Posts
Showing posts from April, 2010
ரெயினீஸ் ஐயர் தெரு
- Get link
- X
- Other Apps
நீங்கள் குடியிருக்கும் தெருவில் எத்தனை பேர் உங்களுக்கு பழக்கம் ?. எல்லாரிடமும் நிறைய பழக்கம் வேண்டாம் , ஒரு புன்னகையை பகிர நேரம் இருக்கிறதா ?. எதிர் வீடு மற்றும் பக்கத்து வீட்டில் உள்ளவர்களின் பெயர்கள் தெரியுமா ?. நேரம் இல்லாமை ஒரு புறம் இருந்தாலும் , நாம் அந்த காலத்தில் தாத்தா பாட்டிகள் இருந்தது போல இருக்க முடிவதில்லை . டிவி , சீரியல் என எதுவுமே இல்லாத அந்த காலத்தில் அவர்களுக்கு நேரம் போவது பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம்தான் . எங்கள் கிராமத்தில் மழை பெய்தால் வீதிக்கு புது மண் வரும் , அந்த மழை ஈரத்து மண்ணில் மெத்து மெத்தென பாதம் படிய நடப்பது ஒரு சுகம் . சிமெண்டும் , தாரும் கலந்த இந்த பெரு நகரங்களில் மழை பெய்தால் சாக்கடை மண்ணும் , பாலிதீன் பைகளும் தான் தெருவில் விரவி இருக்கின்றன . வண்ணநிலவன் அவர்கள் எழுதியுள்ள ' ரெயினீஸ் ஐயர் தெரு ' நாவலில் வரும் தெருவில் மொத்தம் ஆறே வீடுகள் தான் இருக்கின்றன . ஒவ்வொரு வீட்டிலும் வித விதமான மனிதர்கள் , அவர்களின் ஆசைகள் , ஏக்கங்கள் , நோய்கள் , துக்கங்கள் ...
தமிழரின் நிலை... - புயலிலே ஒரு தோணி
- Get link
- X
- Other Apps
ப . சிங்காரம் அவர்கள் எழுதிய " புயலிலே ஒரு தோணி " நாவலை படித்து முடித்து விட்டு , இப்பொழுது திரும்பவும் வாசிக்க தொடங்கி உள்ளேன் . நாவலில் வரும் வரிகள் அனைத்தும் ஒரு கவிதைக்கு உரிய அழகுடன் உள்ளன . இப்பொழுது நாவல் முழுவதும் நான் சொல்ல போவதில்லை . எனக்கு பிடித்த சில பத்திகளையும் , சில வரிகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் . ஓர் உரையாடலில் ; " எனது நண்பர் ஒரு கதை சொன்னார் . வீரத் தமிழினத்தின் மாட்சிமிகு நிலைமை பற்றி . நீ அதை தெரிந்து கொள்வது அவசியம் . சுருக்கமாக சொல்கிறேன் . எல்லாரும் அன்றன்று காலையில் வேலை தொடங்கும் முன் , மணியகாரனிடம் போய் ஆளுக்கு மூன்று செருப்படி வாங்கி கொள்ள வேண்டுமென்று அரசு ஆணையிட்டது . மறுநாள் கருக்கலில் ஊருக்கு ஊர் மணியக்காரன் வீட்டுக்கு முன்னே வீரத் தமிழ்க் குடிமக்கள் கூடி நின்று , ' விரசாய் அடிச்சு விடுங்கையா , வேலைக்கு போகணும் , நேரமாகுது ' என்று முறையிட்டு , முதுகை திருப்பி காட்டி கொண்டிருந்தனர் . சுணங்காமல் அலுவலை முடித்துச் செல்வதற்காக , அவரவர் சக்தி...