Monday, December 27, 2010

அலைதல்
வானுயர்
கட்டிடங்களின் மேல்
எங்கிருந்தோ வந்த
பொன்வண்டு ஒன்று
பறந்து கொண்டிருக்கிறது..
அது அறிந்திருக்க வாய்ப்பில்லை
அதற்கான உணவு
இந்நகரத்தில் இல்லையென...படம்: http://www.orangecounty.in/lifescapes/once-upon-a-bug/ தளத்தில் இருந்து. நன்றி


22 comments:

ஷஹி said...

ஓஹோ?

roshaniee said...

நகரங்களின் நிலைப்பாட்டை பொன் வண்டு மூலம் அழகாக சொல்லியிருக்கிறிர்கள்

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கு அவார்ட் தந்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள் நன்றி
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html#

Balaji saravana said...

இது தான் பொன்வண்டா பாஸ்?! இப்போ தான் பார்க்கிறேன்

பத்மநாபன் said...

அன்று சிறு வயதில், பொன்வண்டுகளை தீப்பெட்டிக்குள் பத்திரமாக சேமித்து வைக்கும் பொழுது இருந்த மகிழ்ச்சி, இன்று சுதந்திரமாக இப்படத்தில் பார்க்கும் பொழுதும் அதே மகிழ்ச்சி....

RVS said...

அதுக்கு என்ன உணவு இளங்கோ? ;-) ;-)

சாமக்கோடங்கி said...

பொன்வண்டு, வெல்வெட்டுபூச்சி, பால்செடியில் இருக்கும் ராட்சத வெட்டுக்கிளி இவைகளைப் பார்த்தே பலவருடங்கள் ஆடி விட்டன.. அத விடுங்க பாஸ், வெள்ளை நிற பட்டாம்பூச்சி, கண்வரைந்த ராட்சத பட்டாம்பூச்சி, இவைகளை எல்லாம் இப்போது காண முடியவில்லை..

மனிதர்கள் எல்லாம் பாவிகளே.. பூமி என்பது நாம் வாழ்வதற்கான இடம்தான்.. ஆனால் இங்கு நாம் மட்டுமே இல்லை என்பதையும் உணர வேண்டும்..

சாமக்கோடங்கி said...

முதலில் எல்லாம் வெட்டுக்கிளிகளை மர தீப்பெட்டியில் அடைத்து வைத்து பள்ளிக்கு எடுத்து வந்து ஜோசியம் பார்ப்போம்.. பெரிய வெட்டுக்கிளி கொண்டு வருபவன் தான் எங்களில் வீரன்.... அவர்கள் எப்போதும் பெரிய சிகரெட் பெட்டிகளில் தான் அந்த பெரிய வெட்டுக்கிளிகளை கொண்டு வருவர்.. வெளியில் வந்தால் சதையைக் கிழித்து ரத்தம் குடித்து விடும் என்று புரளி வேறு நிலவியது..(பெட்டியில் அடைத்தாலும் அவை தின்ன புல் நுனிகளைக் கிள்ளி உள்ளே போட்டிருப்போம்).. அவைகளுக்கு அது வலிக்கும் துன்பப் படும் என்று எங்களுக்கு யாருமே சொல்லித் தரவில்லை.. அவைகள் கொடுத்த சாபம் தான் என்னவோ, நமது அடுத்த தலை முறையினருக்கு அதை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கப் போவது இல்லை...

வெறும்பய said...

படித்த படிப்பிற்கு வேலை தேடும் பல இளைஞர்களின் நிலையும் இது தான்...

இளங்கோ said...

@ஷஹி
நன்றிங்க ஷஹி

இளங்கோ said...

@roshaniee
எல்லோருக்கும் உண்டான உணவை நகரங்கள் தர இயலுவதில்லை.
நன்றிங்க நண்பரே.

இளங்கோ said...

@எம் அப்துல் காதர்
நன்றி நண்பரே, விருது தந்தமைக்கு.

இளங்கோ said...

@Balaji saravana
ஆமாம் நண்பரே, அந்தக் காலத்தில் கிராமத்தில் நிறையக் காணலாம். இப்பொழுது அல்ல. :)

இளங்கோ said...

@பத்மநாபன்
நன்றிங்க அண்ணா.

இளங்கோ said...

@RVS
எனக்கு தெரிந்து கொஞ்சூண்டு புல், பசுந் தழைகள் தான் அண்ணா. அது தான் நம்ம சிட்டில கெடைக்காதே :)

நன்றிங்க.

இளங்கோ said...

@சாமக்கோடங்கி
ஆஹா, நான் ஒரு கவிதை எழுதி உங்களை எல்லாம் பின்னோக்கி போக வெச்சிட்டேனே :)

ஒன்று ரெண்டை நாம் பிடித்து விளையாடுவதால் அந்த இனம் முற்றாக அழிய வாய்ப்பில்லை. வருந்த வேண்டாம் பிரகாஷ், அது அந்த வயதுக்கே உரியது.

நன்றிங்க பிரகாஷ்.

இளங்கோ said...

@வெறும்பய

வண்டுகள் மட்டுமில்லை, இம் மாபெரும் நகரங்களில் ஊரை விட்டு வந்தவர்கள், வேலை தேடுபவர்கள் என எல்லோரும் பசியாற முடிவதில்லை.

தங்கள் பின்னூட்டம் மிக அருமைங்க. நான் சொல்ல வந்த கருத்தும் அதுவே.

நன்றி நண்பரே :)

சிவகுமாரன் said...

ஆகா,
சிறுவயதில் பார்த்தது. அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு போய்விட்டது பொன்வண்டு என்னை அந்தக் காலத்திற்கு. திரிந்து அலைந்து பொன்வண்டு பிடித்து, தீப்பெட்டிகுள்ளே திணித்து அடைத்து , பள்ளிப் பைக்குள் பத்திரமாய் வைத்த பொன்வண்டு எப்படி பறந்ததென தெரியவில்லை இன்றுவரை. ஓகோ உங்கள் நகரத்து மாடிகளில் தான் தேடிக் கொண்டிருக்கிறதோ என்னை ?

அருமை நண்பா.. நாமும் தான் அந்த பொன்வண்டு மாதிரி இருக்கிறோம் தனக்கான இடம் எதுவென்று தெரியாமல்.

சிவகுமாரன் said...

To RVS
பொன்வண்டு கொன்றைமரக் காடுகளில் இருக்கும்..முக்கியமாக கொன்றை இலைகள் தான் அதன் உணவு

சிவகுமாரன் said...

RVS
பொன்வண்டு கொன்றைமரக் காடுகளில் இருக்கும் .முக்கியமாக கொன்றை இலைகள் தான் அதன் உணவு.

இளங்கோ said...

@சிவகுமாரன்
பொன்வண்டுகளைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவுகள்.

//நாமும் தான் அந்த பொன்வண்டு மாதிரி இருக்கிறோம் தனக்கான இடம் எதுவென்று தெரியாமல். // Nice lines..

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் நண்பரே.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சாமக்கோடங்கி said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இளங்கோ..

Post a Comment