Wednesday, July 14, 2010

மரங்களில்லா வாழ்வு.. ? (ஒரு கேள்விக்குறி)


நாம் இருக்கும் அலுவலகம், வீடு என எல்லாமே ஒரு காலத்தில் மரங்கள் சூழ்ந்த காடுகளாகவும், விவசாய நிலங்களாகவும் இருந்தது தான். அழிக்க மட்டும் முடிந்த நம்மால் ஒரு சிறு மரத்தை நட்டு பாதுகாக்க முடிவதில்லை.

கோவை - மேட்டுப்பாளையம் சாலை அகலப்படுத்தும் பணிக்காக, சாலையின் இருபுறமும் இருந்த புளிய மரங்கள் வெட்டப் பட்டுக் கொண்டிருக்கின்றன. மரமா, மனிதனா என்று கேட்டால் மனிதன் தான் முக்கியம் எனச் சொல்லும் மனிதர்கள் உள்ள இந்த காலத்தில் மரங்கள் அழிவதை எப்படித் தடுக்க முடியும். மரங்களைப் பற்றி யாருக்கு என்ன கவலை, எல்லாவற்றுக்கும் சட்டத்தில் வழி உண்டு.

நண்பர் திரு.பிரகாஷ் அவர்கள் தனது வலைத்தளத்தில் இது பற்றி எழுதியிருந்தார். http://saamakodangi.blogspot.com/2010/07/blog-post.html. அவருக்கு எனது நன்றிகள் பல. அந்த மரங்களுக்கு அருகில் இருந்தவன் என்பதனால் எனக்கு மிக்க வருத்தம்.

எல்லா மரங்களையும் வெட்டி விட்டு சுவாசக் காற்றுக்கு வரிசையில் நிற்க வேண்டி வந்தாலும் வரலாம். நம் சந்ததிகளுக்கு எதை கொடுக்க போகிறோம்?. வாடகைக்கு அறைகள் கட்டும் இடங்களில், கொஞ்சம் மரங்கள் வளர்க்கவும் இடம் ஒதுக்கலாம். ஓங்கி வளர்ந்த அழகு மரங்களை வளர்க்கும் நமது IT நிறுவனங்கள், கொஞ்சம் வேப்ப மரம் போன்றவற்றையும் வளர்க்கலாம்.

இந்த உலகில் இருந்து எவ்வளவோ பெற்று கொண்ட நாம் ஒரு மரத்தை நட்டு வைத்தால் என்ன நண்பர்களே..

நாளை சாலைகள் இருக்கும். அந்த மரங்கள் இருக்காது.
பூமி இருக்கும். சுவாசிக்க காற்றுதான் இருக்காது.



மரத்திற்கு;

தாய், செல்வம் என எப்படி உங்களை அழைப்பது?. தாய் என்றால், என் தாய்க்கும் முன்னால் இருந்து நீங்கள் இருந்தீர்கள். செல்வம் என்றால், உங்களை செல்வம் என எப்படி அழைப்பது, நீங்கள் கொடுத்தது கொடை அல்லவா ?. ஆகையால் நீங்கள் கடவுள்கள்.

கடவுள்களே, நாங்கள் சுவாசிக்க காற்று தந்தீர், கனி தந்தீர், நிழல் தந்தீர், மழை தந்தீர். ஆனால் நாங்களோ, உங்களுக்கு மரணத்தைப் பரிசளிக்கிறோம். எங்களை மன்னியுங்கள். இரக்கமற்ற பாவிகள் நாங்கள்.

போய் வாருங்கள் கடவுள்களே....




குறிப்பு:
எங்கள் விழுதுகள் மூலமாக இந்த வருடம் மரக் கன்றுகளை நட எண்ணியுள்ளோம்.
மேலே இருக்கும் பசுமையான படங்கள் போன வருடம், அதே சாலையில் எடுத்தவை.

4 comments:

  1. உங்களின் புது டிசைன் அருமையாக உள்ளது..

    ReplyDelete
  2. நன்றி இளங்கோ அவர்களே..

    மரங்கள் நடும்போது என்னை அழையுங்கள்.. நான் வந்து விடுகிறேன்..

    அப்புறம்.. நம்முடைய அந்த "Basic Computer Skills" மீண்டும் தூசு தட்டி எடுக்கப் பட்டு உள்ளது.. இனி 80 G தேவைப் படாது என நினைக்கிறேன்..
    நேரம் போதாமையால் யாருக்கும் அறிவிக்க முடியவில்லை. முழு அறிக்கை தயாரிக்க கொஞ்சம் அவகாசம் தேவை.. ஆனால் கண்டிப்பாக இந்த திட்டத்தை நிறைவேற்றலாம் என்று எங்கள் Operations Head அறிவித்துள்ளார்..

    ReplyDelete
  3. நன்றி பிரகாஷ்...
    மற்றவர்களைப் பற்றி கவலைப்பட கூட நேரமில்லாமல் இருப்பவர்களுக்கு மத்தியில், எங்களை நோக்கி கரம் நீட்டி கொண்டிருக்கும் உங்களுக்கு எங்களின் நன்றிகள் பல..

    ReplyDelete
  4. //பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
    உங்களின் புது டிசைன் அருமையாக உள்ளது.. //

    எல்லாம் ஒரு விளம்பரம் தான்... :)

    ReplyDelete