நம் நலனுக்குத்தான்.
இருக்கும் மரம் செடி கொடிகளை விட்டு வைத்தால் போதும். அதுவும் நம் நலனுக்குத்தான்.
ReplyDelete..... இயற்கையை பாதுகாப்பது முக்கியம்தான்.
// Chitra said...
ReplyDelete..... இயற்கையை பாதுகாப்பது முக்கியம்தான். //
நமக்கு அடுத்து நிறைய தலைமுறைகள் வாழ வேண்டும் என்றால் நிச்சயம் பசுமையை அழிக்காமல் இருக்க வேண்டும். தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் சித்ராஅக்கா.
//அறிந்துகொள்ளுங்கள் மக்களே
ReplyDeleteநான் இன்னும் சாந்தம் கொள்ளவில்லை
எனக்கு ஒரு கானகம் வேண்டும்.//
பியுட்டிஃபுல்
அன்புடன் ஆர்.வி.எஸ்.
// RVS said...
ReplyDelete//அறிந்துகொள்ளுங்கள் மக்களே
நான் இன்னும் சாந்தம் கொள்ளவில்லை
எனக்கு ஒரு கானகம் வேண்டும்.//
பியுட்டிஃபுல்
அன்புடன் ஆர்.வி.எஸ். //
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.
SUPERB...பொருத்தமான வார்த்தைத் தெரிவு...
ReplyDelete//ஷஹி said...
ReplyDeleteSUPERB...பொருத்தமான வார்த்தைத் தெரிவு...
//
நன்றிங்க ஷஹி..