Monday, June 18, 2012

விசாரிப்பு

இன்றைக்குத்தான் அந்த அலுவலர் வந்தார்
கேள்விகள் கேட்டார்
அடிப்படைக் கேள்விகள் முடிந்து
'பிரிட்ஜ் இருக்குங்களா?' - இருக்கிறது என்றேன்
'வாஷிங் மெசின்' - இருக்கிறது என்றேன் 
'லேண்ட் லைன்' - அதுவும் இருக்கிறது என்றேன்

பாரதி பாப்பாவுக்கு தானே சொன்னார்..
'சாதிகள் இல்லையடி' என்று
மற்றவர்கள் கேட்கலாம், தப்பில்லை...

'என்ன சாதி' - அதையும் சொன்னேன்

'சொந்த வீடா' - அதற்கும் பதில் சொன்னேன்
'அவ்வளவுதான்' என விடைபெற்றார் அவர்

ஆமாம், இவ்வளவு கேள்விகள் அரசாங்கம் கேட்கிறது...
விலைவாசி உயர்வு, விவசாயி தற்கொலை
ஊழல், அரசியல்வாதிகளின் சொத்துக்கள்
கல்வி, அடிப்படைத் தேவைகள்
இன்னும் பலவும் என
எங்களிடம் ஆயிரமாயிரம் கேள்விகள்...

பதில் தருவீர்களா? 


8 comments:

  1. ஆயிரமாயிரம் கேள்விகள்.!!!!

    ReplyDelete
  2. பாரதி பாப்பாவுக்கு தானே சொன்னார்..
    'சாதிகள் இல்லையடி' என்று
    மற்றவர்கள் கேட்கலாம், தப்பில்லை..

    நயமான சாடல்..

    ReplyDelete
  3. ஆமாம், இவ்வளவு கேள்விகள் அரசாங்கம் கேட்கிறது...
    விலைவாசி உயர்வு, விவசாயி தற்கொலை
    ஊழல், அரசியல்வாதிகளின் சொத்துக்கள்
    கல்வி, அடிப்படைத் தேவைகள்
    இன்னும் பலவும் என
    எங்களிடம் ஆயிரமாயிரம் கேள்விகள்...//

    அருமையான கேள்வியை
    மிக அழகாக எழுப்பியுள்ளிர்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. @வரலாற்று சுவடுகள்
    @இராஜராஜேஸ்வரி
    @முனைவர்.இரா.குணசீலன்
    @Ramani
    நன்றிகள் நண்பர்களே...

    ReplyDelete
  5. @திண்டுக்கல் தனபாலன்
    Email Subscription Widget - Added
    நன்றி...

    ReplyDelete
  6. நீங்கள் தொழில் அதிபரா? அரசாங்கம் என்ன பொது மக்களுக்கு சேவை செய்யவா? நீங்கள் இந்தியாவில் இருக்குறீர்கள் என்பது நியாபகம் இருக்கிறதா? எப்புடி நாங்களும் உங்ககிட்ட கேள்வி கேட்போம்ல..

    ReplyDelete