Posts

Showing posts from October, 2019

புத்தம் வீடு : ஹெப்சிபா ஜேசுதாசன்

எங்கள் சொந்த ஊரான நல்லகாளிபாளையத்தில் பனை மரங்கள் உண்டு. தெளுவு என்று எங்கள் ஊரில் சொல்கிற பதநீரும், நுங்கும், அதன் பின்னர் பனம்பழம், கிழங்கு என்றும் பனையோடு வாழ்ந்தவர்கள். பனங்கிழங்கைத் தோண்டி எடுத்த பின்னர் விதையை வெட்டினால் உள்ளே கெட்டியாய் தேங்காய் போல பருப்பு இருக்கும். அதையும் தின்று செரித்த நாள் அன்று. பனையேறிகள் நுங்கு வெட்டும் காலத்தில் அவர்களோடு சென்றால் இளநுங்கை எல்லாம் சீவித் தருவார்கள்.  பனையேறிகள் என்றால் அவ்வளவு ஒன்றும் வசதியானவர்கள் அல்ல அப்பொழுது. கருப்பட்டியும், நுங்கும், பனங்கிழங்கும் என வருடம் முழுவதும் பனை கொடுத்தாலும், அதை விற்று வரும் பணம் ஒரு பனையேறியின் குடும்பத்துக்கு பற்றாது. எப்படியும் நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் இருப்பார்கள். முதியவர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். இதில் புகைப்பழக்கமும் குடியும் உண்டென்றால் நித்தமும் குடும்பத்தில் சண்டையே.  ஹெப்சிபா அவர்கள் எழுதிய புத்தம் வீடு நாவலில் பனையேறும் மக்களும், சொந்த நிலமிருந்தும் வசதியில்லாத மக்களும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் . கண்...