Friday, August 12, 2011

தொலைக்காட்சி உலகம்

இருபத்தி நாலு மணி நேர செய்திகள்
இருபத்தி நாலு மணி நேர விளையாட்டு
இருபத்தி நாலு மணி நேர திரைப்படங்கள்
இருபத்தி நாலு மணி நேர பாடல்கள் என
இருபத்தி நாலு மணி நேரத்தில்
ஒரு நிமிடமும் வீணாவதில்லை..

விடுமுறை தினங்களும், பண்டிகைகளும்
நடிகர் பேட்டிகள், விளம்பரங்கள்
முதல் முறையாக ஒளிபரப்பாகும் வரலாற்றுப் படங்கள்
என சுமூகமாகவே கழிகின்றது..

மீதி நாட்களுக்கு, இருக்கவே இருக்கிறது..
எப்போது முடியும் எனத் தெரியாத
நெடுந் தொடர் கதைகள்..

சமையலுக்கு, அழகுக்கு,
நோய்களுக்கு, மனை வாங்குவதற்கு,
ராசிக் கற்கள், ஜோதிடம் என எல்லாவற்றையும்
சொல்லித் தருகிறார்கள் அல்லது விற்கிறார்கள்.

பெரும் நேரத்தை விழுங்கும்
இதன் இயக்கத்தை நிறுத்தினால்
நம் உலகமும் சுருண்டு கொள்கிறது
நம் வீட்டுக்குள்.


7 comments:

  1. பெரும் நேரத்தை விழுங்கும்
    இதன் இயக்கத்தை நிறுத்தினால்
    நம் உலகமும் சுருண்டு கொள்கிறது
    நம் வீட்டுக்குள்.


    ..... சினிமா - தொலைக்காட்சி உலகங்களை தாண்டி வர வேண்டும் என்ற நியாயமான ஆதங்கத்தில் எழுதப்பட்டு இருக்கும் கவிதை.

    ReplyDelete
  2. //பெரும் நேரத்தை விழுங்கும்
    இதன் இயக்கத்தை நிறுத்தினால்
    நம் உலகமும் சுருண்டு கொள்கிறது
    நம் வீட்டுக்குள்//
    கடைசி வரிகள் நச்!

    ReplyDelete
  3. தொல்லை காட்சியாக மாறி நம்மை அடிமைப் படுத்தியதை கவிதை நன்றாக எடுத்துக்காட்டியது....

    ReplyDelete
  4. உண்மை...உண்மை....உண்மை... சத்தியமான உண்மை.

    ReplyDelete
  5. ரொம்ப சரி இளங்கோ...ஆதங்கம் நியாயமானது தான்.

    ReplyDelete