சாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான்
கடற்கரையோர கிராமம் தென்பத்தன். அங்கே உள்ள 'சவ்தா மன்சில்' என்னும் மாளிகையில் முஸ்தபாகண்ணு தன்னுடைய பரம்பரை கவுரவம் கொண்ட சாய்வு நாற்காலியில், அந்த வீட்டு வேலைக்காரியும் சிறு பெண்ணுமான ரைஹானத்தை ரசித்து, அவளை கல்யாணம் செய்து கொள்ள கனவு கண்டு அந்த சுகத்தில் சாய்ந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது அவரின் மனைவி மரியம் பீவி 'மதரஸா பள்ளி மீது காற்றுக்கு மரம் விழுந்து குழந்தைகள் இறந்து விட்டார்கள்' எனச் சொல்ல, முஸ்தபாவோ அதனைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் 'எனக்கு சாப்பிட என்ன இருக்கிறது, டீ குடிக்கும் நேரம் வேற ஆச்சு' என்கிறார். சவ்தா மன்சில் இல்லத்தின் காரணவர் முஸ்தபாகண்ணு. அவரின் பாட்டனாரான பவுரீன்பிள்ளை என்பவர் அப்போது மன்னராக மருமக்கள் வழி உரிமையில் இருந்த மார்த்தாண்ட வர்மாவுக்கு அணுக்கமாக இருந்தவர். மார்த்தாண்ட வர்மாவின் சிறு வயதில் மக்கள் வழி மரபு உரிமைக்காக போராடும் எட்டு வீட்டு பிள்ளைகள் என்பவர்களால் அவர் துரத்தப்பட, தென்பத்தன் ஊரில் அடைக்கலமாகும் அவரைப் பாதுகாத்து அனுப்பி வைக்கிறார் பவுரீன்பிள்ளை. பின்னர் மார்த்தாண்ட வர்மா முடிசூடிய பின்னர் அவருக்கு வேண்டிய ந...