அ.முத்துலிங்கம் அவர்களின்
கதைகள், கதைகள் என்று சொல்வதை விட, நம்மைச் சுற்றியிருக்கும் மக்களின்
வாழ்க்கை குறிப்புகள் போன்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
அவரின் தளத்தில் வெளியாகியிருக்கும், உடனே திரும்பவேண்டும் என்ற கதையில், நம்மூரில் பேருந்தில் இருக்கை பிடிக்க சண்டை போடுவதைப் போல, விமானத்தில் இருக்கை பிடிக்க அவர் பட்ட துன்பங்களைச் சொல்லுகிறார். கதை படிக்கும்போது சிரிப்பு வந்தாலும், சொல்ல முடியாத ஒரு வேதனை இல்லை மனத் துயரம் என்னை ஆட்கொண்டது. அந்த இடத்தில் அவருக்கு உதவும் முன்பின் தெரியாத மனிதர்களால் தான் இந்த உலகம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.

*******
முன்னரே, சித்ரா என்ற குறும்படத்தைப் பார்த்து மனது ஒரு மாதிரியாக இருந்தது. இப்பொழுது, அந்தப் படத்துக்கு 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்' விருதை அறிவித்திருப்பதை தனது தளத்தில் பகிர்ந்திருந்தார் அ.முத்துலிங்கம். இந்தக் குறும்படத்தை இதற்கு முன்னர் நீங்கள் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக பாருங்கள். குறுகிய நேரத்தில், ஒரு தகப்பனின் வலியையும், மனைவியின் கண்ணீரையும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கும் விதம்... நீங்களே பாருங்களேன்.
அய்யா முத்துலிங்கம் அவர்கள் நான் மிகவும் நேசிக்கும்
ReplyDeleteஎழுத்தாளர்.
அய்யாவை பற்றிய பதிவால் உங்களை மிகவும் நெருக்கமாக உணர்கிறேன்.
படம் மிக அருமை சார்.. இறுதியில் மனைவியின் கண்ணீர் துளிகளில் மனம் நெகிழாமல் இருக்க முடியவில்லை.
ReplyDelete@உலக சினிமா ரசிகன்
ReplyDeleteநன்றி நண்பரே..
@கோவி
ReplyDeleteஇந்தக் குறும்படத்தின் வெற்றியே அதுதான்..
நன்றி நண்பரே..
https://www.youtube.com/watch?v=bl9cxwhYuuA
ReplyDeleteசித்ரா குறும்படம் புதிய இணைப்பு....