Posts

Showing posts from April, 2020

மாடித் தோட்டம்

Image
இடமும் சொந்த வீடும் உள்ளவர்கள் இயன்ற அளவு கீரை, காய்கறிகள் போன்ற செடிகளை வளர்க்க வேண்டும். மாடி இருப்பவர்கள் மாடித்தோட்டம் போட முயற்சிக்கலாம். எல்லா வகையான காய்கறிகளையும் நாம் மாடியில் பயிரிட முடியும். கீரைகள் குறைந்த நாட்களில் விளைந்து பயன் தருபவை. முதன் முதலாக தோட்டம் போட முயல்பவர்கள் கீரையிலிருந்து ஆரம்பிக்கலாம். பெரும்பாலும் நாம் கடைகளில் தான் கீரை, காய்கறிகள் வாங்குகிறோம். தோட்டம் போட்டாலும் நாம் கடைக்குப் போகத்தான் வேண்டும். ஆனால், இரண்டு கொத்து கருவேப்பிலை வாங்க ஒரு  கட்டு கீரை வாங்க என அடிக்கடி போக வேண்டியதில்லை. இரண்டு கத்தரி காய்த்தாலும் அது நாம் விளைவித்தவை. எந்த மருந்தும் அடிக்காமல் வளர்ந்தது. ஆர்கானிக் என்று அங்கே இங்கே ஓடிக் கொண்டிருக்காமல் நம் வீட்டிலேயே இயற்கை உணவுகளை பெறமுடியும். முயன்று பாருங்கள்.

என் பிள்ளைகள் தமிழே படிப்பதில்லை என்று எண்ணும் பெற்றோரா நீங்கள் ?

Image
எங்கள் பிள்ளை ஹரி இப்பொழுது ஐந்தாம் வகுப்பு. கீழே உள்ள புகைப்படம் எட்டு வருடங்கள் முன்பு குழந்தையாக இருந்தபோது எடுத்தது. அவன் கையில் இருக்கும் புத்தகம் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் 'கால் முளைத்த கதைகள்'. அப்பொழுது அந்தப் புத்தகம் அவனுக்கு கதை சொல்வதற்காக நான் வாங்கியது. பலமுறை அதில் உள்ள கதைகளை அவனுக்குப் படிததுச் சொல்லியிருக்கிறோம். பின்னர் தெனாலி ராமன், பீர்பால், மற்றும் பஞ்ச தந்திரக் கதைகள் என நகைச்சுவை புத்தகங்களில் அவனுக்கு கதைகள் சொல்லி இருக்கிறோம். பள்ளி செல்லத் தொடங்கிய பின்னர் அமர் சித்திர கதைகள் வாங்கித் தர, சித்திரப் படம் அவனுக்குப் பிடித்து வாசிக்க முயற்சி செய்தான். புத்தக விழாக்களுக்கு அழைத்துச் சென்று அவனையே எடுக்கச் சொல்லி வாங்கி வந்துள்ளோம். சிறார் எழுத்தாளர்கள் யூமா வாசுகி, விழியன் போன்றோரின் புத்தகங்கள் தும்பி, றெக்கை போன்ற மாத இதழ்கள் என படிக்க ஆரம்பித்தான். இப்பொழுது ஜெயமோகனின் 'பனி மனிதன்' நாவலை நான்கே நாளில் முடித்துவிடுகிறான். இதை இங்கே சொல்லக் காரணம், படிப்படியாக அவர்களை வாசிப்புக்கு பழக்கப் படுத்த வேண்டும் என்றுதான். ஒரே நாளில் அவர்...

மய்யழிக் கரையோரம் - எம்.முகுந்தன்

Image
சுதந்திரத்துக்கு பாடுபட்டு தன் வாழ்க்கையை மறந்த ஒரு வீரனின் கதை. பிரெஞ்சு தேசத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒருபகுதி மய்யழி. கேரளாவின் மய்யழி ஆற்றங்கரையில் அமைந்தது அவ்வூர். பிரெஞ்சு தேசத்தினர் வந்து அங்கு தங்கியிருந்து ஆண்ட கதையை சொல்லத்தொடங்கும் நாவல், நாடு சுதந்திரம் பெறுவதில் முடிகிறது. வெள்ளைக்காரர்கள் என்றால் நல்லவர்கள் என்று நம்பும் ஊர் மக்கள், அவர்கள் அடித்து பிடுங்கினாலும் தலை வணங்கும் மக்கள், சாராயப் போதையில் மிதக்கும் மக்கள் என நிரம்பிய ஊர் மய்யழி. உண்மையில் இரண்டு மூன்று தலைமுறைகளாக அங்கேயே தங்கியிருக்கும் வெள்ளைக்காரர்கள் மய்யழியையே சொந்த ஊராக நினைத்து வாழ்ந்து வருகிறார்கள். சிலர் மய்யழி மக்களுடன் நண்பர்களாக பழகி, ஒருவருக்கொருவர் உறவினர் போல மாறிவிடுகிறார்கள்.  மய்யழியில் உள்ள நீதிமன்றத்தில் பணிபுரியும் தந்தைக்கு மகன் தாசன். தாசன் படித்து நல்ல வேலைக்குச் சென்றால்தான் குடும்பம் நிமிரமுடியும் என்ற நிலை. நன்றாக படிப்பதால் அவன் பள்ளி ஆசிரியர் அவனுக்கு நிறைய சொல்லித்தருகிறார். ஆசிரியருக்கு இந்த மய்யழி சீக்கிரம் விடுதலை பெறவேண்டும் என நினைக்கிறார். ஆனால் அவரின் உடல்நிலை...