Abbas Kiarostami - இயக்கிய இந்தக் குறும்படம் பள்ளி செல்லும் இரண்டு சிறுவர்களைப் பற்றியது.
Nader மற்றும் Dara இருவரும் நண்பர்கள். நடேரிடமிருந்து, டரா ஒரு புத்தகத்தை வாங்கி இருக்கிறான். அதைத் திரும்பிக் கொடுக்கிறான் அன்று. புத்தகத்தின் அட்டை கிழிந்து இருப்பதைப் பார்த்ததும், நடேர் கோபத்தில் டராவின் புத்தகத்தை கிழிக்கிறான். அவன் திருப்பி, புத்தகப் பையை கிழிக்க, அவன் பேனாவை உடைக்க, இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். கடைசியில் இருவருக்கும் தலையில் காயம் மற்றும் கண்ணில் காயம் ஏற்படுகிறது. இது ஒரு தீர்வு.
இன்னொரு தீர்வு. புத்தகம் கிழிந்து இருப்பதைப் பார்த்ததும், நடேர் டராவிடம், புத்தகம் கிழிந்து இருப்பதைச் சொல்கிறான். டரா புத்தகத்தை ஒட்டித் தருகிறான். தொடர்ந்து இருவரும் நண்பர்களாகவே இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் வருவது இரண்டு சிறுவர்கள் என்றாலும், இது பெரியவர்களான நமக்கும் தான். கொஞ்சம் விட்டுக் கொடுத்து, கோபம் இல்லாமல் பேசினால் எல்லோருமே நமக்கு நண்பர்களாகவே நீடிப்பார்கள்.
அது போல, எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரேயொரு தீர்வு மட்டும் தான் என்பதை இந்தப் படம் பொய்யாக்குகிறது. கொஞ்சம் யோசித்தால், நல்ல தீர்வை நாம் கண்டடையலாம்.

Two solutions for one problem
நல்லதொரு குறும்பட விமர்சனம் ... தொடர வாழ்த்துக்கள் ... நன்றி ! (த. ம. ஓ. 1)
ReplyDeleteஉண்மையில் பெரியவருக்கு எடுத்துக்காட்டாக அமைந்த ஒரு படம் தான்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDelete@♔ம.தி.சுதா♔
நன்றி நண்பர்களே
அன்பின் இளங்கோ,
ReplyDeleteவணக்கம். வலை மிக அருமையாக இருக்கிறது.
எனக்கும் அதே ஆதங்கம்தான். எப்படி இவ்வளவு நாள் தெரியாமல் போனது.
குரும்படங்கள் குறித்து நிறைய பேச வேண்டும்.
சனி ஞாயிறு “இப்படிக்கு இளங்கோ” தான்.
9842459759 இயலுமெனில் பேசுங்கள் தோழர்
வலையின் முகப்பில் உங்கள் வலையை வைத்திருக்கிறேன். அவ்வப்போது வாசிக்க வசதியாக
ReplyDelete@இரா.எட்வின்
ReplyDeleteநன்றிங்க..