Friday, June 22, 2012

பல்லி வீடு

சுற்றிக் கொண்டே இருக்கின்றன
பல்லிகள் வீட்டுக்குள்
சிலர் பயப்பட
சிலரோ கண்டும் காணாமலும் இருக்கிறார்கள்

பேசும் பொழுதோ
குளிக்கும் பொழுதோ
உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன
எங்காவது ஓரிடத்தில் இருந்து..

ஒரு போதும்
நம் ரகசியங்களை
அது சொல்லிவிடப் போவதில்லை..

இரையை
முழுதாக விழுங்குவது போல்
ரகசியங்களை விழுங்கியிருக்க கூடும்
அல்லது தகுந்த நேரம் பார்த்து
காத்திருக்கவும் கூடும் !

5 comments:

  1. அருமை அருமை
    ஆனாலும் எப்போதேனும் நம் கருத்தை
    ஆதரிக்கவோ எதிர்க்கவோ குரல் கொடுக்கிறது
    அதன்மொழி புரியாததாலோ என்னவோ
    அது புரியாமலே போகிறது
    மனம் கவர்ந்த ப்திவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை நண்பரே.!

    ReplyDelete