Wednesday, August 10, 2011

பாலிதீன் பைகளில் டீ !

இரண்டு மூன்று நாட்களுக்கு வீட்டு வேலைகள் இருப்பதால், வேலைக்கு ஆட்கள் வந்திருந்தார்கள். பதினோரு மணிக்கு டீ வாங்க காசு கேட்டார்கள். வேலைக்கு வந்தது மூன்று பேர். ஒருவர் மட்டும் பணத்தை வாங்கிக் கொண்டு கடைக்குப் போனார். வரும்போது, பாலிதீன் பையில் வாங்கிய டீயோடு, கூடவே மூன்று பிளாஸ்டிக் கப்புகளும் வாங்கி வந்திருந்தார்.

இப்படி டீ வாங்கி குடிக்காதீர்கள் என்று சொன்னேன். காதிலேயே போட்டு கொண்டதாகத் தெரியவில்லை. இவன் போய் சொல்ல வந்துட்டான் என நினைத்திருக்கலாம்.

எல்லா டீக் கடைகளிலும் பாலிதீன் பைகளில் கொதிக்க கொதிக்க ஊத்தி தருகிறார்கள். இப்படி குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் அவர்களுக்கு தெரிந்திருக்குமா?. இப்படி குடிப்பவர்கள் பெரும்பாலும் கட்டிட வேலைக்கு செல்பவர்களே.

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை போட்டாலும், மறைத்து வைத்து பயன்படுத்தும், நமக்கு அதன் தீமைகள் எப்போது தெரியப் போகின்றன?.

வீதிக்கு நாலு டீக் கடைகள் இருக்கும் நம் ஊர்களில் எப்படி இதை சமாளிப்பது?. என்னதான் தடை போட்டாலும், மக்களாகத் திருந்தாமல் பாலிதீன் என்னும் நஞ்சை அழிக்க முடியுமா?

இந்த உலகை காப்பாற்ற என்ன செய்யப் போகிறோம் நாம்...?

பழைய பதிவொன்று: பாலிதீன் என்னும் பிசாசு..




7 comments:

  1. உண்மை தான் இளங்கோ...உங்கள் கவலை மிக நியாயமானது தான்.. பாலிதீன் கவர்களில் இப்படி டீ அருந்துவதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை நீங்கள் அவர்களுக்கு கொஞ்சம் விலாவாரியாக விளக்குவது தான் வழி..இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் நான் யோசிப்பதேயில்லை..சொல்ல வந்ததை சொல்லிவிட்டு தான் ஓய்வேன்..சமூகத்தின் பால் உங்களுக்குள்ள அக்கறை தான் உங்களிடம் உள்ள விஷேஷமே..

    ReplyDelete
  2. உங்கள் பொதுநல சிந்தனைக்கு எனது பாராட்டுக்கள்..

    http://sempakam.blogspot.com/

    ReplyDelete
  3. உண்மைதான் நண்பா..

    பாலித்தீன் பைகளில் தேநீரை மட்டுமா? வாங்குகிறார்கள் கூட நோயையும்தான்!

    இதை இவர்களுக்கு எந்த மருத்துவர் சொல்லிப் புரியவைப்பது?

    ReplyDelete
  4. எல்லா டீக் கடைகளிலும் பாலிதீன் பைகளில் கொதிக்க கொதிக்க ஊத்தி தருகிறார்கள். இப்படி குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் அவர்களுக்கு தெரிந்திருக்குமா?.


    ..... நிச்சயமாக இதை பற்றி தெரிவதில்லை. அவர்கள் மட்டும் அல்ல, சில வீடுகளிலும் கடையில் இருந்து உணவு வாங்கி வரும் போது, சாம்பார் முதலிய சூடான உணவு வகைகளை, இப்படித்தான் ஒரு பாலித்தீன் பைகளில் கட்டி கொடுக்கிறார்கள். சொல்லி பார்த்தால், convenient ஆக இருக்கிறது என்ற பதில் வேறு.... :-(

    ReplyDelete
  5. @ஷஹி,
    @vidivelli,
    @முனைவர்.இரா.குணசீலன்,
    @Rathnavel,
    @Chitra
    அனிவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  6. முன்பெல்லாம் இதுபோல் கட்டிட வேலைக்கு வருபவர்கள்
    தட்டு முட்டு சாமான்களோடு ஒரு தூக்குப் போணியும்
    டீ வாங்கவெனவே எடுத்து வருவார்கள்
    இப்போது கொஞ்சம் சோம்பேற்ித்தனம் கூடிவிட்டது
    இதன் தீமை குறித்த விவரம் அவர்கள் அறிவதில்லை
    சமூக அக்கறையுள்ள நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete