காய்கறி அங்காடியில்
பேரம் முடிந்து
விற்றவனும், வாங்கியவனும்
விலை அதிகம் எனவும்
குறைவு எனவும்
சிறு முணுமுணுப்புடன் விலகினர்...
இரண்டு சொத்தைக் காய்களைத்
தள்ளிவிட்டதில் விற்றவனும்
கிழிந்து போனதொரு பத்து ரூபாய்த் தாளை
மடித்துக் கொடுத்ததில் வாங்கியவனும்
உள்ளூர மகிழ்ந்த
கணத்தில்...
கடவுள்
தன் கையிலிருந்த
தராசையும் எடைக் கற்களையும்
வீசியெறிந்து விட்டு
நித்திரையைத் தொடர்ந்தார்.
படம்: இணையத்தில் இருந்து - நன்றி
இது ஒரு மீள்பதிவு
ஒருவரை ஒருவர் ஏமாற்றிவிட்ட திருப்தி
ReplyDeleteநிச்சயம் அவர்கள் இருவருக்கும் சந்தோஷத்தைக்
கொடுத்திருக்கும்.பெரும்பாலான சமயங்களில்
நமக்கு சந்தோஷம் என்பது கூட
இப்படிக் கிடைத்தால்தான் உண்டு
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
அருமை.. பதிவு படித்ததில்லை... நன்றி... (TM 2)
ReplyDeleteதான் ஏமாறுவது தெரியாமல் மற்றவரை ஏமாற்றும் புத்திசாலிகள் நம்மில் அதிகம் ...
ReplyDeleteநல்ல கவிதை
ஏனோ பலருக்கு அடுத்தவரை ஏமாற்றுவதில் ஒரு சந்தோசம். கவிதை அருமை
ReplyDeleteசூப்பர் !
ReplyDelete