Posts

Showing posts with the label பயோடேட்டா

பயோடேட்டா : மழை

Image
பெயர்: மழை சாதனை: உயிர்கள் தோன்ற காரணமாக இருந்தது இருப்பிடம்: வானம், பூமி, ஆறு, கடல் முதற்கொண்டு உங்கள் வீட்டின் நீர் பிடிக்கும் பாத்திரங்கள் என அனைத்திலும். நிறம்: இல்லை பிடித்த இடம்: என்னை நேசிப்பவர்கள் மற்றும் என்னை எழுதும் கவிஞர்களின் மனம். பிடித்தவர்கள்: மரம் வளர்ப்பவர்கள் பிடிக்காதவர்கள்: மரம் + காடுகளை அழிப்பவர்கள், சுற்றுச்சூழலைக் கெடுப்பவர்கள். எரிச்சல்: வெயில் காலங்களில் மழை இல்லை என்று புலம்பிவிட்டு, மழை பெய்யும் காலங்களில் 'எப்பதான் இந்த மழை நிக்குமோ?' எனத் திட்டும் மனிதர்களைக் கண்டால். நீண்ட கால சாதனை: இன்னும் பெய்து கொண்டிருப்பது, உயிர்களை வாழ வைப்பது. சோகம்: முன்காலம் போல் மும்மாரி எல்லாம் பொழிய முடியாமல், குறைவாக பெய்வது. (இதற்கே மக்கள் 'வரலாறு காணாத மழை, வீட்டில் வெள்ளம்' என்று செய்தியில் சொல்லுகிறார்கள்). பிடித்த குறள் : விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. ********************************** நன்றி: மழைப் படம் கொடுத்த கூகிள் ஆண்டவருக்கு.

ஓர் இலையின் பயோடேட்டா

Image
ஓர் இலையின் பயோடேட்டா இது. பெயர் : இலை தாய் - தகப்பன் : மரம் நிறம் : பச்சை வசிப்பிடம் : எல்லா இடங்களிலும் தொழில் : மனிதன் சுவாசிக்க பிராண வாயு உற்பத்தி தொழில் ஓய்வு : மரத்திலிருந்து உதிரும் வரை பிடித்தவர்கள் : மரம் வளர்ப்பவர்கள் பிடிக்காதவர்கள் : மரம் வெட்டும் முதலாளிகள் சிறப்பு இயல்பு 1 : நிழல் தருவது சிறப்பு இயல்பு 2 : உதிர்ந்த பின்னும் உரமாவது [குறிப்பு: மேலே உள்ள புகைப்படம் என் கைப்பேசியில் எடுத்தது.]