Posts

Showing posts with the label காதல்

ஆதலினால் காதல்..

உலகம் என்ன சொல்லும் என்கிறாய் உன்னையும் என்னையும் தவிர உலகத்தில் யாருமில்லை கண்ணே ! ********************************* உனது கைப்பேசிக்கு அழைத்தால் முதலில் ஏதோ ஒரு இசை கேட்கிறது.. நீ பேச ஆரம்பித்த பின்னர்தான் மெல்லிசை கேட்கிறது.. ******************************* நீ வெட்டி விலகிச் செல்லும் போதெல்லாம் வெட்ட வெட்ட மீண்டும் தழைக்கும் தாவரமென வளர்கிறது உன்மேலான என் பிரியம் ! ********************************* தென்றலாய் நடந்தாய் மணியாய் சிரித்தாய் தண் நிலவாய்ப் பார்த்தாய் ஒரு நாள் கவிதையாய்ப் பேசியபோதுதான் நான் கவிதை கிறுக்க ஆரம்பித்தேன் ! ********************************* சுருட்டிப் போட்ட பழைய போர்வையாய் நடந்து கிடக்கிறேன் சாலைகளில் ஒரு நாளேனும் திரும்பி புன்னகை பூத்து விட்டுப் போ. அன்று முதல் நான் பறக்க ஆரம்பிப்பேன் .. ********************************* அனைவரின் காலடித் தடங்களையும் உள் வாங்கிக் கொண்டு அமைதியாக கிடக்கும் கடற்கரை ஈர மணல் போல் நீ பேசிய சொற்களை அசைபோட்டுக் கொண்டே ஆழ்ந்து கிடக்கிறேன் ! (இந்தத் தளத்தில் நான் எழுதிய பழைய கவிதைகள் ! )

காதல் செய்வீர் உலகத்தீரே ! - 4

Image
அனைவரின் காலடித் தடங்களையும் உள் வாங்கிக் கொண்டு அமைதியாக கிடக்கும் கடற்கரை ஈர மணல் போல் நீ பேசிய சொற்களை அசைபோட்டுக் கொண்டே ஆழ்ந்து கிடக்கிறேன் ! படம் : இணையத்தில் இருந்து . நன்றி

யாரையோ...

"டேய் மாப்ள.. என்ன பார்த்து யார்னு கேட்டுட்டாடா" என புலம்பி கொண்டிருந்தான் ராசு ஒரு இரவு நேர பாரில். வெளியே எங்காவது போலாம் என நினைத்திருந்த போதுதான், ராசுவின் அழைப்பு மணி என் செல்போனில் ஒலித்தது. மனசு சரியில்லை என்றும், எதாவது பாருக்கு போலாம் என்றான். என்ன காரணம் எனக் கேட்க, அதெல்லாம் வந்து சொல்லுறேன், கெளம்பி வா என்றான். பாருக்கு போனதும் அவனே ஆர்டர் பண்ணினான். கொஞ்சம் உள்ளே போனதும், புலம்ப ஆரம்பித்தான். "டேய் இன்னைக்கு காலைல நதிய பாக்க போனேண்டா" நதி என்பது அவனின் காதலி நதியாவின் குறும்பெயர். "என்ன பார்த்து, யாருன்னு கேட்டுட்டாடா" என்றான். எனக்கு ஏதோ ஒரு பிரச்சினை என்று மட்டும் புரிந்தது. நடு நிசி வரையில் புலம்பி கொண்டிருந்தவன் போதையில் தூங்கிப் போனான் அன்று. அடுத்த நாள் இருவரும் போனில் கொஞ்சிக் குலவியதை நான் பார்க்க நேர்ந்தது. ஊடலும் பின்னர் காதலும் எப்பொழுதும் இனிப்பானவை தானே ?. நற்றிணை, பழந்தமிழ் இலக்கியம். அதை நேற்று படிக்க, கீழ்வரும் ஒரு பாடல் என்னைக் கவர்ந்தது; நகுகம் வாராய் பாண ! பகுவாய் அரிபெய் கிண்கிணியார்ப்பத் தெருவில் தேர்நடை பயிற்று தே...

காதல் செய்வீர் உலகத்தீரே ! - 3

Image
அல்லும் பகலும் காதொற்றி பேசுபவர் செல்போன் காதலர் ஆவர். ====================== அள்ளித் தீராத சமுத்திரம் போல் சொல்லித் தீராதது காதல். ====================== கவிதையில் காதலைப் பகிர்ந்த தருணத்தில் புவியில் யாவும் அழகாகும். ====================== படம் : இணையத்தில் இருந்து (http://thesituationist.wordpress.com/2008/02/10/crazy-little-thing-called-love-2/) - நன்றி.

காதல் செய்வீர் உலகத்தீரே ! - 2

உனது கைப்பேசிக்கு அழைத்தால் முதலில் ஏதோ ஒரு இசை கேட்கிறது.. நீ பேச ஆரம்பித்த பின்னர்தான் மெல்லிசை கேட்கிறது.. ******************************* சுருட்டிப் போட்ட பழைய போர்வையாய் நடந்து கிடக்கிறேன் சாலைகளில் ஒரு நாளேனும் திரும்பி புன்னகை பூத்து விட்டுப் போ. அன்று முதல் நான் பறக்க ஆரம்பிப்பேன் ..

காதல் செய்வீர் உலகத்தீரே!

உலகம் என்ன சொல்லும் என்கிறாய் உன்னையும் என்னையும் தவிர உலகத்தில் யாருமில்லை கண்ணே ! ********************************* நீ வெட்டி விலகிச் செல்லும் போதெல்லாம் வெட்ட வெட்ட மீண்டும் தழைக்கும் தாவரமென வளர்கிறது உன்மேலான என் பிரியம் ! ********************************* தென்றலாய் நடந்தாய் மணியாய் சிரித்தாய் தண் நிலவாய்ப் பார்த்தாய் ஒரு நாள் கவிதையாய்ப் பேசியபோதுதான் நான் கவிதை கிறுக்க ஆரம்பித்தேன் ! *********************************