Posts

Showing posts from April, 2022

நீர்வழிப் படூஉம் - தேவிபாரதி

Image
சின்ன ஒரு கிராமமாக இருந்தாலும் அங்கே கண்டிப்பாக, நல்லது கெட்டதுகளுக்கு உதவ, அந்நிகழ்வுகளை நடத்தி வைக்க நாவிதரும், வண்ணாரும் இருப்பார்கள். அப்படிப்பட்ட குடிநாவிதராக இருப்பவர் இந்நாவலில் வரும் காரு மாமா. ஆறுமுகம் என்ற இயற்பெயர் ஆரானாகி, பின்னர் காரானாக மாறிவிட்டது.  தன் மூத்த சகோதரியுடன் வாழ்ந்து வருகிறார் காரு மாமா. அவரின் மனைவி ராசம்மா, இரண்டு குழந்தைகளை கூட்டிக் கொண்டு இன்னொருவருடன் போய்விடுகிறார். ராசம்மாவையும்  குழந்தைகளையும் கண்டுபிடிக்க முடிவதில்லை. அதன் பின்னர் அவருக்கு வலிப்பு நோய் வந்து சுகமில்லாமல் போய்விடுகிறார். கொஞ்ச வருடங்கள் கழித்து அவர் இறந்தும் போகிறார். அவரின் இளைய சகோதரி முத்துவின் மகனான ராசனின் நினைவுகளில் காரு மாமாவைப் பற்றிய நினைவுகளாக நாவலில் விரிகிறது.  பாசமலர் படம் வந்த காலத்தில் ஒவ்வொரு வீட்டில் இருந்த அண்ணனும் தங்கையும் தங்களை அந்த பாத்திரங்களாகவே நினைத்துக் கொண்டு ஏங்கிய காலம் அது. பட்ட கதைகளும், படாத கதைகளும் நிரம்பிய காலம். பட்ட கதை என்பது தங்கள் வாழ்வில் துன்பப்பட்டு, துயரப்பட்டு, சில சமயங்களில் சந்தோசத்துடனும் வாழ்ந்...