Posts

Showing posts with the label புயலிலே ஒரு தோணி

எல்லாம் யோசிக்கும் வேளையில்...

Image
புயலிலே ஒரு தோணி நாவலைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. எல்லாக் கதைகளையும் படமாக எடுத்து விட்டார்கள், ஒரு கதையும் கிடைப்பதில்லை எனப் பலர் சொல்லி நீங்கள் கேட்டிருக்கலாம். 1984 வருடத்தில் ந.முருகேசபாண்டியன் என்பவர் ப.சிங்காரம் அவர்களை நேர்கொண்டு பேசியுள்ளார். புயலிலே ஒரு தோணி புத்தகத்தில் இவர்களின் பேச்சு இடம் பெற்றுள்ளது. அந்தப் பேட்டியில் அவர் பேசியுள்ள சிலவற்றை இங்கே தருகிறேன்; "புயலிலே ஒரு தோணி நாவலைப் போட்டால் இன்னிக்கி யாரு காசு கொடுத்து வாங்கி படிப்பாங்க.. இங்க சீரியசாப் படிக்கிற வழக்கமே இல்லாம போச்சு. சீரியசா எழுதத்தான் எவ்வளவோ விசயமிருக்கு. இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் உலகத்தில் எங்க இருக்கு? ஆனால் போன இடத்துல என்ன இருக்குன்னு கூர்மையாப் பார்க்க மாட்டாங்க.. அப்படிப் பார்த்திருந்தாங்கன்னா இன்னக்கித் தமிழில ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்... பாருங்க புயலிலே ஒரு தோணி நாவல்ல தோணில போறதப்பத்தி ஒரு இடம் வருது. அது நாங்க யுத்த நேரத்ல இந்தோனேஷியாவாலிருந்து மலேயாவுக்கு சரக்குகளோட போனதுதான். நாவல் எழுதறப்போ தோணுன சில சந்தேகங்களைக் கூட வந்தவங்க கிட்ட கேட்டேன். ஆமா போன...

நான் மந்தையிலிருந்து விலகிப் பிரிந்தவன் !

கவிதை போல் அமைந்த வரிகள் ப . சிங்காரம் அவர்கள் எழுதியுள்ள ' புயலிலே ஒரு தோணி ' நாவலில் விரவிக் கிடக்கின்றன . வரிகளை மடக்கி அதைக் கவிதை என வாசிக்கும் சூழலில் , கவிதை போன்ற வரிகளை பத்தியாக எழுதியுள்ளார் ப . சிங்காரம் . இதோ ஒரு சில வரிகள் ; (இந்த வரிகள் நாவலில் பத்தியாகவே இருக்கிறது. புத்தகத்தின் முன் அட்டையில் இவ்வாறு அச்சிட்டுள்ளார்கள்.) காரளகப் பெண் சிகாமணியே! நான் மந்தையிலிருந்து விலகிப் பிரிந்த ஓடுகாலி. பிரிந்ததால் மந்தையின் வெறுப்புக்கும், பிரிய நேர்ந்ததால் தன் வெறுப்புக்கும் உள்ளாகி, இந்தப் பரந்த வையகத்தில் காலூன்ற இடமின்றி, ஒட்டிப்பற்ற ஈரப்பசை காணாமல் தன்னந்தனியனாய் அலைந்து திரிகிறேன்; அலைந்தலைந்தே திரிவேன்; அலைந்தலைந்து திரிந்தே அழிவேன். கன்னற்சுவை மொழி மின்னிடையாய் ! உன் திரண்டுருண்ட மார்பிலே என்னைச் சயனித்து, உன் சேலொத்த விழியிலே என்னைக் கண்ணுற்று, உன் பாலொத்த மொழியிலே என்னைச் செவியுற்று, உன்னை அறிவதால் என்னை மறக்கிறேன். ஆகவே, உன் உடலணைப்பில் இருக்குங்காறும் சங்க நிதி பதும நிதி இரண்டும் வேண்டேன் ! கங்கை வார்சடை கரந்தான் அருளும் வேண்டேன்! எனினும்...

தமிழரின் நிலை... - புயலிலே ஒரு தோணி

ப . சிங்காரம் அவர்கள் எழுதிய " புயலிலே ஒரு தோணி " நாவலை படித்து முடித்து விட்டு , இப்பொழுது திரும்பவும் வாசிக்க தொடங்கி உள்ளேன் . நாவலில் வரும் வரிகள் அனைத்தும் ஒரு கவிதைக்கு உரிய அழகுடன் உள்ளன . இப்பொழுது நாவல் முழுவதும் நான் சொல்ல போவதில்லை . எனக்கு பிடித்த சில பத்திகளையும் , சில வரிகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் . ஓர் உரையாடலில் ; " எனது நண்பர் ஒரு கதை சொன்னார் . வீரத் தமிழினத்தின் மாட்சிமிகு நிலைமை பற்றி . நீ அதை தெரிந்து கொள்வது அவசியம் . சுருக்கமாக சொல்கிறேன் . எல்லாரும் அன்றன்று காலையில் வேலை தொடங்கும் முன் , மணியகாரனிடம் போய் ஆளுக்கு மூன்று செருப்படி வாங்கி கொள்ள வேண்டுமென்று அரசு ஆணையிட்டது . மறுநாள் கருக்கலில் ஊருக்கு ஊர் மணியக்காரன் வீட்டுக்கு முன்னே வீரத் தமிழ்க் குடிமக்கள் கூடி நின்று , ' விரசாய் அடிச்சு விடுங்கையா , வேலைக்கு போகணும் , நேரமாகுது ' என்று முறையிட்டு , முதுகை திருப்பி காட்டி கொண்டிருந்தனர் . சுணங்காமல் அலுவலை முடித்துச் செல்வதற்காக , அவரவர் சக்தி...