எப்பொழுதும்
தேங்காய்த் தொட்டி தேடி அலையும்
கண்ணம்மாவுக்கு ஊர் வைத்த பெயர்
பைத்தியக்காரி.
பூ வரைந்த பாவாடையும்
பாவாடை வரை நீண்ட மேல் துணியும்
ஒரு கையில் அடுக்கி வைத்த
தேங்காய்த் தொட்டிகளும்
மேல் தொட்டி நிறைய கூழாங் கற்களுமாக
வீதியில் நடந்து கொண்டிருப்பாள்.
தொட்டியும், கூழாங் கல்லும்
எங்கே கிடந்தாலும் ஓடிப் போய்
அள்ளிக் கொள்ளுவாள்
யாராவது திட்டினால், கெட்ட வார்த்தைகளும்
கல்லடியும் கிடைக்கும்.
மனிதர்கள் யாரும் தர முடியாத சிநேகத்தை
தான் கண்டெடுக்கும்
ஒவ்வொரு தொட்டியிலும்,
கல்லிலும் பார்த்து
சிரித்துக்கொண்டிருக்கிறாள் கண்ணம்மா..
படம்: இணையத்தில் இருந்து.. நன்றி.
//மனிதர்கள் யாரும் தர முடியாத சிநேகத்தை
ReplyDeleteதான் கண்டெடுக்கும்
ஒவ்வொரு தொட்டியிலும்,
கல்லிலும் பார்த்து
சிரித்துக்கொண்டிருக்கிறாள் கண்ணம்மா..// உணர்வு....
அருமை
ReplyDeleteமனிதர்கள் யாரும் தர முடியாத சிநேகத்தை
ReplyDeleteதான் கண்டெடுக்கும்
ஒவ்வொரு தொட்டியிலும்,
கல்லிலும் பார்த்து
சிரித்துக்கொண்டிருக்கிறாள் கண்ணம்மா..
...... வேதனை..... ம்ம்ம்ம்...... கருத்துடன், நல்லா எழுதுறீங்க.
ம்ம்ம்ம்ம்...ரொம்ப அழுத்தமா தான் இருக்கு..சென்னையில நான் பள்ளிக்கு போகும் போது ஒரு பொண்ண பாத்திருக்கேன்..தலைக்கு கீழ ரெண்டு செங்கல் வச்சு படுத்திருப்பா..ஒரு கல்லால இன்னொரு கல்ல தேச்சுக்கிட்டே இருப்பா..அவ போன அப்பறம் அவ இருந்த இடத்துல செங்கல் பொடியா உதிர்ந்து இருக்கும்.அவ மனசுல என்ன இருந்திருக்குமோன்னு இப்ப அடிக்கடி தோணுது..அப்ப பாக்க பயமா தான் இருந்துச்சு ..உங்க கவித பாத்ததும் அவ நெனப்பு வந்துடிச்சி..அடிக்கடி கவித எழுதுங்க இளங்கோ..என்னமோ ரொம்ப நாளா ஒரு இன்டெரெஸ்ட் இல்லாம இருக்கீங்க பதிவிடுறதுல!
ReplyDeleteவெல் ஃபினிஷ்ட் கவிதை, நல்லா இருக்கு இளங்கோ.
ReplyDelete@மா.குருபரன்
ReplyDeleteநன்றி நண்பரே..
@ஆமினா
ReplyDeleteநன்றிங்க
@ஷஹி
ReplyDeleteகொஞ்சம் வேலைகள் இருப்பதால் அதிகமாக எழுத முடிவதில்லை. இனிமேல் வாரம் இரண்டொரு பதிவிட முயற்சிக்கிறேன்.
நானொரு கதை சொல்ல, நீங்க ஒரு கதை சொல்லிட்டீங்க அந்த செங்கல் பெண்ணை பற்றி.
கவிதையை ரசித்ததற்கு நன்றிங்க.
@முரளிகுமார் பத்மநாபன்
ReplyDeleteபாராட்டுக்கு நன்றிகள் முரளி.
//FOOD said...
ReplyDeleteவேதனையின் வெளிப்பாடு.
//
Thank you