Thursday, April 28, 2011
உறங்காத தெரு
அங்கங்கு குப்பை கிடக்கும் இந்தத் தெருவின்
காலைப் பொழுதுகளில்
அழகிய கோலங்கள், பால் வண்டிகளின் ஓசைகள்
நடை செல்வோரின் செருப்போசைகள்
வேப்ப மரக் காக்கையின் சத்தம்
வீடு திரும்பும் கூர்க்கா
என விடியும்..
அலுவலகம், பள்ளி
என சரசரக்கும் மக்கள் கிளம்பிப் போன பின்னர்
காய்கறி வண்டி, தபால் எனவும்
மாலைப் பொழுதுகளில் குழந்தைகளின் சத்தம் எனவும்
நீள்கிறது பகல்...
மெல்லிய வெளிச்சம் மட்டும் பரவிக் கிடக்கும் இரவுகளில்
நைட் ஷிப்ட் போய் வரும் ஓரிருவர்
திரும்ப வரும் கூர்க்கா
சுற்றி வரும் நாய்கள் எனவும்..
தெரு எப்போதும் உறங்குவதேயில்லை.
*************
புகைப்படம் http://www.flickr.com/photos/seeveeaar/3837563809/ இங்கிருந்து.. நன்றி.
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
அருமை அருமை
ReplyDeleteதெருவையே ஒரு ஜீவனாக
எண்ணிப்பார்க்கும் உங்கள் பார்வை புதியது
படைப்பும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
நான் கூட இன்னும் உறங்கவில்லை இளங்கோ... உறங்காத தெரு... சூப்பர். ;-))
ReplyDeleteநைட் ஷிப்ட் முடிந்து வீட்டுக்கு வருகையில் ஓலமிட்டு வயிற்றை கலக்குவதும், சில சமயம் வாலை ஆட்டிக்கொண்டு பின்னே வருவதும் எங்கள் தெரு நாய்கள்தான். பாசக்கார பயலுக!
ReplyDeleteஉறங்காத தெருவை பார்க்க வந்தேன் ...கையோடு சாப்பாடு பதிவையும் ஒரு பிடி பிடித்து விட்டேன்.. அமைதியான பெரியவரின் பொறுமையை ரசித்தேன்.....
ReplyDelete@சிநேகிதி
ReplyDeleteவிருதுக்கு நன்றிங்க.
@! சிவகுமார் !
ReplyDeleteஆமாங்க, பயமுறுத்துவதும்.. துணைக்கு வருவதும் அவர்களே..
நன்றிங்க.
@பத்மநாபன்
ReplyDeleteரசித்துப் படித்ததற்கு நன்றிகள் அண்ணா.
@FOOD
ReplyDelete//உறங்காத விழிகள் உறவுகளைத்தேடும்,
உறங்காத வீதி யாரைத்தேடும்?//
இந்த வரிகள் கூட நல்லா இருக்கே..
நன்றிங்க.
@RVS
ReplyDeleteஒருவேளை, உங்களுக்காகத்தான் இந்தக் கவிதையோ? :)
நன்றிங்க அண்ணா.
@Ramani
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.
:))))
ReplyDeleteஒற்றைச்சொல்... அருமை.... இளங்கோ..
ReplyDelete@க.பாலாசி
ReplyDeleteநன்றிங்க நண்பரே.
@"ஸஸரிரி" கிரி
ReplyDeleteநன்றிங்க