Posts

Showing posts with the label தீராநதி

பெண்ணும் எழுத்தும்

' தீராத விளையாட்டுப் பிள்ளை ' ஆர்.வி.எஸ் அவர்கள் இந்தத் தொடருக்கு என்னை அழைத்திருந்தார். முதல் முறை என்னை அழைத்து எழுதச் சொல்லியவர், இரண்டாவது முறையாகவும் என்னை அழைத்திருக்கிறார். அழைப்புக்கு நன்றி சொல்லி இதோ எழுதத் தொடங்குகிறேன். ஆதி காலத்தில் மனிதக் குழுக்களுக்கு தலைவியாக பெண்தான் இருந்திருக்கிறாள். 'வால்காவிலிருந்து கங்கை வரை ' புத்தகத்தில் இதைப் பற்றி விரிவாகக் காணலாம். தலைவியின் வழிப்படியே அந்த குழுக்கள், அவளின் பினனால் நடந்து போயிருக்கின்றன. ஆனால், பின்னால் இந்த சமூகம் அப்படியே மாறிப் போயிருக்கிறது. மாறிப் போனதன் விளைவாகவே 'தையல் சொல் கேளேல்' என்றும், 'பெண் புத்தி பின் புத்தி' என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள். ஈன்று புறம் தருதலோடு தன் கடன் முடிந்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்கள். போன வாரம் கூட கண்ணகி பிறந்த நாள் என்று கொண்டாடினார்கள். ஏன் மாதவி முன்னிறுத்தப் படுவதில்லை இங்கே? . ஏனென்றால் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், அதாவது கண்ணகி போல் இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாதவியை கெட்டவள் போல் என்...

அதனடியில் இப்போ புத்தர் சிலையும் இருக்கலாம்..

இந்த மாதம் குமுதம் தீரா நதியில் ஈழத்து எழுத்தாளர் திரு. இரவி அவர்களின் பேட்டி இடம் பெற்றுள்ளது. இவர் எழுதியுள்ள புத்தகத்தின் தலைப்பு 'காலம் ஆகி வந்த கதை'. அந்தப் பேட்டியிலிருந்து சில பத்திகள்; நாங்கள் வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்டிருந்தாலும் அப்பா படிச்சு ஆசிரியராகி தென் இலங்கையில் சிங்களர்களும், முஸ்லீம்களும் அதிகமாக வாழ்ந்த மினுவாங்கொடை கல்லுழுவ கிராமத்தில் வாழ்ந்தார்கள். அந்தக் கதைகளை நான் எப்படிச் சொல்வேன்? நான் அப்போது பிறந்திலன். என் வாழ்வுக்கு முந்தைய வாழ்வு அது. 1958 எண்டு எனக்குச் சொன்னார்கள். இக்கதைகளை ஆயிரம், ஆயிரமாய் நான் பிறந்த பிறகு அம்மாவும், அப்பவும் சொன்னார்கள். மூன்று வயதிலிருந்து அந்தக் கதைகளைக் கேட்டு வளர்ந்தேன். கல்லுலுவவில் அவர் படிப்பிக்கிறார். அப்பா அம்மாவுக்கு அழகுக் குழந்தையா அக்கா இருக்கிறா. பெரிய வால். பக்கத்துக்கு வீட்டில் உள்ள ஹாஜியார் குடும்பத்துக்கும் செல்லப்பெட்டை. இந்த மோள் எனக்குத்தான் என்று கடிச்சுக் கொஞ்சுவார். ஹாஜியார் ஆரிபும், அவர் மனைவி பாத்திமாவும் எங்கள் மீது அன்பைப் பொழிந்தனராம். கல்லுலுவவில் அப்பாவிடம் படித்தவர்கள் மாஸ்ரர் என்று அப்...

ஒப்பாரி கோச்சியும், குதிரைகள் பேச மறுக்கின்ற கதையும்

Image
கடந்த ஒன்றிரண்டு மாதங்களாகத் தான் தீராநதி இதழைப் படித்து வருகிறேன். இந்த மாத இதழில் இரண்டு சிறுகதைகள் வெளியாகி உள்ளன. ஒன்று எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் - குதிரைகள் பேச மறுக்கின்றன கதையும், மற்றொன்று மு.சிவலிங்கம் அவர்களின் - ஒப்பாரி கோச்சி சிறுகதை. இரண்டு கதைகளும் மிக அற்புதமாக வாழ்கையின் போக்கை விவரிக்கின்றன. 'குதிரைகள் பேச மறுக்கின்றன' கதையில், தன் மகன் வீட்டுக்குச் செல்லும் பெரியவர், அந்த வீட்டில் வளரும் நாயை வாக்கிங் அழைத்துப் போகிறார். திரும்பி வரும்பொழுது நாய்க்குப் பதிலாக குதிரையைக் கூட்டி வருகிறார். மகன் கேட்டதற்கு 'அந்த டிங்கி இந்தக் குதிரையாக மாறி விட்டது' என்கிறார் அப்பா. அது எப்படி நாய் குதிரையாக மாறும் என்று மகனும், மருமகளும் குழம்பிப் போகின்றனர். ஒரு நாள் அப்பா ஊருக்குக் கிளம்பிப் போய்விட, குதிரை என்ன சாப்பிடும், அதுக்கு என்ன பிடிக்கும் எனத் தெரியாமல் மகன் தடுமாறுகின்றான். திரும்ப வரும் அப்பா, அடுத்த நாள் வாக்கிங் போய்விட்டு வரும்பொழுது, குதிரையானது நாயாக மாறிவிடுகிறது. 'நாயைப் போல குதிரைகள் ஏன் குரைப்பது இல்லை, எப்போதும் அமைதியாகவே இருக்கிறது' என...