இரவு எட்டு மணிக்கு
மாநகரப் பேருந்துக்கு காத்துக் கொண்டிருந்த
எனை நோக்கி வந்த
ஒரு வயதான பாட்டியுடன்
கூடவே ஒரு சிறுவன்
'தம்பி' என்றார் பாட்டி
'ம்ம்' என்றேன் நான்
'தம்பி, வேல கெடைக்குமுன்னு
ஊர்ல இருந்து கெளம்பி வந்தோம்
ஒரு வாரமா வேல இல்ல
இது எம் புள்ளையோட பையன்
புள்ளைக்கு ஒடம்பு சரியில்ல
கொஞ்சம் காசு குடு சாமி'
அந்தப் பையனிடம்
'என்ன படிக்கிறே, எந்த ஊரு'
எனக் கேட்க, எல்லாவற்றுக்கும்
தலையை ஆட்டிக் கொண்டே இருந்தான்.
இருவரையும் பக்கத்தில் இருந்த
கடைக்கு கூட்டிப் போய்
என்ன வேணும் எனக் கேட்க
'ஊட்டுக்கு கட்டிட்டுப் போயிடுறோம் ' என்ற பாட்டி
சரியென்று ஆன தொகையை
கொடுத்துவிட்டு நகரும்போது
'ரொம்ப நன்றியப்பா' எனச் சொன்னார்
இரண்டு மூன்று நாள் கழித்து
இரண்டு பேருந்து நிறுத்தங்கள் தாண்டி
அதே பையனும் பாட்டியும்
இன்னொருவரிடம் கை நீட்டி
கேட்டுக் கொண்டிருந்தனர்..
இந்த பெரும் பசியை
பிச்சை எடுத்தேனும்
அடக்க வேண்டியிருக்கிறது.
படம்: இணையத்தில் இருந்து, நன்றி.
வடை எனக்கே சொல்லிபுட்டேன்...
ReplyDelete//இந்த பெரும் பசியை
ReplyDeleteபிச்சை எடுத்தேனும்
அடைக்க வேண்டியிருக்கிறது.//
மனதில் வலி ஏற்படுகிறது....
அரசியல்வாதி தின்னு கொழுத்து சொகுசாய் வாழ்கிறான் சொகுசாய் வாழவேண்டிய மக்களோ பிச்சை எடுக்கிறார்கள் ம்ஹும் வேதனை....
ReplyDeleteஇந்த பெரும் பசியை
ReplyDeleteபிச்சை எடுத்தேனும்
அடைக்க வேண்டியிருக்கிறது.
.....பசி வந்தால் பத்தும் பறந்து போகும். :-(
/இந்த பெரும் பசியை
ReplyDeleteபிச்சை எடுத்தேனும்
அடைக்க வேண்டியிருக்கிறது.//
மனதில் வலி ஏற்படுகிறது
I agree with you MANO!
@MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteவடை மட்டுமா, சாப்பாடே உங்களுக்கு தான் :)
//அரசியல்வாதி தின்னு கொழுத்து சொகுசாய் வாழ்கிறான் சொகுசாய் வாழவேண்டிய மக்களோ பிச்சை எடுக்கிறார்கள் ம்ஹும் வேதனை.... //
ம்ம்ம்...
@Chitra
ReplyDeleteநன்றிங்க..
@கக்கு - மாணிக்கம்
ReplyDelete//மனதில் வலி ஏற்படுகிறது
I agree with you MANO! //
என்ன செய்வது, வலிக்க வேண்டியவர்கள் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை அல்லவா வந்து செல்கிறார்கள் ?
நன்றிங்க
உரைநடையாக இருந்தாலும் படித்து முடித்த போது சிலிர்த்து விட்டது உடம்பு.
ReplyDelete"அடைக்க வேண்டி" என்பதை விட "அடக்க வேண்டி" என்பதே சரியான சொல்லாடல் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteதின்று கொழுத்திருக்கும் அரசியல்வாதிகளின் கண்ணில் வறுமை என்றுமே படுவதில்லை.. என்ன செய்ய..
//"அடைக்க வேண்டி" என்பதை விட "அடக்க வேண்டி" என்பதே சரியான சொல்லாடல் என்று நினைக்கிறேன்.//
ReplyDeleteமாற்றி விட்டேன் பிரகாஷ்.
நன்றிகள்
//ஜோதிஜி said...
ReplyDeleteஉரைநடையாக இருந்தாலும் படித்து முடித்த போது சிலிர்த்து விட்டது உடம்பு.
//
நன்றிங்க ஜோதிஜி
உழைக்கும் வர்க்கத்தின் பசியைக் கூட போக்க வக்கில்லாமல் அறுபது வருஷமாய் தீட்டிக் கொண்டே இருக்கிறார்கள் திட்டங்களை..
ReplyDelete@சாமக்கோடங்கி
ReplyDelete:(
Begging is not a crime. But to refuse to help a little or abuse begging, GOD will not forgive.
ReplyDelete