தாரா - ம.நவீன்
புத்த மதத்தில் இரக்கமும், கருணையும் கொண்ட பெண் தெய்வம் தாரா. முக்கியமாக நேபாளில் தாரா தெய்வம் ஓவியங்கள் மற்றும் சிலைகளில் வடிக்கப்படுகிறது. பல நிறங்களில் தாரா தெய்வம் வரையப்பட்டாலும், பச்சை நிறமும் கையில் நீலத் தாமரையும் கொண்ட தாராவே முதன்மையானவள். ஷரியா நிருத்ய என்னும் நடனம் பரதம் போன்ற ஒன்று. நேபாளில் இக்கலை கற்றுக் கொடுக்கப்படுகிறது. இக்கலையில் பிரகாசிக்க தாராவின் அருள் வேண்டும் என்று நம்பப்படுகிறது. தாராவைப் பற்றியும், ஷரியா நிருத்ய நடனம் பற்றியும் மேலும் தெரிந்துகொள்ள வல்லினம் தளத்தில் கோகிலவாணி எழுதிய பச்சை நாயகி , கடவுளும் கலையும் கட்டுரைகளைப் படிக்கலாம். தமிழ், நேபாளி என இரண்டு சமூகங்களுக்கு இடையே நடக்கும் பூசல் எவ்வாறு மற்றவர்களைப் பாதிக்கிறது எனச் சொல்லும் கதை தாரா. மலேசியாவில் இரண்டு சமூகமும் தன் வாழ்க்கையை அந்நிலத்தில் வாழ, படும் அவலங்களை பேசுகிறது இந்நாவல். முதலாளிகள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்குபவர்கள். உள்ளூர் தொழிலாளிகள் சம்பளம் கூட கேட்டு பிரச்சினை செய்தால், வெளியூரில் இருந்து குறைந்த சம்...