பெயர்க்காரணம் பற்றிய தொடரில் என்னையும் எழுத அழைத்த அண்ணன் ஆர் வி எஸ் அவர்களுக்கு எனது நன்றிகள்.

ஒரு பையனும், ஒரு பெண்ணும் ஏற்கனவே இருக்க மூன்றாவதாக ஒரு பெண் பிறக்க, அப்பாவும் அம்மாவும் இதோடு போதும் என்று குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்கு பாரத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் பொழுது, 'என்ன பண்றீங்க, இன்னொரு குழந்தை பிறக்கட்டும்.. அப்புறம் பார்த்துக்கலாம்...' என அங்கே வீரம் பொங்க பேசியிருக்கிறார் எனது அம்மத்தா (அம்மாவின் அம்மா). டாக்டர் எவ்வளவோ சொல்லி பார்க்க, மறுத்து விட்டது அம்மத்தா. பின்னர் சில வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை தான் நான். நான் பிறக்கப் போவதை முன்னாடியே யூகித்து வைத்திருந்த மாதிரி, இப்போ பார்த்தாலும் அதைச் சொல்லிக் காட்டும் அம்மத்தா. அன்னைக்கு அம்மத்தா வற்புறுத்தாமல் இருந்திருந்தால், இந்த ப்ளாக், கம்மென்ட் எல்லாம் இருந்திருக்காது, அப்பாடா தப்பிசிருப்போம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் தானே? :)
என்னுடைய நட்சத்திரப் படி 'இ' வரிசையில் வரும் பெயர் தான் வைக்க வேண்டும் என முடிவாகியிருக்கிறது. வீட்டில் எல்லோருக்குமே அழகான தமிழ் பெயர்கள், கதிர்வேல், குணவதி, தமிழ்செல்வி என. அது போலவே எனக்கும் 'இளையராஜா' (யாருப்பா.. அங்க சிரிக்கறது.. சிரிக்கப்படாது.. இது வரலாறு !!) என முதலில் வைத்திருக்கிறார்கள். அப்புறம் அது நன்றாக இல்லை என்று 'இளங்கோ' என்று ஆக்கி விட்டார்கள். இப்படிதான் எனக்கும் ஒரு நாமம் சூட்டப் பட்டது.
எங்கள் ஊரில் ஒரு சிலருக்கு 'இ' வராது போல, 'என்ன எலங்கோவா...' என்று கூப்பிடுவார்கள். இதில் இன்னொரு பாட்டிக்கு நான் 'இளங்கோவு...'. பக்கத்துக்கு வீட்டில் இருந்த இன்னொருவர் பெயரை முழுதாக மாற்றி 'என்ன கோவாலு..' என்பார். எப்படியோ ஊரில் சமாளித்து விடலாம். ஆனால் இந்தப் பள்ளியில், 'சிலப்பதிகாரம் எழுதியவர் இளங்கோவடிகள்' என்று புத்தகத்தில் இருக்கும். அந்தப் பாடம் முடிந்து கொஞ்ச நாளைக்கு 'என்ன இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதி முடிச்சுட்டியா? ' என்று கிரௌண்டில் நின்று கொண்டு கத்துவார்கள்.
ஆனால் ஒரு நிம்மதி என்னவெனில், ஏகப்பட்ட சுரேஷ்-களும், ஆனந்த்-களும், சரவணன்-களும் இருக்கும் வகுப்பறை அட்டேண்டேன்சில் எனது ஒரு பெயர் மட்டும் தனியாக இருக்கும். அபூர்வமாகவே இன்னொரு இளங்கோவை எங்காவது கிராஸ் பண்ண முடிகிறது.
இந்தப் பெயர் மட்டும் என்றில்லை. நிறையப் பட்டப் பெயர்கள் உண்டு. அதையெல்லாம் வெளியில் சொல்லக் கூடாது. இத்துடன் இந்தப் புராணத்தை நிறுத்திக் கொள்கிறேன். அண்ணன் ஆர் வி எஸ் அவர்களை போல சரளமாக என்னால் எழுத முடியவில்லை என்றாலும், அவர் என்னை மன்னிப்பாராக. :)
நானும் கொஞ்ச நண்பர்களைத் தொடர அழைக்கிறேன்;
பிரகாஷ் (சாமகோடாங்கி)
முரளி
சித்ரா
ஷஹி
மேலே உள்ள படம்: இணையத்தில் இருந்து, 'இளங்கோ' என்று தேட இது தான் கிடைத்தது :(.
நன்றி

நல்லா எழுதியிருக்கீங்க இளங்கோவு... ;-))))))))))))))
ReplyDeleteஅம்மத்தாவுக்கு நன்றிகள். ;-)
பரவால்ல இளங்கோ..நகைச்சுவை எழுத்து கூட சரளமா வருதே? அம்மத்தாவச் சொல்லனும்....எதையுமே பிளான் பண்ணாம பண்ணக்கூடாதுண்ணு அவங்களுக்கு தெரியாமப் போச்சு!
ReplyDeleteஎலங்கோன்னு கூப்பிடும்போது கடுப்பா இருக்கும்ல....எலங்கோ?
ReplyDelete:-)
நானுமா? ரைட்டு
இளங் கோ வாகவே இருக்க வாழ்த்துக்கள்,
ReplyDeleteசிம்ப்லி சூப்பரா விளக்கம் கொடுத்திட்ட நண்பா! :)
ReplyDeleteஏலே எலங்கோ .... எம் பேரை மாட்டி விட்டியாச்சாலே! ஹா,ஹா,ஹா,ஹா....
ReplyDelete@RVS
ReplyDeleteஅப்படின்னா, நல்லாத்தான் எழுதியிருக்கனா? :)
நன்றிகள் அண்ணா.
@ஷஹி
ReplyDelete/நகைச்சுவை எழுத்து கூட சரளமா வருதே?//
அப்படியா... :)
//எதையுமே பிளான் பண்ணாம பண்ணக்கூடாதுண்ணு அவங்களுக்கு தெரியாமப் போச்சு! //
நீங்க கேட்டதா அம்மத்தா கிட்ட சொல்லுறேன். :)
@முரளிகுமார் பத்மநாபன்
ReplyDeleteமுரளி நீங்களுமா.. :)
உங்களையும் எழுத அழைத்திருக்கிறேன்.. அப்போது உங்க பல பெயர்கள் தெரிய வரும் :)
@சி.கருணாகரசு
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பரே.
@Balaji saravana
ReplyDeleteநன்றிங்க பாலாஜி.
@Chitra
ReplyDeleteயான் பெற்ற இன்பம்(!!) பெறுக இவ்வையகம் :)
ஹஹா :)
நன்றிங்க
உண்மையா சொல்றேன் மிக அருமையா காமெடியா எழுதறீங்க.
ReplyDelete@கே. ஆர்.விஜயன்
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் எனது அன்பு நன்றிகள் நண்பரே.
ஆஹா இளங்கோன்னு தேடினால் கிடைச்சதுனாலே போட்டுட்டீங்களா???நானும் வைரமுத்துவைப் பற்றிக் கடைசி வரியிலாவது வரும்னு நம்பி ஏமாந்துட்டேன்!
ReplyDelete@அன்புடன் அருணா
ReplyDeleteஆமாங்க, தேடித் பார்த்ததில இது தான் கிடைச்சுது. இன்னொரு தடவை அவரப் பத்தி எழுதிரலாம். :)
நன்றிங்க
இளங்கோ.. என்னை முதன்முறையாக தொடர்பதிவு எழுத அழைத்தது நீர் தான்.. நன்றிகள்..
ReplyDeleteகண்டிப்பாக எழுதுகிறேன்..
நேற்று தான் கொதிநிலை இரண்டாம் பாகத்தை குமுறினேன்.. ஆறி விடக் கூடாது என்று பார்க்கிறேன். கொஞ்சம் பொறுத்து கட்டாயம் எழுதுகிறேன்.. வந்த வாய்ப்பை விடலாமா..??
வைரமுத்து மேல் ஒரு மரியாதை இருந்தது. ஆனால், அரசன் எவ்வளவு கீழ்த்தரமானவனாக இருந்தாலும், புகழ் பாடிப் பரிசில் பெரும் அரசவைப் புலவராகவே மாறிய இழிநிலை எண்ணி வருந்துகிறேன்.. கொஞ்சமாவது முதுகெலும்போடு இருக்கலாம். இல்லை, அரசியலையும், அவரது புலமையையும் கலக்காது இருக்கலாம். சரி அது அவரது இஷ்டம் என்றாலும் என்னுடைய அபிமானம் போய் விட்டது..
ReplyDeleteஎன்னோட அக்கா வச்ச பேருங்க மாற்றவா முடியும்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.
http://konjamvettipechu.blogspot.com/2011/03/blog-post.html
ReplyDelete..thodar padhivu:
@FOOD
ReplyDeleteஉங்களின் பாராட்டுக்கு எனது நன்றிங்க.
@சாமக்கோடங்கி
ReplyDeleteஉங்களின் கொதி நிலை இரண்டாம் பாகத்தை இன்றுதான் படித்தேன் பிரகாஷ். நீங்கள் இந்த தொடரை எழுதும்பொழுது உங்களின் புதிய பெயர்கள் வெளிவரும் என நினைக்கிறேன். :)
அப்புறம் வைரமுத்து பற்றி, எனக்கும் கொஞ்சம் பிடிப்பு இல்லை. என்ன செய்வது, அது அவரின் சொந்த விருப்பு/வெறுப்பு என்று நானும் விட்டு விட்டேன்.
@Chitra
ReplyDeleteதொடர் பதிவை படிச்சனுங்க.. நல்லா இருக்குங்க.. :)
நன்றிங்க
@♔ம.தி.சுதா♔
ReplyDeleteஅன்புச் சகோதரரே, வைத்த பெயரை மாற்ற முடியாது தான், இருந்தாலும் பெயரின் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்... :)
நன்றிகள் சகோ
இளங்கோ அரங்கம் என்பது கூட நன்றாகவே இருக்கிறது.
ReplyDelete@பாரத்... பாரதி...
ReplyDeleteநன்றிகள் நண்பரே..