Wednesday, December 1, 2010

வெதச்சவனும் வளர்த்தவனும்..















நடு மக,
புருஷன் பணம் வேணும்னு
கேக்குறான்னு தேம்பிக்கிட்டு இருக்க
கட்டி இருந்த நாலு வெள்ளாட்டுல
ஒன்னப் புடிச்சு
சந்தையில விக்கப் போனா
தெக்க வூட்டு ஆத்தா...

ஆட்ட வித்துப் போட்டு
பேரன் ஆட்டுக் கறி வேணும்னு
போன வாரம் கேட்டது
நெனவுக்கு வர
வாங்கலாம்னு எட்டி வெக்கையில
புள்ளைக்கு பணம் பத்தாமப் போனா
என்ன பண்றது அப்படின்னுட்டு...

வெதச்சவனும் வளர்த்தவனும்
என்னைக்கு அதத் தின்னிருக்கான்னு
பொலம்பிட்டு வெறுங்கையோடு
நடந்து போகிறாள் சந்தையிலிருந்து..



****************
படம்: இணையத்திலிருந்து நன்றி.
****************


22 comments:

  1. வாசிக்கும் போது வித்தியாசமான வரிகள் அழகாக மூவருக்குமிடையான போராட்டத்தை பிரதி பலிக்கிறது.

    ReplyDelete
  2. வெதச்சவனும் வளர்த்தவனும்
    என்னைக்கு அதத் தின்னிருக்கான்னு
    பொலம்பிட்டு வெறுங்கையோடு
    நடந்து போகிறாள் சந்தையிலிருந்து..


    .... :-( பாவமா இருக்குது.

    ReplyDelete
  3. //வெதச்சவனும் வளர்த்தவனும்
    என்னைக்கு அதத் தின்னிருக்கான்னு
    பொலம்பிட்டு வெறுங்கையோடு
    நடந்து போகிறாள் சந்தையிலிருந்து..//
    அருமை சார்! அருமை!

    ReplyDelete
  4. //வெதச்சவனும் வளர்த்தவனும் //
    எவ்வளவு பட்டவர்த்தனமான உண்மை..
    நல்லாயிருக்கு இளங்கோ

    ReplyDelete
  5. நல்ல வரிகள்.. உண்மையைப் பளிச்சுன்னு சொல்லியிருக்கீங்க.. இந்த சூழ்நிலையிலதான் எத்தனையோ பேர் இருக்காங்க..

    ReplyDelete
  6. //nis said...

    வாசிக்கும் போது வித்தியாசமான வரிகள் அழகாக மூவருக்குமிடையான போராட்டத்தை பிரதி பலிக்கிறது.
    //

    நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  7. //Chitra said...

    வெதச்சவனும் வளர்த்தவனும்
    என்னைக்கு அதத் தின்னிருக்கான்னு
    பொலம்பிட்டு வெறுங்கையோடு
    நடந்து போகிறாள் சந்தையிலிருந்து..


    .... :-( பாவமா இருக்குது.//

    ஆம் சித்ரா அக்கா, அவர்கள் பாவம்தான். நன்றி

    ReplyDelete
  8. //

    எஸ்.கே said...

    //வெதச்சவனும் வளர்த்தவனும்
    என்னைக்கு அதத் தின்னிருக்கான்னு
    பொலம்பிட்டு வெறுங்கையோடு
    நடந்து போகிறாள் சந்தையிலிருந்து..//
    அருமை சார்! அருமை!//

    நன்றிங்க எஸ்.கே.

    ReplyDelete
  9. //Balaji saravana said...

    //வெதச்சவனும் வளர்த்தவனும் //
    எவ்வளவு பட்டவர்த்தனமான உண்மை..
    நல்லாயிருக்கு இளங்கோ
    //

    நன்றிங்க பாலாஜி

    ReplyDelete
  10. //Gnana Prakash said...

    simply nice,,,
    //

    Thanks Gnanam.

    ReplyDelete
  11. //பதிவுலகில் பாபு said...

    நல்ல வரிகள்.. உண்மையைப் பளிச்சுன்னு சொல்லியிருக்கீங்க.. இந்த சூழ்நிலையிலதான் எத்தனையோ பேர் இருக்காங்க..
    //

    நன்றிங்க பதிவுலகில் பாபு.

    ReplyDelete
  12. நம்மஊர் பாசையிலே கவிதைகள் நல்லா இருக்குங்க .... தொடர வாழ்த்துக்கள் ..

    விவசாயத்துல முட்டுவளியப்பத்தி ஒரு சொலவடை உண்டுங்க '' உழுதவன் கணக்கு பார்த்தா உடுத்திய வேட்டி கூடமிஞ்சாது''

    இதையும் மீறி நடக்கும் முன்னேற்றங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன..

    ReplyDelete
  13. //பத்மநாபன் said...

    நம்மஊர் பாசையிலே கவிதைகள் நல்லா இருக்குங்க .... தொடர வாழ்த்துக்கள் ..

    விவசாயத்துல முட்டுவளியப்பத்தி ஒரு சொலவடை உண்டுங்க '' உழுதவன் கணக்கு பார்த்தா உடுத்திய வேட்டி கூட மிஞ்சாது''

    இதையும் மீறி நடக்கும் முன்னேற்றங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன..
    //

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க பத்மநாபன்.

    நீங்களும் கோவையா ?.

    நீங்க சொன்ன சொலவடை நானும் கேள்விப் பட்டிருக்கேன். நினைவு படுத்தியதற்கு நன்றி.

    உழுதவனை விட இடையில் இருக்கும் தரகர்கள் அடையும் லாபம் அதிகம் இங்கே. வருத்தம் தரும் விஷயம் அதுவே.

    விவசாயிடம் இருந்து குறைந்த காசில் வாங்கி, அது சந்தைக்கு வரும்போது எவ்வளவு விலை சொல்லுகிறார்கள்.

    ReplyDelete
  14. அருமை நண்பரே

    ReplyDelete
  15. //padaipali said...

    அருமை நண்பரே
    //

    நன்றிங்க படைப்பாளி.

    ReplyDelete
  16. புதிய வார்த்தைகள் அருமை

    ReplyDelete
  17. //நீங்களும் கோவையா ?. //ஆமாங்க.. முன்னர் அகண்ட கோவை மாவட்டத்தின் சத்தியமங்களத்தில் ஆரம்பித்து எல்லா திசையிலும் தெற்கில் பொள்ளாச்சி மேற்கில் சாவடி, வடக்கில் துடியலூர் இப்படி மாவட்டம் முழுவதும்.. இப்ப பசங்க படிப்புக்காக சென்னை...

    ReplyDelete
  18. //வெதச்சவனும் வளர்த்தவனும்
    என்னைக்கு அதத் தின்னிருக்கான்னு//

    என்னுடைய பார்வை:

    ஆனா அதனுடைய உயிர் போகறது என்னமோ உறுதி.. அந்த ஆட்டின் மன நிலையில் இருந்து நான் யோசிக்கிறேன்.. எனக்கு இவர்கள் இரண்டு பேருமே நாசகாரர்கள் தான்...

    மனிதர்கள் வருத்தப் படுவதை மட்டுமே பார்த்து வருத்தப் படுபவன் மனிதன் அல்ல. எல்லா உயிர்களையும் மதித்துப் போற்றுபவனே மனிதன். ஏழை பணக்காரன் என்ற பேதம் இதில் இல்லை.

    வளர்ந்ததும் விற்கலாம் என்று என் அப்பா கோழிக் குஞ்சுகள் வாங்கினார். நாங்கள் வளர்க்க, பாசத்தில் மூழ்கினோம். எந்த கோழியையும் விற்கவும் இல்லை, கொள்ளவும் விட வில்லை. கடைசியாக ஒரு கோழிக்கு சீக்கு பிடித்து கிடந்த போது(இரண்டு கால்களும் முடங்கி விட்டன ), குழந்தையைப் போல சேலையில் தொட்டில் கட்டி படுக்க வைத்து, உணவை தண்ணீரில் கலந்து கரண்டியில் வாயில் ஊற்றிக் கொடுத்தவர் என் தாய்.

    எந்த லாபமும் இல்லாமல் செய்வதே சேவை..

    ---
    இளங்கோ உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.. உங்கள் சிந்தனை பிரமிக்க வைக்கிறது... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  19. //THOPPITHOPPI said...

    புதிய வார்த்தைகள் அருமை
    //

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  20. //பத்மநாபன் said...

    //நீங்களும் கோவையா ?. //ஆமாங்க.. முன்னர் அகண்ட கோவை மாவட்டத்தின் சத்தியமங்களத்தில் ஆரம்பித்து எல்லா திசையிலும் தெற்கில் பொள்ளாச்சி மேற்கில் சாவடி, வடக்கில் துடியலூர் இப்படி மாவட்டம் முழுவதும்.. இப்ப பசங்க படிப்புக்காக சென்னை...
    //

    இந்தப் பக்கம் வந்திங்கன்னா சொல்லுங்க. நன்றிங்க

    ReplyDelete
  21. @சாமக்கோடங்கி

    அம்மாவின் பாசம் அளவிட முடியாதது. ஒரு நாள் நேரில் வந்து சந்திக்கிறேன்.

    நன்றிங்க பிரகாஷ்.

    ReplyDelete