காச்சர் கோச்சர் - விவேக் ஷான்பாக்
ஒரே ஒருவரின் மாத சம்பளத்தை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் போது இருந்த மகிழ்ச்சி, ஒரு தொழில் ஆரம்பித்து பின்னர் செல்வச் செழிப்பில் வாழும்போது அந்த மகிழ்ச்சி கிடைக்காத ஒரு குடும்பத்தை பற்றிய கதை. ஆனால் அவ்வளவு எளிதாக இந்த சிறு நாவலைச் சொல்லமுடியாது. கதையில் வரும் கதை மாந்தர்களும் சாதாரணமாக சித்தரிக்கப்படவில்லை. அப்பா, அம்மா, மகன், மகள் மற்றும் சித்தப்பா என சிறிய குடும்பம். குடும்பத்தின் மூத்தவரான அப்பாவின் வருமானத்தை நம்பியே எல்லோரும் இருக்கிறார்கள். ஒருநாள் அப்பாவின் வேலை இல்லாமல் போக, சித்தப்பா தொழில் தொடங்கலாம் என்கிறார். அப்பாவின் பணியிலிருந்து வந்த சேமிப்பு பணத்தை வைத்து ஒரு மசாலா கம்பனி ஆரம்பிக்கிறார்கள். அப்பாவும், சித்தப்பாவும் தொழிலில் பங்குதாரர்கள். தொழில் நன்றாக செல்ல பணவரவும் வருகிறது. புது வீடு, பொருட்கள் என வேண்டியதை வாங்குகிறார்கள். சித்தப்பா மட்டுமே தொழிலை கவனித்து கொள்கிறார். கதையின் நாயகனான மகனும், பெண் பிள்ளையான மைதிலியும் இப்பொழுது பெரிய பிள்ளைகள். சித்தப்பா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதைப்பற்றி குடும்பத்தினர் யாரும் அவரைத்...