Thursday, February 7, 2013

இயற்கையோடு கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள்...


திரும்பிய பக்கமெல்லாம் கான்கிரீட் சுவர்களாய் இருக்கும் இந்த மாநகரங்களில் இயற்கையோடு வாழ முடியாதுதான். ஆனால் கொஞ்சம் முயன்றால் முடிந்த அளவு நம்மால் இயற்கையோடு ஒன்ற முடியும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் தவிர்த்து அனைவரும் செடி கொடிகள் வளர்க்கலாம். இடம் இல்லை என்பவர்கள் தொட்டியில் வளர்க்கலாம், மொட்டை மாடிகளில் வளர்க்கலாம். தேவை கொஞ்சம் அக்கறையும், ஈடுபாடும்.

சிறிய கிண்ணங்களில் தினமும் தண்ணீர் ஊற்றி வையுங்கள். மொட்டை மாடி கைப்பிடிச் சுவர்களில் வைப்பது நலம். நீங்கள் வைத்த முதல் நாளே பறவைகள் வந்து விடாது. கொஞ்ச நாட்கள் பழகிய பின்னரே, அவைகள் தொடர்ந்து வரும். எங்கள் வீட்டில் ஒன்பது மணி சுமாருக்கு காக்கைகளும், மற்ற பறவைகளும் குளியல் போட்டு சிறகுகளை உதறிக் கொண்டு இருக்கும். ஆனால், தொடர்ந்து நீர் மாற்றி விட வேண்டும், தினமும் கூட மாற்றினால் நல்லது. கொஞ்சம் பெரிய பாத்திரம் என்றால் இரண்டு மூன்று நாட்கள் தாங்கும். கலங்கிய நீரை அடிக்கடி மாற்றி விட வேண்டும்.

பறவைகளும், பட்டாம் பூச்சிகளும் உங்கள் வீட்டை வட்டமிட வேண்டுமெனில், செடிகளை நட்டு வையுங்கள். தோட்டம் முழுவதும் குரோட்டேன்ஸ் போன்ற வெளிநாட்டுத் தாவரங்கள் மட்டும் இல்லாமல், கொய்யா, பப்பாளி, சீத்தா என நட்டு வைத்தால் பறவைகள் தேடி வரும்.

இடம் இல்லையெனில், தொட்டிகளில் புதினா, கொத்தமல்லி, இஞ்சி, கீரை வகைகள் என வளர்க்கலாம். இப்போதெல்லாம் கடைகளில், பெரிய செடிகளை (பப்பாளி, முருங்கை) மொட்டை மாடிகளில் வளர்க்கக் கூடிய வகையில் பைகள் கிடைக்கின்றன. அவைகளை வாங்கி பயன்படுத்தலாம்.

வெந்தய விதைகளை தொட்டியில் தூவி விட்டால், இரண்டே வாரத்தில் அருமையான கீரை தயார். அதன் சுவையை அறிந்த பின்னர், நீங்கள் வெந்தயக் கீரையை வெளியே வாங்கவே மாட்டீர்கள்.

எக்காரணம் கொண்டும் பூச்சி மருந்துகளை அடிக்கக் கூடாது. எறும்பு மருந்து கூட போடாமல் இருப்பதே நல்லது. வேப்பம் புண்ணாக்கு, மண்புழு உரம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

அவரைக்காய், பீர்க்கை, சுண்டை, தண்டுக் கீரை, வாழை..... என வளர்த்து வருகிறோம். இந்த வருட பொங்கலுக்கு எங்கள் வீட்டில் வளர்ந்த மஞ்சள் கிழங்கு தான். மீண்டும் அதே மஞ்சளையே விதைத்தும் விட்டோம். பொங்கலுக்கு கடையில் வாங்கிய கரும்பில் கொஞ்சம் நட்டு வைக்க, அதுவும் குருத்து விட்டு வளர்ந்து வருகிறது. அடுத்த வருடம் கடையில் கரும்பு வாங்கப் போவதில்லை :)

முயன்றால் நம்மாலும் சிறிய அளவில் இயற்கையோடு வாழ முடியும்.

எங்கள் வீட்டில் வளர்ந்தவை:



(சேனைக் கிழங்கு)



(பாகற்காய் )


(புடலை கொடியில் வண்ணத்துப் பூச்சி) 


(நண்பர் யோகன் பாரிஸ் சேனைக் கிழங்கு செடியின் போட்டோவை போடச் சொல்லியிருந்தார். சின்ன கிழங்குகளை இப்பொழுதுதான் விதைத்து உள்ளோம். இன்னும் முளைத்து வரவில்லை. அதனால், இந்தப் படம் மட்டும் இணையத்தில்(tekfor.blogspot.com) இருந்து.

நன்றி நண்பரே. முன்னரே இந்தச் செடியை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்)

12 comments:

  1. வீட்டில் வளர்க்கும் புதினா, கொத்தமல்லி ருசியே தனி... மணமும் தனி...

    அழகான வண்ணத்துப் பூச்சி...

    ReplyDelete
  2. அருமையான தகவல். மற்றவர்களும் முயற்சித்து பார்க்கலாமே.

    ReplyDelete
  3. அருமையான முயற்சி, பாராட்டுக்கள்!
    நீங்கள் சேனைக்கிழங்கு என்பது சட்டிக் கரணைக் கிழங்கா?,இதன் இலை எப்படியிருக்கும் ஒரு படம் போடுங்கள்.
    நன்றி!

    ReplyDelete
  4. @திண்டுக்கல் தனபாலன்
    நன்றிங்க

    ReplyDelete
  5. @DiaryAtoZ.com
    நன்றிங்க

    ReplyDelete
  6. @guru nathan
    நன்றி நண்பரே..

    ReplyDelete
  7. @யோகன் பாரிஸ்(Johan-Paris)
    சட்டிக் கரனைக் கிழங்குதான்.. சேனைக் கிழங்கா எனத் தெரியவில்லை. செடியின் போட்டோவை இப்போது பதிவிட்டு உள்ளேன்.
    நன்றி நண்பரே.

    ReplyDelete
  8. மிக்க நன்றி! இளங்கோ
    இது சட்டிக்கரணையே!, தமிழ்நாட்டில் சேனைக்கிழங்கு என்கிறார்கள்.

    ReplyDelete
  9. மிக அவசியமான பதிவுங்க . தோட்டத்துடன் கூடிய வீடு என் பார்வையில் சொர்க்கம் . அப்டி ஒரு சொர்க்கத்தை உருவாக்கவே முயல்கிறேன் . புது வீடு கட்டும் நண்பர்களிடம் சொல்வதுண்டு தோட்டம் போடுங்க , மரம் நடுங்கன்னு . சரின்னு சொல்வாங்க . ஆனா வீட்டுக்கு போயி பாத்தா மண் தரையே இருக்காது . அதுசரி அவரவர் விருப்பம் .

    ReplyDelete
  10. @ஜீவன்சுப்பு
    நன்றிகள் நண்பரே..

    ReplyDelete
  11. வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் பதிவை சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_8.html?showComment=1399504745644#c2740972411937371345

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete