பேச்சிலர் சமையல்: தக்காளி சாதம்
நாங்கள் நண்பர்கள் சென்னையில் தங்கியிருந்த பொழுது நாங்களே சமைத்து(!) சாப்பிட்டோம். சூப்பர் என்று சொல்ல முடியாவிட்டாலும், கைக் காசையும், வயிற்றையும் பாதிக்காமல் இருந்தது. ஒரு சிலர் இந்தப் பதிவை படித்து சமைக்க கற்றுக் கொண்டால் மகிழ்ச்சியே. தேவையான பொருட்கள்: அரிசி - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு பெரிய வெங்க்காயம் - மூன்று பழுத்த தக்காளி - நான்கு மிளகாய் - நான்கு பூண்டு, மிளகாய் - ஐந்து சீரகம், கடுகு, கடலைப் பருப்பு - தாளிக்க கொத்தமல்லி தழை , கறிவேப்பிலை தழை - சிறிதளவு உப்பு, மஞ்சள் பொடி - தேவையான அளவு குக்கர் கரண்டி காஸ்கட் குக்கர் வெய்ட் (இதெல்லாம் தேவையா என்று கேட்பவர்களுக்காக, இப்படிதான் ஒருநாள் சாப்பாட்டைத் தாளித்துவிட்டு இன்னொரு நண்பனிடம் 'கொஞ்ச நேரம் கழிச்சு குக்கர் மூடிய போட்டு மூடிட்டு வெய்ட் போட்ரு' என்று சொல்லிவிட்டு வந்தோம். அரட்டை அடித்துக் கொண்டிருந்ததில் மறந்து, அரைமணி நேரத்துக்...