Wednesday, July 4, 2012

தாயார் சன்னதி

"இந்தப் பாவிக்கு, படிக்க வைக்கிறபோது ஆனா ஆவன்னாவில் இருந்து சொல்லித் தராமல், அக்கன்னாவில் இருந்து ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ. நிறையக் கட்டுரைகளின் கடைசி வரி அவ்வளவு வாக்காக அமைந்து, அதற்கு முந்திய அத்தனை வரிகளையும் உயரத்திற்குக் கொண்டுபோய் விடுகிறது. சாணை பிடித்தது மாதிரி இப்படிக் கடைசி வரியை எழுதத் தெரிந்தவருக்கு, அதற்கு முந்திய வரிகளை எழுதத் தெரியாமலா போகும்?"
- வண்ணதாசன்

இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுதுதான், அட நமக்கும் இப்படி எல்லாம் நடந்திருக்கிறதே.. என்று எண்ண வைத்தது. முக்கியமாக பாட்டிகள் பற்றிய கட்டுரைகள். சுகா அவர்களின் ஊர்ப் பக்கம் ஆச்சி என்று கூப்பிட்டால், எங்கள் ஊர்ப் பக்கம் ஆத்தா என்று கூப்பிடுவோம். எங்கள் ஊர்ப் பக்கமும், பாட்டிகளின் சொந்த ஊர்ப் பெயரைச் சேர்த்தே கூப்பிடுவது வழக்கம். அவர்களின் உண்மையான பெயர் யாருக்குமே தெரியாது.





எனது சிறு வயதில் இரவு நேரத்தில், பாம்பை 'பாம்பு' என்று சொல்லக் கூடாது. பூச்சி என்றே சொல்ல வேண்டும். வாய் தவறிச் சொன்னால், திட்டு விழுகும். 'பாம்பு என்ற பூச்சி' என்ற கட்டுரையைப் படித்ததும், 'அட, நம்ம வீட்டிலும் இப்படிதானே சொல்லி வளர்த்தாங்க' என்று நினைத்துக் கொண்டேன்.

தீவிர பக்தரான பெரியப்பாவை Giant Wheel இல் உட்காரவைத்து, பெரியப்பா பயந்து கொண்டே அதில் அமர்ந்திருக்கிறார். சுற்ற ஆரம்பித்ததும் தலை கிறுகிறுக்க, பெரியப்பாவின் குரலுக்கு சுத்துவது நிற்கவில்லை. சுற்றி முடித்ததும், ஒவ்வொரு இருக்கையாக உச்சிக்கு வந்து நின்றது. இவர்கள் அமர்ந்திருந்த இருக்கை இப்பொழுது உச்சியில். சுகா, பெரியப்பாவிடம்

"பெரியப்பா, அங்கே பார்த்தேளா? நெல்லையப்பர் கோயில் தெரியுது" அதற்கு அவர் சொன்ன பதில்,"எந்த மயிராண்டி கோயிலையும் நான் பார்க்கல" . 
இந்தக் கட்டுரையைப் படித்த பின்னர் எனக்கு சிரிப்பு நிற்க வெகு நேரம் ஆனது.

இப்படி எல்லாக் கட்டுரைகளிலும், எங்காவது ஓரிடத்தில் நமது முகம் தட்டுப் பட்டுக்கொண்டே இருக்கிறது. 

நாம் பார்த்த மனிதர்கள் புத்தகம் முழுவதும் நடந்து கொண்டே இருக்கிறார்கள். சிறு புன்னகையும், பெருஞ்ச்சிரிப்பையும், சிறு துக்கத்தையும் தந்து, நமது கடந்து போன நாட்களையும், நாம் மறந்து போன மனிதர்களையும் நினைவுக்கு கொண்டு வரவைப்பது இந்தக் கட்டுரைகள்.



தாயார் சன்னதி
சுகா
சொல்வனம்
280 பக்கங்கள்

உடுமலை.காமில் வாங்க; தாயார் சன்னதி


14 comments:

  1. Padikkanum ena ninaithirukkum puthagam. Neenga sennaiyilaa ulleergal?

    ReplyDelete
  2. கண்டிப்பா படிங்க..
    சென்னை இல்லீங்க... கோவை.
    Thanks

    ReplyDelete
  3. நீங்க சொன்னதுமே படிக்க தோணுது .. நன்றி

    ReplyDelete
  4. நீங்கள் என்ற அவருடைய venuvanamsuka.blogspot.com வலைபதிவில் சில பகுதிகளை படிக்கலாம். மேலும் படிக்க புத்தகத்தினை வாங்குங்கள். அருமையான புத்தகம்.

    ReplyDelete
  5. உங்கள் விமர்சனம் அந்த புத்தகத்தை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

    ReplyDelete
  6. ஐயா! இரவு பனிரெண்டு மணிக்கு உங்க இடுகையைப் படிச்சேன்.நெல்லையப்பர்யே "மயிராண்டி கோவில்னு" படிச்சதும் குபீர்னு சிரிச்சேன்.எனக்கு இந்தி சரியா வராது. பக்காத்து வீட்டு இந்திகாரங்க வந்துட்டாங்க..அவங்கள சமாளிக்க நான் பட்டபாடு......"சுகா" அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்டவர்.வாழ்க!---காஸ்யபன்

    ReplyDelete
  7. @"என் ராஜபாட்டை"- ராஜா
    நன்றி நண்பரே

    ReplyDelete
  8. @ரெண்டு
    நன்றி நண்பரே

    ReplyDelete
  9. @கோவி
    நன்றிங்க

    ReplyDelete
  10. @திண்டுக்கல் தனபாலன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  11. @kashyapan
    நன்றிங்க அய்யா..
    இது போல நிறைய கட்டுரைகள் இருக்கின்றன.. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கக் கூடிய புத்தகம்... படித்துப் பாருங்க...

    ReplyDelete