கடந்த ஒன்றிரண்டு மாதங்களாகத் தான் தீராநதி இதழைப் படித்து வருகிறேன். இந்த மாத இதழில் இரண்டு சிறுகதைகள் வெளியாகி உள்ளன. ஒன்று எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் - குதிரைகள் பேச மறுக்கின்றன கதையும், மற்றொன்று மு.சிவலிங்கம் அவர்களின் - ஒப்பாரி கோச்சி சிறுகதை. இரண்டு கதைகளும் மிக அற்புதமாக வாழ்கையின் போக்கை விவரிக்கின்றன.
'குதிரைகள் பேச மறுக்கின்றன' கதையில், தன் மகன் வீட்டுக்குச் செல்லும் பெரியவர், அந்த வீட்டில் வளரும் நாயை வாக்கிங் அழைத்துப் போகிறார். திரும்பி வரும்பொழுது நாய்க்குப் பதிலாக குதிரையைக் கூட்டி வருகிறார். மகன் கேட்டதற்கு 'அந்த டிங்கி இந்தக் குதிரையாக மாறி விட்டது' என்கிறார் அப்பா. அது எப்படி நாய் குதிரையாக மாறும் என்று மகனும், மருமகளும் குழம்பிப் போகின்றனர். ஒரு நாள் அப்பா ஊருக்குக் கிளம்பிப் போய்விட, குதிரை என்ன சாப்பிடும், அதுக்கு என்ன பிடிக்கும் எனத் தெரியாமல் மகன் தடுமாறுகின்றான். திரும்ப வரும் அப்பா, அடுத்த நாள் வாக்கிங் போய்விட்டு வரும்பொழுது, குதிரையானது நாயாக மாறிவிடுகிறது. 'நாயைப் போல குதிரைகள் ஏன் குரைப்பது இல்லை, எப்போதும் அமைதியாகவே இருக்கிறது' என மகன் நினைப்பதுடன் கதை முடிகிறது.
'ஒப்பாரி கோச்சி' கதையில் இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் சுப்பிரமணி இந்தியாவுக்கு வருவதைப் பற்றிய கதை. செல்லம்மாக்கா என்னும் ஒருவர் கதையில் "ஈந்தியா நம்ம ஊருதானே சாமி?" என கேட்கும்பொழுது, அவர்களை அகதிகள் என அடைத்து வைத்திருக்கும் நமது முகாம்கள் நினைவுக்கு வந்தன. சுப்பிரமணிக்கு இந்தியாவில் இருந்து கடிதம் எழுதும் நபர்கள் கூட "இங்க மோசம் சுப்பிரமணி.. செத்தாலும் நீ அங்கேயே இரு" எனக் கடிதம் போடுகிறார்கள். ஆனாலும் சுப்பிரமணி குடும்பத்துடன் இந்தியா புறப்பட நேர்கிறது. அவர்கள் ஏறிய 'இந்திய கோச்' தான் ஓயாத அழுகையால் "ஒப்பாரி கோச்சி" ஆகிவிட்டது. இரண்டு நாடுகளுக்கு இடையில் எச்சங்களாக இருக்கும் ஒரு சுப்பிரமணியின் கதை இது. இன்னும் தெரியாத சுப்பிரமணிகளின் கதைகள் எவ்வளவோ?.

எப்படி இவ்வளவும் படிக்க உங்களுக்கு நேரம் கிடைக்கிறது..?
ReplyDelete//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
ReplyDeleteஎப்படி இவ்வளவும் படிக்க உங்களுக்கு நேரம் கிடைக்கிறது..?
//
நேரம் எல்லாம் ஒன்றும் கிடையாது பிரகாஷ். ஒரு ஆர்வம், அவ்வளவுதான்.