Posts

Showing posts from February, 2011

நிறம், அழகு மற்றும் சிவப்பழகு கிரீம்கள்

Image
பெண் தேடும் படலத்தில், நல்ல குடும்பம், படிப்பு என்று தாண்டி 'நல்ல சிவந்த நிறமுள்ள பெண் தேவை' , குழந்தை பிறந்தவுடன் 'குழந்தை என்ன கலர்?'. குழந்தையின் எடை, ஆரோக்கியம் பற்றி ஒரு கேள்வியுமில்லை. கல்யாணத்துக்குப் போனால், 'பெண் / மாப்பிள்ளை மேட்ச் சரியில்லை. எங்க இருந்து தான் மாப்பிள்ளை / பொண்ணு பிடிச்சாங்களோ' என்று பேசிக் கொண்டிருப்பார்கள். சரி விட்டுத் தள்ளுங்கள், சினிமாவில் கூட அழகான நல்ல கலரான (இல்லை மேக்-அப் போட்டுக்கொண்டு) பெண்களே காணக் கிடைக்கிறார்கள். கிராமப் படம் என்றால் இயக்குனரைப் பொருத்து கலர் வேண்டுமா, வேண்டாமா என்று தீர்மானிக்கப் படுகிறது. அப்படி என்றால் அழகில்லாதவர்கள் எல்லாம் என்ன செய்ய வேண்டும்?. அதற்கும் வழி உண்டாம். தொலைக்காட்சிப் பெட்டிகளில், தொடர்களுக்கு மத்தியில், சிவப்பழகு க்ரீம்களின் விளம்பரங்கள் இதையே வலியுறுத்துகின்றன. தனது தோலின் நிறம் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு இதெல்லாம் வரப் பிரசாதம் போல் சொல்கிறார்கள். அது எப்படி ஒரே வாரத்தில், ஸ்லைட் மாற்றுவது போல மின்னுகிறார்கள் எனத் தெரிவதில்லை. அதன் பின்னர் திரும்பிப் பார்க்காத ...

தேர்வு

Image
மூன்றாவது முறையும் அட்டெம்ப்டில் தோல்வியடைந்த பக்கத்துக்கு ஊர்ப் பையனின் தற்கொலைக்குப் பின், தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமெனச் சொல்லிய அப்பாவும் அம்மாவும் 'உன்னால முடிஞ்சத படி' 'மார்க் வரலேன்னாலும் பரவால்ல' 'பெயில் ஆனாலும் கவலப்படாதே' எனச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். படம் : இணையத்தில் இருந்து . நன்றி

சிறு துளிகள் (17/02/2011)

பிரகதீஸ்வரன் முன்பெல்லாம் பள்ளிக்கூடம் மெயின் ரோட்டில் இருக்கும். சாராயக் கடை சந்து பொந்துகளில் இருக்கும். இப்போது சாராயக் கடை மெயின் ரோட்டிலும், பள்ளிக் கூடங்கள் சந்து பொந்துகளிலும் இருக்கின்றன. அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்துவது சாராயக் கடை முதலாளி. அதில் படித்துவிட்டு வேலை கேட்டுப் போனால், மறுபடியும் சாராயக் கடையில்தான் வேலை கொடுக்கிறான். ஒரு லிட்டர் சாராயம் தயாரிக்க 30 லிட்டர் தண்ணீர் தேவை. தமிழ் நாட்டில் எப்படியும் ஒரு வருஷத்துக்கு ஒரு லட்சம் கோடி லிட்டர் சாராயம் விற்கும். இதை தயாரிக்க குறைந்தது 14 டி.எம்.சி தண்ணீராவது வேணும். இவ்வளவு தண்ணீரை வைகை ஆற்றில் விட்டால் ராமநாதபுரம் பக்கம் மூணு போகம் விளையுமே? ஆனா, நம்ம ஆளுங்க அவ்வளவையும் குடிச்சுட்டு ஒண்ணுக்கு அடிச்சுட்டு வந்துடுறாங்க. அந்த ஒண்ணுக்கு அடிக்க மூணு ரூபாய் கேட்கறான். 'அரிசியே ஒரு ரூபாய்தான்'னு அவன்கிட்ட நியாயம் பேச முடியுமா?. இதைதான் மேடையில் நாடகமாகப் போடுறோம். - 'பூபாளம்' பிரகதீஸ்வரன் , சென்ற வார ஆனந்த விகடனில். (நன்றி: ஆனந்த விகடன்) அதிகாரம், பதவி ஒரு முதலமைச்சரோ அல்லது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோ, ஒரு பிரச்ச...

ஒரு படம்

Image
ஒரு படம் ஓராயிரம் செய்தி சொல்லும் என்பார்கள். எங்கள் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் இப்போதைய நிலை இது. எல்லோரும் நகரங்களை நோக்கிப் பயணிக்க, கடைசிக் காலத்தில் ஒற்றையாய் இருந்த கிழவியும் போய்சேர, மிச்சம் மீதி இருந்த ஓடுகளையும் சட்டங்களையும் விலை பேசி விட்டுப் பிரித்து விட்டனர். இன்னும் சில வருடங்களில் மொத்தமாக சாய்ந்து விடும் அல்லது இப்பொழுது சாய்ந்திருக்க கூடும். அதன் பின்னர் அங்கே மழைக்காலத்தில் புற்களும் செடிகளும் வளரக் கூடும். புதராகவும் மாறலாம். பதேர் பாஞ்சாலி இறுதிக் காட்சியில் வருவதைப் போல அங்கே பாம்புகளும் வசிக்க கூடும்.

சுவரேறிக் குதிப்பது திருடன் மட்டுமில்லை

Image
இரவு 9.40 - க்கு கோடம்பாக்கம் ரயில்வே நிலையத்தில், நிலை கொள்ளாத அவசரத்தில், நீண்டு கிடக்கும் கருந் தண்டவாளங்களில் எலெக்ட்ரிக் ரயிலின் முக வெளிச்சம் வருகிறதா என்று எட்டிப் பார்த்து நின்று கொண்டிருந்தேன். எப்போதும் இப்படி இருப்பதில்லை. எப்படியும் கால் மணி அல்லது இருபது நிமிடத்தில் ஏதாவதொரு வண்டி வந்து விடும். இன்று என்ன பிரச்சினையோ அரை மணி நேரம் ஆகியும் இன்னும் வரவில்லை. கலைந்து கிடக்கும் பயணிகள் கூட்டம் கூடி விட்டது. தொடர்ந்து செல் போனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை கணவனோ அல்லது மனைவியோ, குழந்தைகளோ, அப்பா அம்மாவோ 'இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாய்' என நச்சரித்துக் கொண்டிருக்கலாம். என்னைப் போல இவர்களும் லேட்டாகப் போனால் அவர்களது வீட்டின் கேட் திறந்திருக்குமா?. ஆனால், எங்கள் வீட்டு உரிமையாளர் கண்டிப்பாக நடையைச் சாத்தியிருப்பார். இந்த மாநகரத்துக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. ஏற்கனவே நண்பர்கள் குமார், ரமேஷ் இருந்த குரோம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில், மூன்றாவதாக நானும் சேர்ந்து கொண்டேன். நான் அங்கே பெட்டி, படுக்கையுடன் போனதும், எனது அலுவலக முகவரி, வீட்டு முகவரி, போடோவு...

யாரையோ...

"டேய் மாப்ள.. என்ன பார்த்து யார்னு கேட்டுட்டாடா" என புலம்பி கொண்டிருந்தான் ராசு ஒரு இரவு நேர பாரில். வெளியே எங்காவது போலாம் என நினைத்திருந்த போதுதான், ராசுவின் அழைப்பு மணி என் செல்போனில் ஒலித்தது. மனசு சரியில்லை என்றும், எதாவது பாருக்கு போலாம் என்றான். என்ன காரணம் எனக் கேட்க, அதெல்லாம் வந்து சொல்லுறேன், கெளம்பி வா என்றான். பாருக்கு போனதும் அவனே ஆர்டர் பண்ணினான். கொஞ்சம் உள்ளே போனதும், புலம்ப ஆரம்பித்தான். "டேய் இன்னைக்கு காலைல நதிய பாக்க போனேண்டா" நதி என்பது அவனின் காதலி நதியாவின் குறும்பெயர். "என்ன பார்த்து, யாருன்னு கேட்டுட்டாடா" என்றான். எனக்கு ஏதோ ஒரு பிரச்சினை என்று மட்டும் புரிந்தது. நடு நிசி வரையில் புலம்பி கொண்டிருந்தவன் போதையில் தூங்கிப் போனான் அன்று. அடுத்த நாள் இருவரும் போனில் கொஞ்சிக் குலவியதை நான் பார்க்க நேர்ந்தது. ஊடலும் பின்னர் காதலும் எப்பொழுதும் இனிப்பானவை தானே ?. நற்றிணை, பழந்தமிழ் இலக்கியம். அதை நேற்று படிக்க, கீழ்வரும் ஒரு பாடல் என்னைக் கவர்ந்தது; நகுகம் வாராய் பாண ! பகுவாய் அரிபெய் கிண்கிணியார்ப்பத் தெருவில் தேர்நடை பயிற்று தே...

கதையெனும் நதியில்..

Image
ஒட்டகம் : காலையில் கொஞ்சம் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றால், நேரம் கிடைக்கும்பொழுது மதிய சாப்பாடு, இரவு தாமதமானால் டேபிளுக்கு வரும் ரெண்டு தோசை, ஒரு ஆம்லெட்டை தின்று கொண்டு ஒட்டகம் போல வேலை பார்க்கும் இடம் தான் சாப்ட்வேர் துறை. மேலோட்டமாக பார்த்தால், ஏ.சி, கூட்டி போக வண்டி, கை நிறைய சம்பளம் எனத் தோன்றினாலும், அந்த வேலையால் ஏற்படும் பிரச்சினைகளை அவர்களே அறிவர். இந்த வாரம் ஆனந்த விகடனில், இரா.முருகன் அவர்களின் ஒட்டகம் என்னும் கதை, இந்த துறையைப் பற்றிய கதைதான். அறம் : ஜெயமோகன் அவர்கள் எழுதியுள்ள கதை அறம் . ஒருவன் அறம் தப்பி விட்டால், அதுவே அவனைக் கொன்று விடும் எனும் இளங்கோவின் (நான் இல்லீங்க.. சிலப்பதிகார இளங்கோவடிகள்) வார்த்தைகளைச் சொல்லி கதை நிறைவு பெறுகிறது. அந்தக் காலத்தில் பாடலைக் கேட்டு கோவில் தாழ் தானாகத் திறந்தது, பாம்பு மீண்டும் வந்து விஷத்தை திரும்ப உறிஞ்சியது போல, ஒரு கவிதையின் மூலம் அறம் திரும்ப பெறப்படுகிறது போலான கதை. பிறந்த நாள்: ஒரு வயதுக்கு மேல் நமது பிறந்த நாள் விழாக்கள் நமது மனதில் நிற்கின்றன. நினைவுகள் அறியா சிறு வயதில் கொண்டாடப்படும் பிறந்த நாளை அந்தக் குழந்தைகள் மற...