Friday, April 15, 2011

சார்லி சாப்ளின்

இன்று Google-ன் முதல் பக்கத்தில், சாப்ளினின் பிறந்த தினத்தை நினைவு படுத்தியிருந்தார்கள்.



அவரவர் பிரச்சினைகளில் மூழ்கி விழுந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில், நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றன கலைகள். காலங்கள் தாண்டியும் கலைகள் வாழ்வதற்கு கலைஞர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள்.

மற்றவரைச் சிரிக்க வைத்தல் என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்கு அவன் கோமாளி வேசம் உட்பட என்னென்னவோ செய்ய வேண்டியிருக்கிறது. தனது காயங்களை மறைத்து அல்லது மறந்து தான் அவர்கள் கலையை வெளிப்படுத்துகிறார்கள்.

காலங்கள் பல கடந்தும் நம்மை சிரிப்பில் ஆழ்த்தும் அந்த மகா கலைஞனை இந்நாளில் நினைவு கூறுவோம்.

அவரின் படங்களை பற்றி நான் எழுதிய பதிவுகளின் சுட்டிகள்:
சிட்டி லைட்ஸ்
சினிமா - மாடர்ன் டைம்ஸ் (Modern Times)
தி சர்க்கஸ் (The Circus)

ஒரு வீடியோ:





11 comments:

  1. He went through so much hardships in his life time. But that can never be seen in most of his movies.

    ReplyDelete
  2. சிறப்பான சாப்ளின் பதிவுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. வாழ்க்கை முழுதும் வேதனைகளுடன் ஒரு தலைமுறையின் வேதனையை மறைத்தவர் சாப்ளின்..
    பதிவிற்கு நன்றி..!

    ReplyDelete
  4. எவ்வளவு அலுப்பிலும் சார்லி சாப்ளின் படம் உற்சாகத்திடம் திருப்பிவிடும்....அவரது நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை சென்ட்ரலில் ஒரு வாரம் அவரது படங்கள் மட்டும் ..விடியோக்கள் வராத காலத்தில் சாப்ளின் கொண்டாட்டத்தை சென்ட்ரலில் கோவையே கொண்டாடியது,,,,,,

    ReplyDelete
  5. @இராஜராஜேஸ்வரி
    நன்றிங்க

    ReplyDelete
  6. @மனோவி
    ஆமாங்க, அந்தக் காயங்களையும் வலிகளையும் தாண்டி நம்மை சிரிக்க வைத்தவர் சார்லி.

    நன்றிங்க

    ReplyDelete
  7. @பத்மநாபன்
    //அவரது நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை சென்ட்ரலில் ஒரு வாரம் அவரது படங்கள் மட்டும்//

    அப்போ எல்லாம் நாங்க
    குழந்தைகளா இருந்திருப்போம் அண்ணா..

    ஒரு சில சீன்கள் போதும் நம்மை சிரிக்க வைக்க.

    நன்றிங்க அண்ணா.

    ReplyDelete
  8. துன்பங்கள் தனக்கு இருந்த போதும் அவர் சிரிக்காத நாள் இருந்திருக்காது. நல்ல பகிர்வு இளங்கோ. ;-)

    ReplyDelete
  9. @RVS said...

    //துன்பங்கள் தனக்கு இருந்த போதும் அவர் சிரிக்காத நாள் இருந்திருக்காது. நல்ல பகிர்வு இளங்கோ. ;-) //

    அவரின் எந்த படத்தைப் பார்த்தாலும் நம்மைச் சிரிக்க மனிதர் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்.

    நன்றிகள் அண்ணா.

    ReplyDelete
  10. சாப்ளின் வறுமையில் சிக்கித் தவித்தபோது பசியால் தனது ஷூவைப் பிய்த்துத் திண்றதாக எதிலோ படித்திருக்கிறேன்..
    தனது வலிகளையும் ரணங்களையும் மறைத்துக்கொண்டு நம்மைச் சிரிக்க வைத்த மனிதருக்கு ஒரு சல்யூட்..
    நல்லதொரு பதிவு.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. @இந்திரா
    தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும் எனது நன்றிகள்.
    தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete