Monday, September 6, 2010
எஞ்சாத புன்னகை
எப்போதும் புன்னகைப்பாய்
என்னைப் பார்த்தால்..
ஓர் அதிகாலை
ஆரஞ்சு நிறப் பாதம் கொண்ட
பவழ மல்லிகளை நீ
பொறுக்கும் பொழுதுதான்
என் பிரியத்தை
உன்னிடம் சொல்ல நேர்ந்தது
கேட்டதும் உள்ளோடி மறைந்தாய்
உன் வீட்டினுள்.
அடுத்த மூன்று மாதத்தில்
உனக்கும் உன் முறை மாமனுக்கும்
கல்யாணம் சொர்க்கத்தில் நடப்பதாக
பெரியவர்கள் சொன்னபடி நடந்தது.
இப்பொழுதும் தெருவில்
பார்த்துக் கொள்கிறோம்
ஆனால் உன் புன்னகைதான் இல்லை..
உன்னிடத்தில் என் பிரியத்தைச்
சொல்லாமலிருந்தால்
அந்தப் புன்னகையாவது
எஞ்சியிருக்கக் கூடும்.
(புகைப்படம்: இணையத்தில் இருந்து.)
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான கவிதைகள் நண்பரே வாழ்த்துக்கள்
ReplyDelete//சசிகுமார் said... அருமையான கவிதைகள் நண்பரே வாழ்த்துக்கள்//
ReplyDeleteநன்றிகள் நண்பரே.
அடக்கடவுளே..யாரந்தப் பொண்ணு...? சொல்லவே இல்லை..
ReplyDelete@ பிரகாஷ்
ReplyDeleteஅதையெல்லாம் வெளியில் சொல்லக் கூடாது பிரகாஷ் :).
எல்லோர் மனதுக்குள்ளும் இப்படி ஒரு கவிதை நிச்சயம் இருக்கும்..என்ன! சிலருக்குத்தான் அதையெல்லாம் வார்த்தைகளில் வடிக்க வரும்..
ReplyDelete//ஷஹி said...
ReplyDeleteஎல்லோர் மனதுக்குள்ளும் இப்படி ஒரு கவிதை நிச்சயம் இருக்கும்..என்ன! சிலருக்குத்தான் அதையெல்லாம் வார்த்தைகளில் வடிக்க வரும்..
//
நன்றிகள் நண்பரே.