Monday, November 29, 2010

அமிழ்தினும் அமிழ்து













ஒரு தம்ளர் காப்பித் தண்ணியும்
கொஞ்சம் பொட்டுக் கடலையும்
கொண்டு வந்து
தின்னத் தந்துவிட்டு
'என்கிட்டே வேறென்ன இருக்கு'
என்று தள்ளாமையில்
புலம்பிக் கொண்டிருக்கும்
பாட்டிக் கிழவியிடம்,
இது
அமிழ்தினும் அமிழ்து
என்பதைச் சொல்ல
வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

குறிப்பு: இப்பதிவில் இருக்கும் படம், பதேர் பாஞ்சாலி படத்தில் வரும் பாட்டி.

**************

16 comments:

  1. உண்மையான உணர்வுகள்!
    அது அமிழ்தினும் இனிதுதான்!

    ReplyDelete
  2. கொஞ்சமும் தெவிட்டாத தெள்ளமுது !!!! ;-) ;-)

    ReplyDelete
  3. வரிகள் மிக அருமை..

    ReplyDelete
  4. ஏழைகள் வீட்டில் தினமும் நடப்பவை ;(((

    ReplyDelete
  5. @எஸ்.கே
    நன்றிங்க எஸ்.கே


    @RVS
    //கொஞ்சமும் தெவிட்டாத தெள்ளமுது !!!! ;-) ;-) //
    ஆமாங்க அண்ணா :) நன்றி.


    @பதிவுலகில் பாபு
    நன்றிங்க பாபு.


    @Chitra
    நன்றிங்க சித்ரா அக்கா.


    @nis
    //ஏழைகள் வீட்டில் தினமும் நடப்பவை ;(((//
    ஏழையாக இருந்தாலும் இருப்பதை பகிர்ந்து உண்ண வயதோ, மனமோ தடையில்லை.
    நன்றி நண்பரே.

    ReplyDelete
  6. அன்பினும் அமிழ்துண்டோ?
    அருமை இளங்கோ :)

    ReplyDelete
  7. //Balaji saravana said...

    அன்பினும் அமிழ்துண்டோ?
    அருமை இளங்கோ :)
    //
    நன்றி நண்பரே.

    ReplyDelete
  8. அருமையான வரிகள்

    ReplyDelete
  9. //THOPPITHOPPI said...

    அருமையான வரிகள்
    //
    நன்றி நண்பரே.

    ReplyDelete
  10. அருமையான கவிதைக்க அருமையான படம் வாழத்துக்கள் சகோதரம்...

    ReplyDelete
  11. //ம.தி.சுதா said...

    அருமையான கவிதைக்க அருமையான படம் வாழத்துக்கள் சகோதரம்...
    //

    நன்றி சகோதரம்.

    ReplyDelete
  12. எனது பாட்டியை நினைவு படுத்தி விட்டீர்கள்..

    ReplyDelete
  13. //சாமக்கோடங்கி said...

    எனது பாட்டியை நினைவு படுத்தி விட்டீர்கள்..
    //

    எல்லாப் பாட்டிகளும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.
    நன்றி பிரகாஷ்.

    ReplyDelete
  14. வார்த்தைகள் எதுக்கு இளங்கோ? பாட்டி கைய பிடிச்சு ஒரு முத்தம் குடுத்தா போச்சு!

    ReplyDelete
  15. //ஷஹி said...

    வார்த்தைகள் எதுக்கு இளங்கோ? பாட்டி கைய பிடிச்சு ஒரு முத்தம் குடுத்தா போச்சு!
    //
    ஆமாங்க, நல்ல யோசனை. :)
    நன்றிங்க.

    ReplyDelete