எங்கிருந்தோ வந்த
அந்த வெண் மியாவைப்
பார்த்ததும் பையனுக்கு கொண்டாட்டம்
மியாவைப் பார்த்ததும்
அவனுக்கு சோறு உள்ளே சென்றது
மியாவுக்கும் போடச் சொல்ல
அதுவும் கொஞ்சம் பசியாறியது
பின்னர் அடிக்கடி வந்து போனது
இன்னும் கொஞ்ச நாள் கழித்து
சின்ன மியாவுடன் வந்து
வீட்டைச் சுற்றியது
காருக்கடியில், மாடிப்படியில்
செடிகளுக்கு அடியில்
எனச் சுற்றிக்கொண்டே இருக்கிறது
சின்ன மியாவ்.
அம்மா மியாவ் பார்த்தும் பார்க்காமலும்
இருக்கிறது
இப்போதெல்லாம் அவனுக்கு
சோறு ஊட்டினால்
மியாவுக்கும் வைக்கச் சொல்கிறான்
நமக்கு பால் விலை
எப்போதாவது உறுத்த
அவனுக்கோ எப்போதும்
மியாவின் பசியே தெரிகிறது.
படம்: இணையத்தில் இருந்து : நன்றி
நேசத்தின் வெளிப்பாடு அழகு .
ReplyDelete//சசிகலா said...
ReplyDeleteநேசத்தின் வெளிப்பாடு அழகு .
//
நன்றிங்க
கவி இளங்கோ !
ReplyDelete@Thangavel Manickadevar
ReplyDelete:)
எங்கள் வீட்டில் இரண்டு மியாவ்கள் இருக்கின்றன..
ReplyDelete@சாமக்கோடங்கி
ReplyDelete:)