எப்பொழுதும்
தேங்காய்த் தொட்டி தேடி அலையும்
கண்ணம்மாவுக்கு ஊர் வைத்த பெயர்
பைத்தியக்காரி.
பூ வரைந்த பாவாடையும்
பாவாடை வரை நீண்ட மேல் துணியும்
ஒரு கையில் அடுக்கி வைத்த
தேங்காய்த் தொட்டிகளும்
மேல் தொட்டி நிறைய கூழாங் கற்களுமாக
வீதியில் நடந்து கொண்டிருப்பாள்.
தொட்டியும், கூழாங் கல்லும்
எங்கே கிடந்தாலும் ஓடிப் போய்
அள்ளிக் கொள்ளுவாள்
யாராவது திட்டினால், கெட்ட வார்த்தைகளும்
கல்லடியும் கிடைக்கும்.
மனிதர்கள் யாரும் தர முடியாத சிநேகத்தை
தான் கண்டெடுக்கும்
ஒவ்வொரு தொட்டியிலும்,
கல்லிலும் பார்த்து
சிரித்துக்கொண்டிருக்கிறாள் கண்ணம்மா..
படம்: இணையத்தில் இருந்து.. நன்றி.
(மீள்பதிவு)
படித்ததாக ஞாபகம் இல்லை... நல்ல வரிகள்... தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM. 3)
ReplyDeleteஎன் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
அருமை!
ReplyDeleteமனிதர்கள் யாரும் தர முடியாத சிநேகத்தை
ReplyDeleteதான் கண்டெடுக்கும்
ஒவ்வொரு தொட்டியிலும்,
கல்லிலும் பார்த்து
சிரித்துக்கொண்டிருக்கிறாள் கண்ணம்மா..//
அருமையான வரிகள்
அவளைப் புரிந்து கொள்ளாதோரே
ஓய்த்தியங்க்கள்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 4
ReplyDeleteஅவர்களின் உள்ளார்ந்த அன்பை நம்மால் வெளிப்படுத்த முடியாது நல்ல பதிவு
ReplyDelete@கவிதை வீதி... // சௌந்தர் //
ReplyDelete@திண்டுக்கல் தனபாலன்
@வரலாற்று சுவடுகள்
@Ramani
@ezhil
நன்றி நண்பர்களே..
மனிதர்களாகிய நாம் பல சமயம் காணத் தவறும் சாமான்ய மனிதர்களின் வாழ்வை சொல்லுவது தான் உண்மையான கவியின் குணம் .. தெருவில் அலையும் பைத்தியக் காரிகள் ஒவ்வொரு ஊர்களில் உள்ளார்கள். அவர்களின் தனி உலகை படம் பிடித்துக் காட்டும் நல்லதொரு கவிதை இது ..
ReplyDelete