Friday, April 1, 2011

ஒரு கோப்பை தேநீர்

ஜென்னில் ஒரு கோப்பை தேநீர் அருந்துவது என்பது ஒரு தவம் போல். ஒரு கப் தேநீரை கையில் எடுத்துக் கொள்வது முதல், துளித் துளியாக ரசித்து விழுங்கி, காலி கோப்பையை கீழே வைப்பது வரை எப்படிச் செய்கிறீர்கள் என்பதை ஜென் குருக்கள் கவனிப்பார்கள். ஒரு கோப்பை தேநீரை இவ்வளவு ரசித்துக் குடிக்க முடிந்தால், இந்த வாழ்க்கையை அவர்கள் எவ்வளவு ரசிப்பார்கள்.



கிராமங்களில் இன்றும் 'காப்பி தண்ணி குடிச்சிட்டு போறது..' என்று சொல்வார்கள். நண்பன் ஒருவனுக்கு காலை எழுந்தவுடன் தேநீர் கண்டிப்பாக வேண்டும். எங்கேனும் இரு நண்பர்கள் சந்தித்துக் கொண்டால் கடைகளில் ஆர்டர் பண்ணுவது தேநீர் தான்.

இப்படி தேநீர் பல இடங்களில் நம் கூடவே இருந்தாலும், ஆனந்த விகடனில் வெளிவந்த இந்தக் கவிதை ஒரு கணம் பிரமிக்க வைத்தது.

தேநீர் வேளை

காலையில் தேநீர் அருந்துகையில்
சீனி குறைவாய் இருக்கிறதென
இனிப்பை அள்ளிப் போட்டு
கரண்டியால் கலக்கிகொள்கிறான்
மகன்.

சூடாய் இருக்க வேண்டும்
செய்தித்தாள் வேண்டும்
கொஞ்சம் வர்க்கி ரொட்டிகளும்
தொலைக்காட்சியும்
அப்பாவுக்கு.

பூ வேலைப்பாடுடன் கூடிய
தேநீர்க் குவளை
மகளுக்கு.

எப்படி இருந்தாலும்
அருந்திக்கொள்வாள் அம்மா
இந்த வாழ்க்கையை!


விஜய் மகேந்திரன் (ஆனந்த விகடன் - 23/03/11 இதழில்)


நன்றி: ஆனந்த விகடன், மேலே உள்ள படம் இணையத்தில் இருந்து.


17 comments:

  1. இந்த டீ'லதான் என்னல்லாம் இருக்கு பாருங்க....

    ReplyDelete
  2. அற்புதம்!.. உங்களுக்கு நன்றியும் இளங்கோ!

    ReplyDelete
  3. அருமையான (தேநீர்) பகிர்வு.

    ReplyDelete
  4. ஜென் ல் டீ அருந்தும் மகத்துவத்தை கவிதையோடு அழகாக பகிர்ந்துள்ளீர்கள்...

    தேநீர் பானங்களின் ராணி என்று சொல்வார்கள்... ஜப்பானில் டீ நடனம் என்று நல்ல உபசரிப்பு முறை உள்ளது..

    ReplyDelete
  5. ஃஃஃஃஎப்படி இருந்தாலும்
    அருந்திக்கொள்வாள் அம்மா
    இந்த வாழ்க்கையை!ஃஃஃஃ

    கடைசி வரியில் கடாசி எடுத்து விட்டார்..


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

    இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

    ReplyDelete
  6. //எப்படி இருந்தாலும்
    அருந்திக்கொள்வாள் அம்மா
    இந்த வாழ்க்கையை!//
    அம்மா என்றால் என்றுமே அன்பு, தியாகம்தான்!

    ReplyDelete
  7. அருமையான கவிதை.. எதையும் நீங்க விடறதில்லை...

    ReplyDelete
  8. @MANO நாஞ்சில் மனோ
    நன்றிங்க நண்பரே

    ReplyDelete
  9. @Balaji saravana
    நன்றிங்க பாலாஜி

    ReplyDelete
  10. @பத்மநாபன்
    தகவல்களைப் பகிர்ந்ததற்கு நன்றிகள் அண்ணா..

    ReplyDelete
  11. @மதுரை சரவணன்
    நன்றிங்க சரவணன்

    ReplyDelete
  12. @♔ம.தி.சுதா♔
    நன்றிங்க நண்பரே

    ReplyDelete
  13. @FOOD said...
    //அம்மா என்றால் என்றுமே அன்பு, தியாகம்தான்!//

    ஆமாங்க.. கவிதையை ரசித்ததற்கு நன்றிகள்

    ReplyDelete
  14. @சாமக்கோடங்கி said...
    //அருமையான கவிதை.. எதையும் நீங்க விடறதில்லை... //

    ஹாஹா.. நன்றிகள் பிரகாஷ்.. :)

    ReplyDelete
  15. மிக்க நன்றி நண்பரே உங்கள் பதிவுக்கு !!!!

    ReplyDelete
  16. @விஜய் மகேந்திரன்
    தங்களுக்கு எனதன்பு நன்றிகள்...

    ReplyDelete