திரு. கதிர் அவர்களின் வலைப்பக்கத்தில், மரங்களின் தந்தை திரு. அய்யாசாமி அவர்களைப் பற்றி எழுதி இருந்தார். நண்பனும் நானும் அவரைச் சந்திக்க சென்றிருந்ததைப் பற்றி இந்தப் பதிவில் மரங்களின் தந்தை - திரு.அய்யாசாமி எழுதி இருந்தேன்.
இன்று அவர் நம்மிடம் இல்லாமலாயிருக்கிறார். அவரின் குடும்பத்துக்கு எங்கள் விழுதுகளின் ஆழந்த இரங்கல்கள்.
(அவர் வளர்த்த மரங்கள் சாலை ஓரத்தில்)
மூவாயிரம் மரங்களுக்கு மேல் தனி மனிதராக வளர்த்திருக்கிறார். சாலைகளிலும், காடுகளிலும் மரங்களை அழித்து மொட்டை அடித்து வரும் சூழலில் மர வளர்ப்பு என்பது எவ்வளவு அரிதான சேவை. அதிலும் எந்த பிரதிபலனும் பாராமல்.
மேலே குறிப்பிட்ட பதிவில் நான் இறுதியில் இப்படி கூறி இருந்தேன்;
அவர் கொடுத்த விருட்சங்களின் விதைகள் என் கால் சட்டைப் பையில் கனமில்லாமல் இருந்தன. எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் திரு.அய்யாசாமி அவர்கள் பிரதி பலன் பார்க்காமல் மரங்களை நட்டு வளர்த்துள்ளார். அவர் கொடுத்த இந்த விதைகள் பல்கிப் பெருகி இந்த பூமியெங்கும் பசுமையாய் ஆகட்டும். ஆம், சில நேரங்களில் கனவுகளும் பலிக்கும். விண்ணை நோக்கி வளரும் விருட்சங்களின் விதைகள் என் கையில். சிறு விதைகளில் இருந்து தானே உலகின் அனைத்து மாற்றங்களும் நடக்கின்றன.

அவர் அவ்வளவு மரங்களைப் பாதுகாத்து வளர்த்தெடுத்து மறைந்திருக்கும் பொழுது, ஒரு மரமாவது நாம் வளர்ப்பதுதான் அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் .

அவர் வளர்த்த மரங்களின் இலைகள் பேசும் பாஷையில் அவர் இன்னும் வெகு காலம் வாழ்வார் என்பது உண்மையே.
ReplyDeleteஅன்னாருக்கு எம் வந்தனங்கள்..
பிரதிபலன் பாராமல் சமூகத்திற்காய் பயன் தர உழைத்த அந்த மனிதருக்கு என் அஞ்சலிகள்!
ReplyDeleteரொம்பவும் வருத்தமா இருக்கு இளங்கோ...குரானில் ஒரு வசனம் வரும்.."இறைவனுக்கு உவப்பானவர்கள், சுவர்கத்தில் குளுமையான நிழல் தரும் மரங்களின் கீழே அமர்ந்திருப்பார்கள்..அவர்களுக்குக் கீழே மிக இனிப்பான நீர் கொண்ட ஆறுகள் ஓடும்" என்ற பொருள் தரும் விதமாக. உலக மக்களுக்கு எல்லாம் நிழலும், நீரும் தரும் பல்லாயிரம் மரங்கள் நட்ட ஐய்யா அவர்கள் சுவர்கவாசியாகத் தான் இருப்பார்..
ReplyDeleteமரங்கள் மட்டும் அல்ல.. நாங்களும் எப்பொழுதும் உங்களை நன்றியுடன் பார்ப்போம்..
ReplyDeleteநன்றிகள்..
தொல்லுலகில் நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை.
ReplyDeleteஇது போன்ற நல்லவர்கள் இறந்தாலும், அவர் பொருட்டு அவர் வைத்த மரங்கள் எல்லோர்க்கும் மழை பெய்விக்கும்..
அவர் அவ்வளவு மரங்களைப் பாதுகாத்து வளர்த்தெடுத்து மறைந்திருக்கும் பொழுது, ஒரு மரமாவது நாம் வளர்ப்பதுதான் அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் .
ReplyDelete.... absolutely ...I agree with you. May his soul rest in peace.
மனமார்ந்த அஞ்சலி.
ReplyDeleteமரம் மற்றும் மனிதம் வளர்ப்போம் ...
ReplyDeleteஅவர்களின் அன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
கடைசி வரிகள் மிக உண்மை
ReplyDeleteஇளங்கோ, இதுக்கு முன்னாடி நீங்க போய் அவரை பார்த்து வந்ததை நான் படிக்கலை, இப்போதான் பார்க்கிறேன். நான் ஓரிரு வாரங்களில் போகலாமென இருக்கிறேன், போகும்போது கூப்பிடுகிறேன். முடிஞ்சா வாங்க....
ReplyDelete//அவர் அவ்வளவு மரங்களைப் பாதுகாத்து வளர்த்தெடுத்து மறைந்திருக்கும் பொழுது, ஒரு மரமாவது நாம் வளர்ப்பதுதான் அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் .//
ReplyDeleteஉண்மை..
அவருக்கு எனது அஞ்சலிகள்..
@பாரத்... பாரதி...
ReplyDeleteநன்றிகள் நண்பரே
@Balaji சரவணா
நன்றிங்க பாலாஜி
@ஷஹி
ReplyDeleteகுரானின் வார்த்தைகளை பகிர்ந்து, வருத்தத்தைப் பதிவு செய்ததற்கு நன்றிங்க.
@சாமக்கோடங்கி
ReplyDelete//தொல்லுலகில் நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை.//
ஆம் பிரகாஷ்...
நன்றிங்க
@சித்ரா
நன்றிங்க
@Rathnavel
ReplyDelete@நாகராஜ்
@மோகன் குமார்
நன்றிகள் நண்பர்களே
@முரளிகுமார் பத்மநாபன்
ReplyDeleteசொல்லுங்க முரளி, கண்டிப்பா வருகிறேன்.
@இந்திரா
ReplyDeleteநன்றிங்க
@FOOD
//நிச்சயமாக! ஒரு மரம் வைத்துவிட்டு கூறுகிறேன்.//
உங்களின் நல்ல மனதுக்கு என்னுடைய நன்றிகள்.
மரங்கள் வளர்ந்த விதத்தில் அய்யா போன்ற மனிதர்களும் வளர வேண்டும்.
ReplyDeleteமரம் வளர்த்த மாமனிதனுக்கு மனமார்ந்த நன்றிகள்.. ;-)))
ReplyDeleteநல்ல பகிர்வு இளங்கோ. ;-))
@"குறட்டை " புலி
ReplyDelete@RVS
நன்றிங்க
ஹீரோன்னா இவருதான்யா ரியல் ஹீரோ....
ReplyDeleteஅவருக்கு ஒரு ராயல் சல்யூட் நாஞ்சில் மனோ சார்பாக....
அவருடைய குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்....
@MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteநன்றிங்க