Posts

Showing posts with the label சிறுகதைகள்

ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ் - அஜிதன்

Image
இந்தச் சிறுகதை தொகுப்பைப் பற்றி அஜிதன் இப்படிச் சொல்கிறார்: "இருண்மையின் ஆன்மிகம் என இவற்றை வகுக்கலாம். எல்லா தீவிர நிலைகளிலும் குடிகொள்ளும் நம்மை மீறிய ஓர் இருப்பு உண்டு. இக்கதைகள் அதன் மெல்லிய தரிசனத்தை வெவ்வேறு தளங்களில் காட்டிச்செல்பவை."  இந்த எல்லாக் கதைகளிலும் அஜிதன் சொன்னது போல ஒரு தரிசனம் என்பது போல முடிகிறது. அது இழப்பு என ஒரு சிலருக்கு தோன்றினாலும், இன்னொருவருக்கு அதுவே வெற்றியாகவும் சென்றடையக் கூடிய ஒரு இடத்தைக் கண்டறிந்ததின் மகிழ்ச்சியையும் நாம் இந்த கதைகளில் காண முடியும்.  மாரிட்ஜான் உடல்  ஜோக்ஜகார்த்தா நகரத்தின் அருகில் இருக்கும் மெராப்பி எரிமலை இருக்கிறது. இந்த எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடித்து கிளம்பி சாம்பலை அள்ளி வீசக்கூடியது. இந்த சாம்பல் விவசாய நிலங்களுக்கு உரமாக பயன்பட்டு நல்ல விளைச்சல் கொடுக்கக்கூடியது. இந்த எரிமலைக்கு அருகில் மாரிட்ஜான் என்னும் மக்களின் தலைவர் வசித்து வருகிறார். வயதான அவர், முன்பும் ஒருமுறை எரிமலை வெடித்தபோது சிறிய காயங்களுடன் தப்பிவிட்டவர். இந்த முறை எரிமலை வெடிக்க துவங்குவதை அறிந்து அரசாங்கம் எல்லோரையும் பத்திரமாக மலையை விட்ட...

படையல் - ஜெயமோகன்

Image
மதுரையை நாயக்க மன்னர்கள் ஆண்ட காலத்தை களமாக வைத்து ஜெயமோகன் எழுதிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு படையல். மராட்டியர்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் என தொடர்ந்து படையெடுப்பு நடத்திய காலம். நாயக்கர் ஆட்சி சிறப்பாக நடந்தாலும் தொடர்ந்த போரின் விளைவாக அதிகாரத்தை கைப்பற்ற போராட்டம், அதிக  வரி என மக்கள் சந்திக்கும் இன்னல்கள் அதிகம். இந்தத் தொகுப்பில் ஜெயமோகன் ஆறு கதைகளை எழுதியுள்ளார்.  கந்தர்வன்  மழை இல்லாமல் விளைச்சல் இல்லாமல் இருக்கிறது. ஆனால் அரசோ வரியை அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறது. விளைச்சல் இல்லாத காலத்தில் வரியை எப்படி கொடுப்பது எனத் தெரியாமல் மக்கள் திணறுகிறார்கள். மன்னனிடம் சொல்லலாம் என்றால் சுத்தியிருந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் மன்னன் அருகில் நெருங்க விடவே இல்லை. ஓலை கொண்டு செல்லும் நபர்களைத் தண்டித்தும், சில ஆட்களை கொன்றும் விடுகிறார்கள்.  மிகுந்த பக்தியுள்ள நாயக்க மன்னன் நல்லவன் தான். குறைகளை சொன்னால் வரியைக் குறைப்பான். ஆனால் அவனைச் சந்திக்க சுற்றி இருப்பவர்கள் விடுவதில்லை. எனவே ஊர்த் தலைவர்கள் சேர்ந்து மன்னன் முன்னால் யாராவது கையில் ஓ...