Monday, May 5, 2025
போரும் அமைதியும் (War And Peace) - லியோ டால்ஸ்டாய்
Tuesday, November 19, 2024
கோரா - இரவீந்திரநாத் தாகூர்
சிப்பாய் கலகத்தின் போது இறந்த ஐரிஷ் பெற்றோரின் ஆண் குழந்தையை தம்பதிகளான கிருஷ்ணதயாளும், ஆனந்தமாயியும் எடுத்து வளர்க்கிறார்கள். குழந்தை இல்லாத காரணத்தால் அவனை வளர்த்து கோர்மோகன் பாபு என்ற பெயரும் வைக்கிறார்கள். சுருக்கமாக கோரா. பிராமண குடும்பம் என்பதால் முதலில் எந்த ஆச்சாரமும் பார்க்காத கிருஷ்ணதயாள் கோரா வளர வளர எல்லாச் சடங்குகளையும் கடைபிடிக்கிறார். ஆனந்தமாயி அதற்கு எதிராக எல்லாச் சடங்குகளையும் விட்டுவிட்டு, மனிதர்களே முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார்.
தமிழில்: கா.செல்லப்பன்
Monday, October 28, 2024
ஒரு குடும்பம் சிதைகிறது - எஸ்.எல். பைரப்பா
தொடர்ந்து வரும் இழப்புகளும், உறவுகளின் பிரச்சினைகளும், சகிக்க முடியா வறுமையுமே வாழ்க்கை என்று ஒரு சிலருக்கு அமையுமென்றால் அப்படிப்பட்ட வாழ்க்கையின் பொருள்தான் என்ன, அவர்களுக்கு மகிழ்ச்சி என்பதே இந்த பூமியில் கிடைக்காத ஒன்றா என்ற கேள்வியில் இந்த நாவல் அமைகிறது. அதன் விடை இந்த நாவலிலும் இல்லை, நாமும் தேடினால் கண்டறிய முடியாத ஒன்று அது.
தாய் கங்கம்மாவுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். பிராமண குடும்பம். அவளின் கணவர் ராமண்ணா ஊரில் கணக்குப்பிள்ளையாக இருந்து இறந்துவிட்டார். கொஞ்ச நிலமும் உண்டு. இரண்டு பிள்ளைகளும் சிறியவர்கள் என்பதால் தற்காலிகமாக அந்த வேலையை இன்னொருவர் பார்த்து வருகிறார். இரண்டு பிள்ளைகளில் மூத்தவர் சென்னிகராயன், இளைய மகன் அப்பண்ணய்யா. இருவருமே வீட்டுக்கு அடங்காத பிள்ளைகள். அதற்கு காரணம் கூட தாய் கங்கம்மா தான். எல்லோரையும் எடுத்தெறிந்து பேசும், யாரையும் மதிக்காத குணம் என அவள் ஒரு தனிப்பிறவி. எப்பொழுதும் கெட்ட வார்த்தைகள் மூலமாகவே பேசுகிறாள். புரோகிதர்கள் மற்றும் ஒருசில பெரிய மனிதர்களுக்கு அவள் பயப்படுகிறாள். ஆனால், அறிவு என்றால் என்ன விலை என்று கேட்கக்கூடிய அவள், பிள்ளைகளையும் அப்படியே வளர்த்து விட்டாள்.
Tuesday, October 15, 2024
நளபாகம் - தி. ஜானகிராமன்
காமேச்வரன் தன்னுடைய சிறு வயதிலேயே அன்னையை இழந்து, பின்னர் தந்தை கல்யாணம் செய்துகொண்ட சித்தியின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறுகிறான். ரயிலில் அவனை சந்திக்கும் வத்சன் என்பவர் அவனைக் கூட்டிச்செல்கிறார. அவருக்கு சமையல் கலை தெரியும் என்பதால் ஒரு கோவிலில் சமைக்கும் வேலை அவருக்கு. அவருடனேயே தங்கி கொள்ளும் காமேச்வரன், சமையலைக் கற்றுகொண்டு அவரையே குருவாக எண்ணிக் கொள்கிறான். அவரின் இறப்புக்கு பின்னர் அவனுடைய நினைவுகளில்
காமேச்வரன் இப்பொழுது காசி, பத்ரிநாத் எனச் செல்லும் யாத்ரிகர்களுக்கு சமை
Monday, September 23, 2024
கார்மலின் - தாமோதர் மௌசோ - தமிழில்: கவிஞர் புவியரசு
கொங்கணி நாவலான கார்மலின் கவிஞர் புவியரசு அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டது. பெற்றோரை சிறுவயதிலேயே இழந்த கார்மலின் என்ற பெண் தன்னையும், தான் பெற்ற மகளையும் இந்த நிலத்தில் காலூன்ற செய்ய சந்திக்கும் இடர்கள் பற்றிய கதை.
Monday, September 16, 2024
நிலம் எனும் நல்லாள் - சு.வேணுகோபால்
மனிதர்களுக்கு எங்கே சுற்றினாலும், எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் மனதை விட்டுப் போகாத ஒன்று. அவர்களின் சிறு வயதில் சுற்றித் திரிந்த இடங்கள், பழகிய மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என அதுவொரு திரும்பிப் போக முடியாத காலம். சொந்த ஊரின் நினைவுகள் இருந்தாலும், தம் பிள்ளைகளுக்கு அந்த பொக்கிஷங்கள் கிடைக்கவில்
விவசாயம் செய்த தனது கிராமத்தில் இருந்து மதுரைக்கு வேலைக்குப் போனவன் பழனிக்குமார். அவனுடைய மனைவி ராதாவின் ஊர் கோவை. இரண்டு ஆண் குழந்தைகளோடு அவள் கோவையில் வசிக்கிறாள். பழனி அவ்வப்பொழுது விடுமுறையில் கோவைக்கு சென்று குழந்தைகளைப் பார்த்துவிட்டு வருவான். அவனுக்கு கோவை பிடிப்பதே இல்லை. கோவையின் பேச்சு வழக்கும், கொடுக்கும் மரியாதையையும் பார்த்து அவனுக்கு கோபம் வருகிறது. ராதாவோடு அடிக்கடி சண்டையும், அவனுடைய குறைவான வருமானமும் பிரச்சினை ஆகிறது. அவள் வேலைக்குப் போய்க்கொண்டு இருப்பதால் பழனியின் சொந்த ஊருக்கு வர மறுக்கிறாள். அவனுக்கோ தனது பிள்ளைகள் கிராமத்தில் வளராமல் இந்த ஊரில் வளர்கிறார்களே என்ற கவலை.
Monday, September 9, 2024
கங்கைப் பருந்தின் சிறகுகள் - லக்ஷ்மிநந்தன் போரா
அஸ்ஸாமிய நாவலான கங்கைப் பருந்தின் சிறகுகள், நவீனத்தால் ஏற்படும் மாற்றங்களையும், ஒரு காதல் - முக்கியமாக காதலித்தவள் படும் துயரங்களையும் சொல்லும் நாவல்.
கங்கைப் பருந்தின் சிறகுகள்
லக்ஷ்மிநந்தன் போரா
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
தமிழாக்கம் - துளசி ஜெயராமன்
Tuesday, August 20, 2024
பாரீஸூக்குப் போ - ஜெயகாந்தன்
ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்வதற்கான தனி மனித சுதந்திரம், தன் சுயத்தை வெளிக்கொணர்தல் என ஐரோப்பிய சித்தாந்தத்தில் நம்பிக்கையும் கொண்டு அங்கேயே வளர்ந்த மகன் , இந்தியா வந்து தனது தந்தையிடம் சில காலம் தங்கி இருக்கும் நாட்களை அடி நாதமாக கொண்டது ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய பாரீசுக்குப் போ நாவல்.
சாரங்கன் தனது தந்தை சேஷையாவின் தொழில் நண்பருடன் சிறு வயதிலேயே இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கேயே வளரும் அவனுக்கு வயலின் இசையில் நாட்டம் ஏற்பட அதைக் கற்றுக்கொள்கிறான். இங்கிலாந்துக்கு அவனை அழைத்துச் சென்றவர் அவனுக்கு கொஞ்சம் பணத்தை வங்கியில் போட்டுவிட்டு இயற்கை எய்துகிறார். பின்னர் பாரிஸுக்கு வரும் சாரங்கன் தனது பாதை இசையே எனக் கண்டு கொண்டு அதிலேயே முழு மூச்சாக இருக்கிறான். அவனுக்கு குடியும், புகை பிடித்தல் பழக்கமும் ஏற்படுகிறது. ஒரு வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்து விவாகரத்தாகி தனியே வசிக்கிறான். இருந்த பணம் அனைத்தும் செலவாகிவிட, அன்றாடச் செலவுக்கு அவனது வயலின் துணை செய்கிறது. நாற்பது வயதான சாரங்கன் தனது குடும்பத்தைச் சந்திக்க இந்தியா வருகிறான்.
Monday, August 12, 2024
தாரா - ம.நவீன்
புத்த மதத்தில் இரக்கமும், கருணையும் கொண்ட பெண் தெய்வம் தாரா. முக்கியமாக நேபாளில் தாரா தெய்வம் ஓவியங்கள் மற்றும் சிலைகளில் வடிக்கப்படுகிறது. பல நிறங்களில் தாரா தெய்வம் வரையப்பட்டாலும், பச்சை நிறமும் கையில் நீலத் தாமரையும் கொண்ட தாராவே முதன்மையானவள்.
Friday, August 2, 2024
காட்டில் உரிமை - மகாசுவேதா தேவி
நாடு, ஊர் என்ற பிரிவினை இல்லா காலத்தில் ஒரு பழங்குடி பரந்து விரிந்த காட்டில் ஒரு முளைக் குச்சியை அடித்து, தனது எல்லையை நிறுவி அங்கே தனது குடும்பத்தை நடத்துகிறான். பின்னர் அவன் குலம் பெருக அவ்விடம் ஊராக, கிராமமாக பிரபலம் அடைகிறது. அதன் பின்னர் அரசாங்கமும், பணக்கார மனிதர்களும், வட்டிக்கு விடுபவர்களும் அவர்களின் நிலத்தை அபகரிக்கிறார்கள். தன் நிலமும், அதில் செய்த விவசாயம் மட்டுமே அறிந்த அந்தப் பழங்குடிகள் பின்
தங்கள் சுயத்தை மீட்க அதிகாரத்தின் மேல் போருக்குச் சென்ற பழங்குடிகள் பற்றிய உண்மைக் கதை காட்டில் உரிமை. நம் நாட்டை பிரிட்டிஷ் மன்னர்கள் ஆண்ட 18ம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் நிகழ்ந்தது.
Monday, July 15, 2024
நீலகண்டப் பறவையைத் தேடி - அதீன் பந்த்யோபாத்யாய - தமிழாக்கம்: சு. கிருஷ்ணமூர்த்தி
நீலகண்டப் பறவையைத் தேடி - ஒரே பாத்திரத்தையோ அல்லது அப்பாத்திரம் சம்பந்தப்பட்ட சம்பவங்களையோ மட்டும் வைத்துச் சொல்லப்படும் கதையல்ல. அது ஒரு பல்கோண ஆராய்ச்சியின் விளைவு. ரொமான்டிக் உணர்ச்சிப் பெருக்கு. குடும்பம் சீர்குலையும் பரிதாபம், பசி, பசிக்கு எதிரான போராட்டம், மதவெறி, மனித மதிப்பீடுகள் இவை எல்லாவற்றையும் காண்கிறோம்.
Friday, May 17, 2024
பருவம் - எஸ்.எல். பைரப்பா
எஸ்.எல். பைரப்பா கன்னடத்தில் எழுதிய நாவலை பாவண்ணன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நாவலின் ஆசிரியர் பைரப்பா அவர்கள், குரு தேசம், விராடம், இமயம் மற்றும் பாரதப் போர் நடந்ததாகச் சொல்லப்படும் இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தே இந்நாவலை எழுதியுள்ளார் அவர். வியாசரின் மகாபாரதம், பல அறிஞர்களின் நூல்கள் என ஆய்வு செய்து பல்லாண்டுகள் உழைத்தே பருவம் நாவலாக வெளிவந்துள்ளது என முன்னுரையில் குறிப்பிடுகிறார் பைரப்பா.
ஒவ்வொருவரின் நினைவுகள் வழியாகவே நாவலைக் கொண்டு செல்கிறார் பைரப்பா. போர் தொடங்கும்போது ஆரம்பிக்கும் இந்நாவல், அந்த நினைவுகள் மூலம் பழைய கதைகள் கூறப்படுகிறது. தெரிந்த பாரதம், கதை மாந்தர்கள் என ஏற்கனவே நாம் அறிந்த கதைதான். ஆனால் அதை இந்நாவலில் சொன்ன முறை மிகவும் வித்தியாசமானது.