Sunday, April 10, 2011

மக்களால் மக்களுக்கு

பாடப் புத்தகத்தில்
இப்படித்தான் இருந்தது
மக்களால் மக்களுக்கு மக்களாட்சி..

ஒரு நாள்
சாரை சாரையாக வந்தார்கள்
வெள்ளை ஆடையில் நல்லவர்கள் ஆனார்கள்
உங்கள் வீட்டுப் பிள்ளை
உங்கள் காலடியில் கிடப்பேன்
என்றெல்லாம் சொல்லி ஓட்டுக் கேட்டார்கள்

வழக்கம் போல்
ஜெயிக்கவும் தோற்கவும் ஆனார்கள்

வெற்றி பெற்றவர்கள்
அவரவர் முடிந்ததை
அவரவருக்குத் தேவையான வரை
கக்கத்தில் கட்டிக் கொண்டார்கள்..

நேரமிருக்கும்போது மக்களைச் சந்தித்து
குறை கேட்பதோடு நிறுத்திக் கொண்டார்கள்
அல்லது சந்திப்பையே தவிர்த்தார்கள்

தேர்தல் நாள் அறிவித்தவுடன்
திரும்பவும் அந்த நாள் வந்தது
இந்த தடவை குத்தகை
யார் கைக்கு போகுமென்பது
எண்ணிக்கை முடிந்த பிறகு தெரியும்...


சொல்ல மறந்து விட்டேன்
பாடப் புத்தகத்தில்
இப்படித்தான் இருக்கிறது
மக்களால் மக்களுக்கு மக்களாட்சி....


9 comments:

  1. அட்டகாசம் இளங்கோ. மக்களால் மக்களுக்கு... ;-))
    மனசாட்சி இல்லாத மக்களாட்சி. ;-))

    ReplyDelete
  2. "உங்களுக்கு நாங்க புள்ளதான் தரல மத்த எல்லாம் கொடுத்துட்டோம்" -பாண்டிச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் நடுவண் அமைச்சர் நாராயணசாமி பேச்சு.

    இச் செய்தி எனக்கு இப்பொழுதுதான் தெரியும். எனினும் எனது இடுகை ஒன்றில் அரசியல்வாதிகள் இவ்வாறு வாக்குறுதி கொடுப்பதாக எழுதி அது பெண்களைக் கேவலப்படுத்துவதாக இருக்கும் என்பதால் நீக்கி விட்டேன்.

    இலவசங்களை நோக்கி மக்கள் ஓடும் போது அது அங்கேதான் போய் நிற்கும் என நான் நினைத்தது உண்மையாகிவிட்டது.

    மேலும் படிக்க...
    ஒரு தரம்... ரெண்டு தரம்...!
    http://hooraan.blogspot.com/2011/04/blog-post_9929.html

    ReplyDelete
  3. மக்களை கொண்டு மக்களை ஆளுகிறார்கள்... ஓட்டுவங்கி கணக்கீட்டில் காணாமல் போனது என்னவோ மனித தர்மம் தான்..

    ReplyDelete
  4. ஆமாங்க மக்களாட்சி தான் . தம் மக்களோட ஆட்சி . சென்னைப் பக்கம் ஒரு மக்க ஆட்சி , மதுரைப் பக்கம் இன்னொரு மக்க ஆட்சி டெல்லி பக்கம் மகளோட ஆட்சி . நீங்க நானும் படிச்சது சரி தான் . புரிஞ்சு கிட்டது தான் தப்பு

    ReplyDelete
  5. //RVS said...
    மனசாட்சி இல்லாத மக்களாட்சி. ;-))
    //

    ஆமாங்க, மனசாட்சி என்ற ஒன்று அவர்களிடம் இருக்குதா என்ன.. :(

    நன்றிங்க RVS அண்ணா.

    ReplyDelete
  6. @ஊரான்
    தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  7. @பாரத்... பாரதி...
    நன்றிங்க

    ReplyDelete
  8. @சிவகுமாரன்
    //நீங்க நானும் படிச்சது சரி தான் . புரிஞ்சு கிட்டது தான் தப்பு//

    உண்மையாகவே மக்கள் என்றால் தம் மக்கள் தானோ? :(

    நீங்க சொன்ன மாதிரி நாமதான் தப்ப புரிஞ்சிக்கிட்டோம்.

    நன்றிங்க நண்பரே.

    ReplyDelete
  9. எதிர்காலம் இனி இளைஞர்கள் கையில்.. அவர்களுக்கு இனி தரமான கல்வியும் விழிப்புணர்வும் தர வேண்டும்.. நாளை மக்களாட்சி மலரும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு..

    ஏனெனில்..
    தவரிழைப்போர் - இருபது சதம்
    ஆதரிப்போர் - இருபது சதம்
    தட்டிக்கேட்போர் - ஐந்து சதம்

    ஆனால்
    உள்ளுக்குள் பொருமுவோர் - மீதி சதம்..

    இவர்கள் பொங்கினால் மக்களாட்சி கட்டாயம் மலரும்.. இது என் நம்பிக்கை.. இப்போதே நிறைய பேர் பொரும ஆரம்பித்து விட்டனர்.. இந்த எரிமலைக்குழம்பை அணைய விடாமல் வெடிக்கச் செய்வது நம் பொறுப்பு..

    ReplyDelete