உணவகத்தில்
உண்டு முடித்ததும்
பில்லைக் கொண்டுவந்து வைத்து
பணத்துக்கு காத்திருந்தான் சர்வர்
'பணம் நானே கொடுத்துக்கிறேன்'
என எழுந்து
திரும்பி நடந்த என் முதுகில்
வழிந்து கொண்டிருக்கிறது
முன்பின் தெரியாத
அவனின் வன்மப் பார்வையும், கோபமும்.
படம்: இணையத்திலிருந்து, நன்றி.
நல்லா இருக்கே! ;-)
ReplyDeleteடிப்ஸிற்காக ஏங்கும் சர்வரின் உள்ளத்தினையும், கூடக் கிடைக்குமா? குறையப் பணம் கிடைக்குமா எனும் ஆதங்கத்தையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteநல்லாயிருக்கு இளங்கோ! :)
ReplyDeleteயதார்த்தம்!
ReplyDeleteஅவ்வளவு செலவு செய்து சாப்பிட்டு விட்டு, சிறிது டிப்ஸ் கொடுக்க கூட யோசனை செய்பவர்களை என்னவென்று சொல்வது?
ReplyDeleteசில சர்வர் நண்பர்கள் சிரித்தபடி உபசரித்து உணவு கொடுக்கும் சுவையை கூட்டிக் கொடுப்பார்கள் .. சிலர் உம்மென்று டிப்ஸில் மட்டும் குறியாய் இருப்பார்கள்... டிப்ஸ்க்கும் சேர்த்து நாம் பட்ஜெட் போட்டுவிடுவது தான் நல்லது...
ReplyDelete//Chitra said...
ReplyDeleteஅவ்வளவு செலவு செய்து சாப்பிட்டு விட்டு, சிறிது டிப்ஸ் கொடுக்க கூட யோசனை செய்பவர்களை என்னவென்று சொல்வது?
//
மேடம்.. அந்தப் பணத்தை அவர் வேற நல்ல வழிகளில் உபயோகப் படுத்துவார்.. என்னங்க இளங்கோ..??
டிப்ஸ் கொடுப்பது நல்ல விசயம் இல்ல.. கவிதை முற்றிலும் உண்மை..
ReplyDelete@RVS
ReplyDeleteபாராட்டுக்கு நன்றிகள் அண்ணா.
@நிரூபன்
ReplyDeleteநன்றிங்க நிரூபன்
@Balaji saravana
ReplyDeleteநன்றிங்க
@சென்னை பித்தன்
ReplyDeleteதங்கள் வருகைக்கு எனது நன்றிகள், தொடர்ந்து வாருங்கள்.
@Chitra
ReplyDeleteபெரும்பாலும் நாம் கொடுத்து விடுகிறோம். ஆனால் அப்படிக் கொடுப்பது அவர்களின் தன்னம்பிக்கையைக் கொஞ்சம் குறைப்பது போல் அல்லவா ஆகும்.
ஒரு வயதான சர்வருக்கு பணம் கொடுப்பதில் தவறில்லை.
நன்றிங்க
@பத்மநாபன்
ReplyDeleteநன்றிங்க அண்ணா.
@சாமக்கோடங்கி
ReplyDeleteஆமாங்க பிரகாஷ், சில ஹோடெல்களில் சம்பளத்தை குறைவாக கொடுத்து விட்டு "அதான் உனக்கு டிப்ஸ் வருதுல்ல" என்ற நிலைமை தான் உள்ளது.
ஆக, ஹோட்டல் முதலாளிகள் கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுத்தால் அவர்கள் நம்மை எதிர் பார்க்க மாட்டார்கள் அல்லவா?
நன்றிங்க பிரகாஷ்.
@பதிவுலகில் பாபு
ReplyDeleteஆமாங்க பாபு, நன்றிங்க.
@FOOD
ReplyDeleteநன்றிங்க