Tuesday, November 23, 2010

சிறு துளிகள் (23/11/2010)

பதிவரும் எங்கள் நண்பருமான திரு.பிரகாஷ்(சாமக்கோடங்கி ...) அவர்கள், எங்கள் விழுதுகளின் செயல்பாடுகளில் மிக்க ஆர்வமும், அனைத்து வகைகளிலும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பவர். அவரிடம் மழைக் காலமாக இருப்பதால் மரங்கள் நட எண்ணியுள்ளோம் எனத் தெரிவித்ததும், நூற்றி ஐம்பது மரக் கன்றுகளை வாங்கித் தந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று அவரும் வந்திருந்து ஆரம்பித்து வைக்க, இந்த வாரம் முழுவதும் அனைத்து மரங்களையும் நட்டு விடுவோம். நண்பர் பிரகாஷுக்கு எங்களின் நன்றிகளும் வணக்கங்களும்.

இடமும் நேரமும் இருப்பவர்கள் இப்பொழுது மரக் கன்றுகளை நட்டால் நன்றாக வளரும். எதைப் போட்டாலும் வளரும் அளவுக்கு மழை பெய்து மண் மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. மரங்களை நட இதுவே ஏற்ற தருணம்.

*******************************



போன வாரத்தில் ஒரு நாள் மருதமலைக்குச் சென்றோம். காலை நேர அபிஷேக பூஜை நடந்து கொண்டிருந்தது. விசேட நாள் இல்லை என்பதால் கோவிலில் கூட்டம் இல்லாமல் முருகனை நிம்மதியாகப் பார்க்க முடிந்தது. வெளிப் பிரகாரத்தில் என் செல்லில் இருந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்த பொழுது, வேகவேகமாக வந்த ஒருவர் ரூபாய் பத்துக்கான கட்டணத் தாளை திணித்து, பத்து ரூபாயை பெற்றுக் கொண்டார். எம்பெருமான் முருகன் மயில் மீது ஏறி வந்திருந்தால் கூட அவ்வளவு வேகம் இருக்காது :).





*******************************

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபமன்று, வீட்டில் அண்ணாமலையார் வழிபாடு செய்வோம். இந்த வருடமும் கார்த்திகைத் தீபத்தன்று ஏழு வகைப் பொரியல், இனிப்புகள் என விசேடமாக முடிந்தது :).



*******************************
சிட்டுக் குருவிகளும், வண்ணத்துப் பூச்சிகளும் காண முடியாத தூரத்துக்குச் சென்று விட்டது போல கண்ணிலே பார்க்க முடிவதில்லை. மழை பெய்து கொஞ்சம் பூமி குளிர்ந்து இருப்பதால் அவ்வப்பொழுது அங்கங்கே தென்படுகின்றன. ATM வரிசையில் நின்றிருந்த பொழுது ஒரு வண்ணத்துப்பூச்சி என் செல்லில் சிறைப்பட்டது. மழை வாழ்க.






*******************************
எஸ்.எம். எஸ்.

என் செல்லுக்கு வந்த சில குறுஞ்செய்திகள்:

PM finally breaks silence: The only 2G i know is SoniaG and RahulG.. I dont know SpectramG
---------
ஐம்பது ரூபா குடுத்து ஒரு லிட்டர் Fanta குடிச்சு பிரைவேட் கம்பனிக்கு லாபம் தர்றத விட எழுபது ரூபா குடுத்து ஒரு குவார்ட்டர் வாங்கி அடிச்சு கவர்ன்மேன்ட்கு லாபம் தர்றது பெட்டெர்.

எப்படி எல்லாம் யோசிக்கறாங்க :) ?

24 comments:

  1. //கோவிலில் கூட்டம் இல்லாமல் முருகனை நிம்மதியாகப் பார்க்க முடிந்தது.//
    உண்மைதான்.

    //போட்டோ எடுத்துக் கொண்டிருந்த பொழுது, வேகவேகமாக வந்த ஒருவர் ரூபாய் பத்துக்கான கட்டணத் தாளை திணித்து, பத்து ரூபாயை பெற்றுக் கொண்டார்//
    :))))

    நிகழ்வுகளை அருமையாக , வித்தியாசமாக பதிந்துள்ளீர்கள். 100 Marks

    வண்ணத்துப் பூச்சி உங்கள் கண்ணாடியில் தன்னை அழகு பார்க்கிறது

    ReplyDelete
  2. ////நூற்றி ஐம்பது மரக் கன்றுகளை வாங்கித் தந்துள்ளார்.////
    அவருக்கு என் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுங்கள்...

    ReplyDelete
  3. மரம் நடும் மகானுபாவனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். வளர்க உம் தொண்டு. ;-)

    ReplyDelete
  4. துளிகள் தித்திப்பு :)
    படங்கள் அருமை இளங்கோ..
    மழை யாவருக்கும் :)

    ReplyDelete
  5. ஷஹி said...

    நானெல்லாம் சுத்தி சுத்தி விரட்டினாலும் வண்ணத்துப் பூச்சி என் காமிராவில சிக்காது! உங்களுக்கு பரவால்ல!எப்புடி இப்புடி மரக்கன்று, விழுதுகள், பதிவுகள்,புகைப்படங்கள் னு கலக்குறீங்க இளங்கோ? அதெல்லாம் சரி எங்க மூன்றாம்கோணத்துக்கு ஒரு பேட்டி குடுக்குறீங்களா? தன்னடக்க விருதெல்லாம் எங்களுக்கு ஏற்கனவே தந்துட்டாங்க, அதனால நீங்க பேட்டி குடுங்க..அப்பறம் நீங்க ரொம்ப சீக்ரெட்டா வச்சிருக்குற உங்க mail id வேணும்.. கேள்விகள் அனுப்ப..OK?

    ReplyDelete
  6. Superb photos - especially the butterfly one.

    ReplyDelete
  7. @LK
    நன்றிங்க எல்கே.

    ReplyDelete
  8. //nis said...

    நிகழ்வுகளை அருமையாக , வித்தியாசமாக பதிந்துள்ளீர்கள். 100 Marks

    வண்ணத்துப் பூச்சி உங்கள் கண்ணாடியில் தன்னை அழகு பார்க்கிறது
    //

    பள்ளியில் நூறு மார்க் வாங்கியதே இல்லை. நீங்களாவது கொடுத்தீர்களே, நன்றிங்க.

    அப்புறம் அந்த வண்டி என்னோடது இல்லை :).

    நன்றிங்க nis.

    ReplyDelete
  9. //ம.தி.சுதா said...

    அவருக்கு என் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுங்கள்...
    //

    நன்றிங்க ம.தி.சுதா.
    கண்டிப்பாக அவரிடம் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  10. @RVS

    உங்கள் வாழ்த்துகளே எங்களை வளரச் செய்யும்.

    நன்றிங்க RVS அண்ணா.

    ReplyDelete
  11. //Balaji saravana said...

    துளிகள் தித்திப்பு :)
    படங்கள் அருமை இளங்கோ..
    மழை யாவருக்கும் :)
    //

    துளிகளை ரசித்ததற்கு நன்றிங்க பாலாஜி.

    ReplyDelete
  12. @ஷஹி

    ஒரு புகைப்படம் எடுக்கக் கூட சரியான தருணம் அமைய வேண்டும் போலத் தெரிகிறதுங்க. இது வரைக்கும் நானும் இந்த மாதிரி எடுக்க முடிந்ததில்லை.

    அப்புறம் நமக்கு இந்த பேட்டியில சுளுவா கேள்வி கேளுங்க. :)

    நன்றிங்க ஷஹி.

    ReplyDelete
  13. //Chitra said...

    Superb photos - especially the butterfly one.
    //

    Thank you Chitra Akka.

    ReplyDelete
  14. //இந்த வாரம் முழுவதும் அனைத்து மரங்களையும் நட்டு விடுவோம். //

    கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.. அந்த பைக்குள்ள இருந்த சில மரங்கள பாத்தபோது, எனக்கு பயமா இருந்துச்சு.. நட்ட வெக்கரதுக்குள்ள செத்துடுமோன்னு.. உங்கள மாதிரியான மனிதர்கள் இருக்கும் வரை அது நடக்காது.

    கொஞ்சம் வேலைகள் இருப்பதனால் நேரில் வர முடியவில்லை. இந்த வாரமும் ஆனைமலை ஐடிசி மாணவர்களுக்கு ஒரு சிறப்புப் பயிற்சி அளிக்க மூன்று பேர் குழுவாக இணைந்து போகிறோம்.. ஆகவே இடைநாட்களில் வந்து பார்க்கிறேன்..

    நட்ட மரங்களைப் பார்க்க ஆவலாக உள்ளோம்..

    ReplyDelete
  15. //நண்பர் பிரகாஷுக்கு எங்களின் நன்றிகளும் வணக்கங்களும்.
    //

    உங்கள் நன்றிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்... உங்களைப் போன்ற செயலில் இறங்குபவர்களைக் காணும்போதே பலருக்கும் உத்வேகம் பிறக்கும். வெறுமனே பேசிக் கொண்டு இருப்பது சுலபம். உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள். பெரும் வசதி படைத்தவர்களே பணத்தை வெளியில் எடுக்க தயங்கும் சமயத்தில், மாதாமாதம் சம்பளத்தில் இருந்து ஒரு தொகையைப் போட்டு இந்த விழுதுகள் அமைப்பை நடத்துவது சாதாரண விஷயமில்லை.. இதை நான் வெறும் புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை.(நானும் நிறைய NGOவிற்கு எல்லாம் சென்றுள்ளேன்). முழுமையான தன்னலமற்ற சேவையை உங்களிடம் காண்கிறேன்..

    ReplyDelete
  16. அப்புறம் சொல்ல மறந்துட்டேன்.. விஷயங்கள அருமையா அடுக்கி இருக்கிறீர்கள்..

    படங்களும் அந்த ஒளி அமைப்புகளும் அருமையா இருக்குங்க..

    ReplyDelete
  17. //எங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்.//


    அப்படியா.. இத்தனை நாளா நானும் விழுதுகள் அமைப்பின் ஒரு உறுப்பினராகவே என்னை எண்ணுகிறேன்...

    ReplyDelete
  18. உங்களுக்கும் பிரகாஷுக்கும் வாழ்த்துக்கள். சென்னையில் யாரும் இது போல் செய்தால் அறிமுக படுத்துங்கள். என்னால் முடிந்த உதவி செய்ய ஆசை

    ReplyDelete
  19. Congrats for getting 50 followers. I am the 50th..:))

    ReplyDelete
  20. @சாமக்கோடங்கி
    அன்பின் பிரகாஷ்,

    மன்னிக்கவும் நண்பரே. இனிமேல் உங்களை விழுதுகளின் உறுப்பினர் என்றே குறிப்பிடுகிறேன்.

    மூவர் மட்டும் இணைந்து ஆரம்பித்த விழுதுகள் இன்று, வெற்றிகரமாக நடக்க நண்பர்கள் அளித்த ஒத்துழைப்பே காரணம்.

    நேரம் இருக்கும் போது திரும்ப வாருங்கள்.

    நன்றி பிரகாஷ்.

    ReplyDelete
  21. @மோகன் குமார்
    உதவி செய்ய நினைக்கும் மனமே உயர்ந்தது.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  22. நன்றி இளங்கோ; சென்னையில் இது போல் யாரும் தெரிந்தால் அவசியம் அறிமுகபடுத்தவும். நாங்கள் இருக்கும் ஊரிலும் மரங்கள் நிறைய வேண்டும் என்பது எனக்கும் நீண்ட நாள் ஆசை

    ReplyDelete
  23. //மோகன் குமார் said...

    நன்றி இளங்கோ; சென்னையில் இது போல் யாரும் தெரிந்தால் அவசியம் அறிமுகபடுத்தவும். நாங்கள் இருக்கும் ஊரிலும் மரங்கள் நிறைய வேண்டும் என்பது எனக்கும் நீண்ட நாள் ஆசை
    //

    நாங்கள் இருப்பது கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில். சென்னையில் ஒரு வருடம் இருந்ததைத் தவிர அங்கே வேறொன்றும் தெரியாது. அம்மாதிரி ஏதேனும் அமைப்புகள் பற்றித் தெரிந்தால், அவசியம் நான் தங்களுக்கு தெரிவிக்கிறேன்.

    தாங்களே, பக்கத்தில் உள்ள நர்சரியில் கன்றுகளை வாங்கி உங்கள் வீடு மற்றும் தெருக்களின் ஓரத்தில், அல்லது அருகில் உள்ள பள்ளிகளில் நட ஏற்பாடு செய்யலாமே.

    முயற்சி செய்யுங்கள் நண்பரே.
    வாழ்த்துக்கள். :)

    ReplyDelete