Posts

Showing posts from February, 2012

பேச்சிலர் சமையல்: தக்காளி சாதம்

Image
நாங்கள் நண்பர்கள் சென்னையில் தங்கியிருந்த பொழுது நாங்களே சமைத்து(!) சாப்பிட்டோம். சூப்பர் என்று சொல்ல முடியாவிட்டாலும், கைக் காசையும், வயிற்றையும் பாதிக்காமல் இருந்தது. ஒரு சிலர் இந்தப் பதிவை படித்து சமைக்க கற்றுக் கொண்டால் மகிழ்ச்சியே. தேவையான பொருட்கள்:  அரிசி - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு  பெரிய வெங்க்காயம் - மூன்று  பழுத்த தக்காளி - நான்கு   மிளகாய் - நான்கு  பூண்டு, மிளகாய் - ஐந்து  சீரகம், கடுகு, கடலைப் பருப்பு - தாளிக்க  கொத்தமல்லி தழை , கறிவேப்பிலை தழை - சிறிதளவு    உப்பு, மஞ்சள் பொடி - தேவையான அளவு  குக்கர்  கரண்டி  காஸ்கட்  குக்கர் வெய்ட் (இதெல்லாம் தேவையா என்று கேட்பவர்களுக்காக, இப்படிதான் ஒருநாள் சாப்பாட்டைத் தாளித்துவிட்டு இன்னொரு நண்பனிடம் 'கொஞ்ச நேரம் கழிச்சு குக்கர் மூடிய போட்டு மூடிட்டு வெய்ட் போட்ரு' என்று சொல்லிவிட்டு வந்தோம். அரட்டை அடித்துக் கொண்டிருந்ததில்  மறந்து, அரைமணி நேரத்துக்...

சாம்பலும் பனியும் (Ashes and Snow)

Image
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தனது வலையில் சாம்பலும் பனியும் (Ashes and Snow)  என்ற இந்த ஆவணப்படத்தைப் பற்றி எழுதியிருந்தார். அதன் பிறகுதான் இந்தப் படத்தைப் பார்த்தேன். யாரும் தவற விடக் கூடாத ஆவணப்படம். ஒரு காலத்தில் மனிதனும், விலங்குகளும் ஒன்றாக காட்டில் தான் வாழ்ந்திருப்பார்கள்.  காலங்கள் மாற அவர்களுக்கு இடையிலான தூரங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஆனாலும் அவர்களுக்கு இடையிலான அந்த அன்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை நமக்கு காட்சிப்படுத்துகிறது இந்த ஆவணப் படம். சிறுத்தைப் புலியின் அருகில் அமர்ந்திருக்கும் தாத்தா மற்றும் சிறுவன், யானைகளோடு விளையாடும் பெண்கள், பறவைகளுடன் நடனமாடும் பெண்.. என ஆச்சரியத்தில் ஆழ்த்தும். மொழிகள் இல்லாமல்,  அங்கே சக உயிர் மீதான அன்பு மட்டுமே முன் நிற்கிறது. சிறுத்தை கடிக்கும் என்ற பயமில்லாமல் அமர்ந்திருக்கும் அந்தச் சிறுவனைப் போன்றவர்களே இன்னும் இந்த இயற்கையை அழியாமல் காப்பாற்றி வருகிறார்கள். அந்தச் சிறுவனுக்கு காதில் ஏதோ சொல்லிக் கொடுக்கும் அந்தத் தாத்தாவின் வயது காலங்களை தாண்டி நிற்பது போல முகத்தில் எத்தனை சுருக்கங்...

அசடன் (இடியட்)

Image
'குற்றமும் தண்டனையும்' நாவலுக்குப் பிறகு எம்.ஏ. சுசீலா அம்மா அவர்கள், பியோதர் தஸ்தாயேவ்ஸ்கியின் 'இடியட்' நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இவ்வளவு பெரிய நாவலை மொழியாக்கம் செய்த சுசீலா அம்மா அவர்களின் உழைப்புக்கு என் வணக்கங்களும் நன்றிகளும். இப்படி ஒரு நாவலைத் தமிழில் மொழியாக்கம் செய்து அதை வெளியிட்ட மதுரை பாரதி புத்தகாலயம் பதிப்பகத்துக்கும் என் நன்றிகள். (முதலில் இருப்பவர் எம்.ஏ. சுசிலா) சாலையில் செல்லும்போது முன்பின் தெரியாத ஒரு குழந்தை நமக்கு ஒரு முத்தமோ அல்லது ஒரு புன்னகையையோ  வீசிச் சென்றால், அந்த கணத்தை பதிவு செய்வதென்பது கொஞ்சம் கடினம். அது போலவே, மிகப் பெரிய படைப்பான இந்த 'அசடன்' நாவலில் நான் உணர்ந்ததை சொல்வது கொஞ்சம் கடினம். எவ்வளவு எழுதினாலும் இன்னும் போதவில்லையோ என்றுதான் தோன்றுகிறது. இருந்தாலும் நான் புரிந்து கொண்ட வரையில், இங்கே சொல்ல முயல்கிறேன். ********************************* என் பார்வையில்: 'உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என்று வள்ளலார் இறைவனை வேண்டுகிறார். உள்ளே ஒன்ற...