Tuesday, December 21, 2010

உலரும் குருதிரீங்காரமிட்டு
சுற்றி சுற்றி வந்தது
பெரும் கொசுவொன்று...
இரண்டு மூன்று முறை
அடிக்க முயற்சித்தும் தப்பி விட
இம்முறை தவற விடக் கூடாதென
ஆடாமல் அமர
முன்கையில் வந்தமர்ந்து
குருதி ருசியில் சொக்கியது..

ஓங்கி அடித்த அடியில்
வெளிவந்த குருதி
இப்பொழுது
என் உடம்பிலும் இல்லை
கொசுவின் உடம்பிலும் இல்லை
காற்றில் உலர்ந்து கொண்டிருந்தது..!

படம்: இணையத்தில் இருந்து. நன்றி.

பின்குறிப்பு: கவனிக்க, இதை நான் கவிதை லேபிளில் அடைக்கவில்லை !! :)


20 comments:

Balaji saravana said...

பின்குறிப்பு இல்லைனாலும் அது எந்த கேடகரில வரும்னு எல்லோருக்கும் தெரியும் :)
//உலரும் குருதி //
தலைப்பு அட்டகாசம்..

ம.தி.சுதா said...

அனால் நியத்தை விளங்கிக் கொண்டேன் சகோதரா...
எங்கே நம்ம ஓடைப்பக்கம் காணல..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

ஷஹி said...

ஹை..இது நல்லா இருக்கே...'கவிதைன்னு நான் சொல்லல' அப்புடின்னு சொன்னா..நாங்க விட்டுடுவோமா? இருங்க கேஸ் போடறேன்!
(தலைப்பு நல்லா இருக்கேன்னு நம்பி வந்தா....)

BHARATH said...

இறுதி வரிகளால் கவிதை என்ற வரம்புக்குள் வருகிறது.
பட தெரிவு அருமை.

BHARATH said...

ஓ, எங்க வாயால கவிதை-னு சொல்லனுமா?
சரி... கவித, கவித...
(நாங்களும் கோயமுத்தூர் தானுங்கோ)

பால் [Paul] said...

தலைப்பு நல்லா இருக்குங்க.. கவிதையும் தான்.. :)

வைகறை said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com

ஜீ... said...

அருமை! :-)

RVS said...

கொசுவும் குருதியும் ...... ஒரு சொட்டு ரத்தம் வீணாப் போயிடுச்சு... நல்லா இருக்கு எதிலும் சேராதவை... ;-)

இளங்கோ said...

@Balaji சரவணா
நன்றிங்க நண்பரே.

இளங்கோ said...

@ம.தி.சுதா
அன்பு நண்பரே, தங்கள் ஓடைக்கு நான் வந்து கொண்டேதான் இருக்கிறேன். :)

நன்றிங்க.

இளங்கோ said...

@ஷஹி
நன்றிங்க ஷஹி :).

இளங்கோ said...

@பாரத்
நன்றிங்க.
வரிகளை ரசித்தமைக்கு என் நன்றிகள்.

//சரி... கவித, கவித..//
நீங்களும் கோவை தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள். :)

இளங்கோ said...

@பால் [Paul]
நன்றிங்க நண்பரே.

இளங்கோ said...

@வைகறை
உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
நன்றிங்க நண்பரே.

இளங்கோ said...

@ஜீ...
நன்றிங்க நண்பரே.

இளங்கோ said...

//RVS said...

கொசுவும் குருதியும் ...... ஒரு சொட்டு ரத்தம் வீணாப் போயிடுச்சு... நல்லா இருக்கு எதிலும் சேராதவை... ;-)
//

ஆமாங்க அண்ணா, ரத்தம் வீணாப் போயிருச்சு. :) அந்தக் கொசுவ அடிச்சா அப்புறம்தான் யோசிச்சேன்.

நன்றிங்க அண்ணா.

சாமக்கோடங்கி said...

இளங்கோ..

இப்பக் கேளுங்க...

கொசுவுக்கேல்லாம் பாவம் பாத்தா
நிம்மதி என்றுமே இருக்காது..

பத்திய நீயும் கொளுத்தி வெச்சா
தொந்தரவென்பதே நெருங்காது..

மின்சார மட்ட வாங்கினாலும்
வாரண்டி என்பதே கிடையாது..

பாதி தூக்கத்துல எழுந்துகிட்டா
மறுபடி தூங்க முடியாது..

சாக்கடைக்கு மருந்தடிக்க அரசுக்கும்
என்றுமே தோன்றாது..

தேர்தல் அறிக்கை தயாரிக்கவே
அவர்களுக்கு நேரம் போதாது.."

ஆக..

இந்த நாட்டில் கொசுவையும் அரசியல்வாதிகளையும் ஒழிக்கவே முடியாது...

கவிதை நல்லா இருக்குங்க இளங்கோ.. (உணர்ச்சி வசப் பட்டுட்டனோ..)

சாமக்கோடங்கி said...

இத சொன்னதினால கொசுவால என்னோட உயிர்க்கு ஒன்னும் ஆபத்தில்லையே...

இளங்கோ said...

@சாமக்கோடங்கி
ஆஹா, சாமக்கோடாங்கி கவிஞரா மாறிட்டார். :)

//இந்த நாட்டில் கொசுவையும் அரசியல்வாதிகளையும் ஒழிக்கவே முடியாது...//
அதிலும் இந்த வரிகள் அருமை பிரகாஷ்.

உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்ல, அப்பப்போ கடிச்சு வெச்சு காய்ச்சல், உடல் வலி அப்படின்னு சின்ன சின்னதா வரும். :)

Post a Comment