Thursday, February 17, 2011

சிறு துளிகள் (17/02/2011)

பிரகதீஸ்வரன்

முன்பெல்லாம் பள்ளிக்கூடம் மெயின் ரோட்டில் இருக்கும். சாராயக் கடை சந்து பொந்துகளில் இருக்கும். இப்போது சாராயக் கடை மெயின் ரோட்டிலும், பள்ளிக் கூடங்கள் சந்து பொந்துகளிலும் இருக்கின்றன. அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்துவது சாராயக் கடை முதலாளி. அதில் படித்துவிட்டு வேலை கேட்டுப் போனால், மறுபடியும் சாராயக் கடையில்தான் வேலை கொடுக்கிறான்.

ஒரு லிட்டர் சாராயம் தயாரிக்க 30 லிட்டர் தண்ணீர் தேவை. தமிழ் நாட்டில் எப்படியும் ஒரு வருஷத்துக்கு ஒரு லட்சம் கோடி லிட்டர் சாராயம் விற்கும். இதை தயாரிக்க குறைந்தது 14 டி.எம்.சி தண்ணீராவது வேணும். இவ்வளவு தண்ணீரை வைகை ஆற்றில் விட்டால் ராமநாதபுரம் பக்கம் மூணு போகம் விளையுமே? ஆனா, நம்ம ஆளுங்க அவ்வளவையும் குடிச்சுட்டு ஒண்ணுக்கு அடிச்சுட்டு வந்துடுறாங்க. அந்த ஒண்ணுக்கு அடிக்க மூணு ரூபாய் கேட்கறான். 'அரிசியே ஒரு ரூபாய்தான்'னு அவன்கிட்ட நியாயம் பேச முடியுமா?. இதைதான் மேடையில் நாடகமாகப் போடுறோம்.

- 'பூபாளம்' பிரகதீஸ்வரன் , சென்ற வார ஆனந்த விகடனில். (நன்றி: ஆனந்த விகடன்)

அதிகாரம், பதவி

ஒரு முதலமைச்சரோ அல்லது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோ, ஒரு பிரச்சினைக்காக அவர்களின் பதவி மற்றும் அதிகாரம் ஆகியவற்றை பயன்படுத்தி எவ்வளவோ செய்யலாம். மத்தியில் வேறு கூட்டணி ஆட்சியோ, அல்லது அந்த உறுப்பினர் எதிர் கட்சியாக இருந்தால் அரசின் கவனத்தை ஈர்க்க போராட்டம் செய்வார்கள். ஆனால், இங்கே அவர்களே ஆட்சி செய்து கொண்டு, அவர்களே உண்ணாவிரதம் இருந்துகொண்டு, அவர்களே போராட்டக் கைதும் ஆகிக் கொண்டு.... இதையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டும் இருக்கிறோம்

தமிழ் வளர்ச்சி

போன வாரத்தில் ஒருநாள் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக திருப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அரசு ஊழியர்களிடம் தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சர் யார் எனக் கேட்டிருக்கிறார் ஒரு அதிகாரி. ஒருவரும் சொல்லாமல் இருக்க, அவரே 'இந்த துறை ஏற்படுத்த பட்ட பொழுது தமிழ்குடிமகன் அமைச்சராக இருந்தார். அதன் பின்னர் தற்பொழுது நமது முதல்வரே இந்த துறைக்கும் அமைச்சர்' என்று கூறியிருக்கிறார். தமிழ் வளர்வது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், தமிழ் இனத்துக்கென்று ஒரு அமைச்சரேனும் இருக்கிறாரா? .

கல்யாண நாள்

காதலர் தினம் வேண்டும், கூடாது என்று நிறையக் கருத்துக்களை அள்ளி வீசிக் கொண்டு இருக்கிறார்கள் அல்லது காதலர்களை துன்புறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். காதல் என்பது ஏதோ வேற்று நாட்டிலிருந்து வந்தது போல பாவிக்கிறார்கள். சங்க காலத்திலிருந்து காதல் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. இங்கே காதலர்கள் என நான் சொல்வது, இனம், தகுதி, அழகு ஆகியவற்றைப் பார்க்காமல் காதலிக்கும் காதலர்கள் பற்றி. இப்படிக் காதலிக்கும் காதலர்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன். மேம்போக்காக காதலித்து கொஞ்ச காலத்தில் பிரிந்து விடும் 'அவசர மனிதர்களை' விட்டுத் தள்ளுங்கள், உண்மையான காதலர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

நிற்க. 'நானெல்லாம் காதலிக்கவில்லை, எனக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன.. எனக்கெல்லாம் எதுக்கு காதலர் தினம்' என அலுத்துக் கொள்பவரா நீங்கள்?. உங்களுக்காகவே "கல்யாண நாள்" என்று ஒரு நாள் இருக்கிறதாம். இந்த நாளைப் பற்றி பகரிந்து கொண்ட பதிவர் திருமதி.சித்ரா அவர்களுக்கு எனது நன்றிகள். அந்த பதிவு கல்யாணம்தான் கட்டிக்கிட்டு. அடுத்த வருடத்திலிருந்து கொண்டாடிடுவோமா?, இதுக்கும் யாராவது 'இது அந்நிய நாட்டின் இறக்குமதி', 'கலாச்சாரம், பண்பாடு' என்று திட்டுவார்களோ, இல்லை 'கல்யாணம் ஆன பெரியவர்கள்' என்ற மரியாதையில் விட்டு விடுவார்களோ?. பார்க்கலாம்.


20 comments:

Chitra said...

அய்...... என் பதிவு...... ரொம்ப நன்றிங்க!!!!!

Chitra said...

////பதிவர் திரு.சித்ரா ////


......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நான் பொண்ணுதாங்கோ!!!!!

பத்மநாபன் said...

நீங்கள் விழிப்புணர்வு எற்படுத்த நாடகம் போட்டு நல்ல செயல் செய்கிறீர்கள்...அரசியல்வாதிகள் தேர்தலுக்காக திடீர் நாடகம் போட்டு ஏமாற்றுகிறார்கள்..

இளங்கோ said...

@Chitra
// பதிவர் திரு.சித்ரா //

சிறிய குழப்பம் நேர்ந்து விட்டது, மன்னிக்கவும்.

ஒருவேளை இப்படி இருக்க வேண்டுமோ... ?

1 . பதிவர் சித்ரா
2 . பதிவர் திருமதி.சித்ரா

இதில் எது சரி.. ?

சொல்லுங்கள், மாற்றி விடுகிறேன்...

நன்றி :)

இளங்கோ said...

//பத்மநாபன் said...

நீங்கள் விழிப்புணர்வு எற்படுத்த நாடகம் போட்டு நல்ல செயல் செய்கிறீர்கள்...அரசியல்வாதிகள் தேர்தலுக்காக திடீர் நாடகம் போட்டு ஏமாற்றுகிறார்கள்..
//

உங்கள் பின்னூட்டம் அருமை.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் இன்னும் என்ன என்ன நாடகங்கள் ரிலீஸ் ஆகப் போகிறதோ.. ?

நன்றிகள் அண்ணா.

மோகன் குமார் said...

பதிவர் திருமதி.சித்ரா

மோகன் குமார் said...

பதிவர், திருமதி ரெண்டும் இல்லாம வெறுமனே சித்ரான்னு சொன்னா கூட கோவிச்சிக்க மாட்டாங்க. திரு சித்ரா என்றதுக்கே கோபிக்காம சிரிச்சவங்கலாச்சே :))

இளங்கோ said...

@மோகன் குமார்
மாற்றி விட்டேன். நன்றிங்க.

//பதிவர், திருமதி ரெண்டும் இல்லாம வெறுமனே சித்ரான்னு சொன்னா கூட கோவிச்சிக்க மாட்டாங்க. திரு சித்ரா என்றதுக்கே கோபிக்காம சிரிச்சவங்கலாச்சே :)) //
ஏன்னா, அவ்ளோ நல்லவங்க அவங்க :)

RVS said...

கல்யாண நாள் நாங்களும் கொண்டாடறோம்! எப்ப மூணுமுடிச்சு போட்டேனோ அன்னிக்கி! ;-)

ஜோதிஜி said...

ஏற்கனவே தொப்பி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதைப் போலவே குறிப்பிட்டு இருந்தார். இளங்கோ எழுதும்போது புறச்சூழலை கவனிப்பது ரொம்ப அவஸ்யம்.

இளங்கோ said...

@RVS
இத வருத்தத்தோட சொல்லுறீங்களா, இல்ல சந்தோசமா சொல்லுறீங்களா ?
:)

நன்றி RVS அண்ணா.

இளங்கோ said...

@ஜோதிஜி
//தொப்பி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதைப் போலவே குறிப்பிட்டு இருந்தார்//
அந்தப் பதிவின் சுட்டி இருந்தால் கொடுங்கள்.

நன்றிங்க ஜோதிஜி.

FOOD said...

நல்ல அலசல். நல்ல பதிவொன்றை பாராட்டி இருகின்றீர்கள். சித்ராவிற்கு அவர் சிரிப்புதான் பிளஸ் பாயிண்ட்.

ம.தி.சுதா said...

அருமைங்க.. அதிலும் தமிழ் வளர்ச்சி.... பற்றி நல்லா சொன்னிங்க.. ஹ..ஹ..ஹ.

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

சி.கருணாகரசு said...

திரு இளங்கோ....
உங்க கடைசி கருத்தை தவிர அனைத்டு உணர்வுள்ள கருத்தோடும் உடன்படுகிறேன்....

காலமெல்லாம் காதலோடு இருப்பவருக்கு காதலர் தினம் அவசியமா?
கதலர் தினத்தை கண்ணியமான காதலர்களா கொண்டாடுகிறார்கள்?
இதி நிறைய காம களியாட்ட்ங்கள்தான் ......

நன்றி.

சாமக்கோடங்கி said...

பிரகதீசுவரன் வரிகள் அருமை.. அடுத்த பதிவில் இதை விரிவாக எழுத எண்ணி இருந்தேன்..

இளங்கோ said...

@FOOD
நன்றிங்க.

//சிரிப்புதான் பிளஸ் பாயிண்ட்.// Yes.

இளங்கோ said...

@ம.தி.சுதா
அப்படிப்பட்ட நிலையில் தானே நாம் இருக்கிறோம் சகோதரா. நன்றி

இளங்கோ said...

@சி.கருணாகரசு
என்றும் காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு எல்லா நாளும் காதலர் தினமே.

காதலின் சிறப்பை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறும் நாளாக இந்நாள் அமையட்டும்.

//கதலர் தினத்தை கண்ணியமான காதலர்களா கொண்டாடுகிறார்கள்?
இதி நிறைய காம களியாட்ட்ங்கள்தான் ......//

என்ன செய்வது, ஒரு நன்மை என்றால் பல தீமைகள் அங்கே இருக்கிறது. :(

நன்றிங்க நண்பரே.

இளங்கோ said...

@சாமக்கோடங்கி
ஹய்யா.. நான் உங்களுக்கு முந்திக் கொண்டேன். !!
அதனால் என்ன, நீங்களும் எழுதுங்கள் பிரகாஷ்.

நன்றிங்க.

Post a Comment