Wednesday, February 2, 2011

கதையெனும் நதியில்..

ஒட்டகம்:காலையில் கொஞ்சம் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றால், நேரம் கிடைக்கும்பொழுது மதிய சாப்பாடு, இரவு தாமதமானால் டேபிளுக்கு வரும் ரெண்டு தோசை, ஒரு ஆம்லெட்டை தின்று கொண்டு ஒட்டகம் போல வேலை பார்க்கும் இடம் தான் சாப்ட்வேர் துறை. மேலோட்டமாக பார்த்தால், ஏ.சி, கூட்டி போக வண்டி, கை நிறைய சம்பளம் எனத் தோன்றினாலும், அந்த வேலையால் ஏற்படும் பிரச்சினைகளை அவர்களே அறிவர்.

இந்த வாரம் ஆனந்த விகடனில், இரா.முருகன் அவர்களின் ஒட்டகம் என்னும் கதை, இந்த துறையைப் பற்றிய கதைதான்.

அறம்:

ஜெயமோகன் அவர்கள் எழுதியுள்ள கதை அறம். ஒருவன் அறம் தப்பி விட்டால், அதுவே அவனைக் கொன்று விடும் எனும் இளங்கோவின் (நான் இல்லீங்க.. சிலப்பதிகார இளங்கோவடிகள்) வார்த்தைகளைச் சொல்லி கதை நிறைவு பெறுகிறது.

அந்தக் காலத்தில் பாடலைக் கேட்டு கோவில் தாழ் தானாகத் திறந்தது, பாம்பு மீண்டும் வந்து விஷத்தை திரும்ப உறிஞ்சியது போல, ஒரு கவிதையின் மூலம் அறம் திரும்ப பெறப்படுகிறது போலான கதை.

பிறந்த நாள்:

ஒரு வயதுக்கு மேல் நமது பிறந்த நாள் விழாக்கள் நமது மனதில் நிற்கின்றன. நினைவுகள் அறியா சிறு வயதில் கொண்டாடப்படும் பிறந்த நாளை அந்தக் குழந்தைகள் மறந்து விடும். அவர்களுக்கு அது கூட்டம் கூடும் இன்னும் ஒரு நாளே. அதைப் பற்றிய சுகா அவர்களின் நினைவுகள் தான், சொல்வனத்தில் வெளியாகியுள்ள பிறந்த நாள்.

பிறந்த நாள் என்றால் என்னவென்றே தெரியாத இன்னொரு குழந்தையின் மேல் நினைவுகளை அடுக்கி விட்டு நிறைவடைகிறது.

மூங்கில் மூச்சு:

இதுவும் ஆனந்த விகடனில் வெளிவரும், சுகா அவர்களின் தொடர். இந்த வாரம் சென்னை மாநகரில் வீடு தேடுவதில் உள்ள கஷ்டங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். சென்னையில் வீடுகள் தேடி நானும், எனது நண்பர்களும் அலைந்துள்ளோம். வீட்டுக் காரர்கள் கேட்கும் கேள்விகளை எழுதினால் ஒரு நீண்ட பதிவாக வந்து விடும். சினிமாக்காரர்கள் என்றால் வீடு தர மறுக்கும் வீட்டு உரிமையாளர்களைப் பற்றி சொல்லிச் செல்கிறார் சுகா.

முதலில் அட்வர்டைசிங் கம்பனியில் வேலை செய்வதாக கூறி வாடகைக்கு சென்றுள்ளார். ஒரு நாள் நடிகர் ஆர்யா வீட்டுக்கு வந்ததை வீட்டுக்காரரின் பெண் பார்த்து விடுகிறாள். அப்பாவிடம் அந்தப் பெண் சொல்லி விட, வீட்டுக்காரர் இவரை வரச் சொல்கிறார். இவர் வீட்டுக்காரரிடம் என்ன சமாதானம் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டு போகிறார். 'சினிமாவில் வேலை செய்வதை மறைத்து ஏன் பொய் சொன்னீர்கள்' என்று ஒரு தலைமை ஆசிரியர் போலக் கேட்டுவிட்டு, இன்னும் ஒரு கேள்வி கேட்கிறார்..."நீங்கள் சினேகாவைப் பார்த்து இருக்கீர்களா".

படம்: இணையத்தில் இருந்து.
நன்றி: சொல்வனம் மற்றும் ஆனந்த விகடன்.

22 comments:

Chitra said...

அருமையான பகிர்வுகள். நன்றிங்க.

ஜீ... said...

நல்ல சுவாரஸ்யமான பகிர்வுகள் பாஸ்! :-)

Balaji saravana said...

//சென்னையில் வீடுகள் தேடி நானும், எனது நண்பர்களும் அலைந்துள்ளோம். வீட்டுக் காரர்கள் கேட்கும் கேள்விகளை எழுதினால் ஒரு நீண்ட பதிவாக வந்து விடும்.//
ஐயோ அது மஹா கொடுமைதான்!

கா.வீரா said...

இதைப் படித்ததும் எனக்கு மன்மதன் அம்பு படத்தின் ஒரு உரையாடல் நினைவுக்கு வந்தது "அறம் பேசக்கூடாது செய்யணும் " என்பது..

நன்மை

இளங்கோ said...

@Chitra
நன்றிங்க

இளங்கோ said...

@ஜீ...
நன்றிங்க பாஸ்.

இளங்கோ said...

@Balaji saravana
அந்த பதிவை, விரைவில் எதிர் பாருங்கள்.. ஹஹ்ஹா..
பயப்படாதிங்க, இப்போதைக்கு இல்ல :) :)

இளங்கோ said...

@கா.வீரா
நன்றிங்க நண்பரே.

ஷஹி said...

படிச்சு தள்ளிட்டீங்க போல...(எழுதியும் தான்)..நல்ல பகிர்வு இளங்கோ..

பாரத்... பாரதி... said...

வணக்கங்களும்,வாக்குகளும்...

Gayathri said...

உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்ல பகிர்வுங்க.. பிறந்த நாள் பற்றி சொன்னது ரொம்ப சரி.. சின்ன வயசுல.. என்னத்த பண்ணாலும்.. மனசுல நிற்பது.. எல்லாரும் வந்து கெட்-டுகதர் பண்ணோம்-ன்னு தான்.. :)

மதுரை சரவணன் said...

ஆனந்த விகடன் பகிர்வு அருமை. அறம் கதை புதுமை . பகிர்வுக்கு நன்றி;வாழ்த்துக்கள்

RVS said...

//அவனைக் கொன்று விடும் எனும் இளங்கோவின்//
இந்த இடம் நல்லா இருந்தது....
;-)

இளங்கோ said...

@ஷஹி
சிறு கதைகள் ரொம்ப நேரம் எடுத்துக்காது நாவலைப் போல..
அதனால்தான் .. :)
நன்றிங்க...

இளங்கோ said...

@பாரத்... பாரதி...
நன்றிகள் நண்பரே..

இளங்கோ said...

@Ananthi (அன்புடன் ஆனந்தி)
நன்றிங்க..

இளங்கோ said...

@மதுரை சரவணன்

நன்றிகள் நண்பரே..
ஜெயமோகன் தளத்தில் 'சோற்றுக் கணக்கு' என்ற அடுத்த கதை வெளியாகி உள்ளது. நேரம் இருப்பின் படித்துப் பாருங்கள்.

இளங்கோ said...

@RVS
ரசித்ததற்கு நன்றிகள் RVS அண்ணா..

சாமக்கோடங்கி said...

வந்து விட்டேன் இளங்கோ.. மிக அருமையான மென்மையான பதிவுகள்.. மென்துறையில் பணிபுரிவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து நானும் எழுத வெகு நாட்களாக யோசித்து கொண்டு இருக்கிறேன்..

இளங்கோ said...

@சாமக்கோடங்கி
ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள்.. :)
எழுதுங்கள் தலைவா, நாங்கள் படிக்கிறோம்.

நன்றிகள் பிரகாஷ்.

கே. ஆர்.விஜயன் said...

நல்ல பதிவு.தொடருங்கள்.

Post a Comment