ராகுல சாங்கிருத்தியாயன் அவர்கள் எழுதி, அதைத் தமிழில் கண. முத்தையா அவர்கள் மொழிபெயர்த்த 'வால்காவிலிருந்து கங்கை வரை' புத்தகத்தின் நான் படித்த பதிப்பு இருபத்தி எட்டாம் பதிப்பு. மனித வரலாற்றை சிறு சிறு கதைகள் மூலம் அற்புதமாக விவரிக்கும் நூல்.
கி.மு. வில் ஆரம்பித்து இந்திய சுதந்திரப் போராட்ட காலம் வரை நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறது இந்தப் புத்தகம்.
அதிலும் எனக்கு ஒரு மிகப் பெரிய ஆச்சரியம், ஆதி காலத்தில் மனிதக் குழுவுக்கு தலைவியாக பெண்தான் இருந்திருக்கிறாள் என்பது. தாயின் வழிகாட்டலில்தான் ஒரு குழுவே பினனால் நடந்து போயிருக்கிறது. அப்படிப்பட்ட பெண்களின் நிலைமை ஒடுக்கப்பட்டு, கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறும் பிற்காலப் பழக்கமும் வந்து போகிறது நாவலில்.
கல்லால் செய்யப்பட்ட ஆயுதங்கள் மறைந்து, இரும்பாலும் செம்பாலும் செய்யப்பட்ட கருவிகள், புதிய வகைத் துணிகள் எனப் பல பொருட்கள் தோன்றிய கால கட்டங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறது புத்தகம்.
எந்தச் சமரசமும் செய்து கொள்ளாமல் எல்லாவற்றையும் அலசிப் பார்த்துள்ளார் ராகுல்ஜி. நமது வேதங்கள், உணவுப் பழக்க வழக்கம் (முக்கியமாக மாட்டு இறைச்சி), ஆதி காலத்தில் தலைவியான தாயைப் பற்றிய கருத்துக்கள், காந்தி அம்பேத்கார் ஆகியோரைப் பற்றி என நிறைய.
அப்பாவின் தாத்தாவுடைய தாத்தா யாரென்று யாருக்கேனும் தெரியுமா ?. நம் மூதாதையர்கள் எங்கேயோ பிறந்திருக்கலாம். ஏன் தேசம் விட்டு வந்தவர்களாக கூட இருக்கக் கூடும். யாருக்குத் தெரியும். இடம் மாறி, தொழில் மாறி இன்று ஒரு நான்கு அல்லது ஐந்து தலைமுறைகளின் பெயர்கள் நினைவுக்கு வரக் கூடும். நம் தலைமுறைகளின் வரலாறு நம்முடைய ஜீன்களில் இருக்கிறது.
மனிதனின் முழு வரலாறு தெரியாவிட்டாலும் நாம் கொஞ்சம் அறிந்துகொள்ள இந்த புத்தகம் பெரிதும் உதவும்.
வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன்
வெளியீடு: தமிழ்ப் புத்தகாலயம்
தமிழில் : கண. முத்தையா

அருமை நண்பா இளங்கோ, அறியாத செய்திகள் அறிந்தேன் நன்றி தொடருங்கள் உங்கள் சேவையை
ReplyDeleteசசிகுமார், தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் என் நன்றிகள்.
ReplyDeleteநல்ல பகிர்வுக்கு நன்றி
ReplyDelete//பிரியமுடன் பிரபு said...
ReplyDeleteநல்ல பகிர்வுக்கு நன்றி
//
நன்றி நண்பரே.