Posts

Showing posts from April, 2012

சித்திரை மழையில்

Image
வழக்கமாக வைகாசி பாதிக்கு மேல்தான் மழை பெய்ய ஆரம்பிக்கும். இந்த வருடம் சித்திரை மாதத்திலேயே பெய்ய தொடங்கிவிட்டது. நான்கு நாட்களாக மழையில் ஊரே பசுமை போர்த்தியது போல இருக்கிறது. வாடிகிடந்த செடி கொடிகள் எல்லாம் மழையில் தளிரத் தொடங்கியிருக்கிறது. மழையால் வெயில் ஓடிபோய் ஒளிந்து கொண்டது போல, நிலம் சில்லென்று இருக்கிறது.  வண்ணநிலவன் நாவலில் இப்படிச் சொல்கிறார்; "மழையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல தோன்றுவார்கள் மழையின்போது" -- ஆம் மழை கடவுள், மழையை நேரில் பார்க்கும்போது சில நேரங்களில் நாமும் கடவுள் தன்மை பெற்று விடலாம். மழை பெய்து ஓய்ந்த நேரம் எடுத்த படங்கள் இவை;   

மியாவ் மியாவ்

Image
எங்கிருந்தோ வந்த அந்த வெண் மியாவைப் பார்த்ததும் பையனுக்கு கொண்டாட்டம் மியாவைப் பார்த்ததும் அவனுக்கு சோறு உள்ளே சென்றது மியாவுக்கும் போடச் சொல்ல அதுவும் கொஞ்சம் பசியாறியது பின்னர் அடிக்கடி வந்து போனது இன்னும் கொஞ்ச நாள் கழித்து சின்ன மியாவுடன் வந்து வீட்டைச் சுற்றியது காருக்கடியில், மாடிப்படியில் செடிகளுக்கு அடியில் எனச் சுற்றிக்கொண்டே இருக்கிறது சின்ன மியாவ். அம்மா மியாவ் பார்த்தும் பார்க்காமலும் இருக்கிறது இப்போதெல்லாம் அவனுக்கு சோறு ஊட்டினால் மியாவுக்கும் வைக்கச் சொல்கிறான் நமக்கு பால் விலை எப்போதாவது உறுத்த அவனுக்கோ எப்போதும் மியாவின் பசியே தெரிகிறது. படம்: இணையத்தில் இருந்து : நன்றி

அது அப்படித்தான்

வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது. வெள்ளை வெளேர் என்ற சாரல். ஊரில் காணக் கிடைக்காத பனிமழை. இந்த பிரிட்டிஷ் நாட்டுக்கு வந்து நான்கைந்து மாதங்கள் ஆகி விட்டன. வாரம் முழுவதும் வேலையும், வெள்ளிக்கிழமை அன்று வெளியே செல்வதும்  கூட தங்கி இருப்பவர்களின் வழக்கம். நான் அங்கே போனதும், அவர்களுடன் செல்ல நானும் பழகிவிட்டேன். கண்டிப்பாக வெள்ளிக்கிழமை அன்று செல்வது 'பப்'(pub) ஆகத்தான் இருக்கும். முதல் நாள் சென்றபோது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. வந்தவர்களின் செல்ல நாய்களும், ஒரு சிலர் குழந்தைகளுடனும், குறை ஆடை அழகிகளும், போதை சிரிப்புகளும், இசையும், சிறு சிறு விளையாட்டுகளும் என தனி உலகமாக இருந்தது. சும்மா நின்று வேடிக்கை பார்த்தாலே நேரத்தை முழுங்கிவிடும். அடுத்த நாள் விடுமுறை என்பதால், பின்னிரவு நேரம் அறைக்கு திரும்புவதும் அடுத்த நாள் காலை பத்து மணிக்கு மேல் விழிப்பதும் பழகிப் போனது. அந்த வார வெள்ளியும் அப்படித்தான் நேரமாகவே கிளம்பி விட்டோம். ஆளுக்கொரு பியருடன் நின்றும், நடந்தும், அமர்ந்தும் பேசிக்கொண்டே அருந்தினோம். ஒரு கோப்பையை குடித்து முடிக்க ஒரு மணி நேரத்துக்கும் ம...