Monday, March 28, 2011

இதுவும்...

ஓட்டுப் பொத்தானை ஒரு அழுத்து அழுத்தி விட்டு இந்தப் பக்கம் வந்தால், கையைப் பிடித்திழுத்து கருப்பு மையை அழுத்தி வைப்பார்கள். அடுத்த ஐந்து வருடம் கழித்து தான் மை அப்புவார்கள். அதுவரைக்கும் எந்தக் கூட்டம் கொள்ளை அடித்தால் என்ன, ஊழல் செய்தால் என்ன, நமக்குத் தவறாமல் சன்மானமாக கருப்பு மையோடு, தொலைக்காட்சிப் பெட்டிகளும், மிக்சிகளும், செல்போன்களும் கொடுப்பார்கள்.

- தொழில்கள் வளர
- கல்விக் கட்டணங்களை குறைக்க
- அரசுப் பள்ளிகளில் வளர்ச்சிகள்
- விவசாயம் மேம்படுத்த
- மின்சாரம், நீர் ஆதாரம், சாலைகள் பற்றி
- ஏழை மக்கள் முன்னேற
- குழந்தை தொழிலாளர்கள் பற்றி
இவைகளைப் பற்றி எந்தத் திட்டமும் இல்லை. எல்லாமே இலவசமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது தேர்தல்.

"மீன் பிடித்துத் தருவதை விட, எப்படி மீன் பிடிப்பது எனக் கற்றுக்கொடுங்கள்" எனச் சொல்வார்கள். இவர்கள் சிறிய இலவச மீன்களைப் போட்டு பெரிய மீன்களைப் பிடிக்க காத்திருக்கிறார்கள் என்பது, இப்போது நடக்கும் அடிதடி ரகளைகளிலே தெரிகிறது.

அந்த ஒருநாளும் கடந்து போகத்தான் போகிறது. "எவ்வளவோ பண்ணிட்டோம், இதப் பண்ண மாட்டோமா" என்பது போல், அன்றும் வாக்களிக்கப் போகிறோம். கருப்பு மையோடு பின்னர் எல்லோரிடமும் கடமையைச் செய்ததாக பேசிக் கொள்ளுவோம்.

மகாகவி சொன்னதும் நமக்குத் தான்:

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மாந்தரை நினைந்து விட்டால்
கஞ்சி குடிப்பதற்கு இலார் - அதன்
காரணம் இவையென அறியும் அறிவுமிலார்
நெஞ்சு பொறுக்கு திலையே...




11 comments:

  1. "மீன் பிடித்துத் தருவதை விட, எப்படி மீன் பிடிப்பது எனக் கற்றுக்கொடுங்கள்" எனச் சொல்வார்கள். இவர்கள் சிறிய இலவச மீன்களைப் போட்டு பெரிய மீன்களைப் பிடிக்க காத்திருக்கிறார்கள் என்பது, இப்போது நடக்கும் அடிதடி ரகளைகளிலே தெரிகிறது.

    ....rightly said!

    ReplyDelete
  2. உங்க ஆதங்கம் கரெக்ட்டுதான்... என்ன பண்ணலாம்?
    தம்பி.... கைக்கு மை போட்டதற்கு அப்புறம் தான் ஓட்டு போடணும்.. ;-)

    ReplyDelete
  3. என்ன இளங்கோ குமுறிட்டீங்க?...

    ReplyDelete
  4. புடிக்கலைன்னா புடிக்கலைன்னு சொல்லத்தான் வழி இருக்கே, இருக்கிற களவாணிகளில்யாராவது ஒருத்தரை தேர்தெடுத்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லையே? மனசாவது நிம்மதியா இருக்கும்.... :-(

    ReplyDelete
  5. @RVS
    //கைக்கு மை போட்டதற்கு அப்புறம் தான் ஓட்டு போடணும்.. ;-) //

    இதுக்கு தான் அண்ணன் வேணும்னு சொல்லுறது. நான் ஓட்டுப் போடப் போனதே மூணு தடவதான், அதுல ரெண்டு தடவ திருப்பி அனுப்பிட்டாங்க. ஒரு தடவதான் "என் பொன்னான வாக்கை" போட முடிஞ்சுது. எனவே மாற்றிச் சொல்லி விட்டேன்.

    நன்றிகள் அண்ணா.

    ReplyDelete
  6. @ஷஹி
    என்னங்க செய்யுறது.. எழுத்துல மட்டுமாவது பகிர்ந்து கொள்ளலாம் என்றுதான்..
    நன்றிங்க..

    ReplyDelete
  7. @முரளிகுமார் பத்மநாபன் said...

    //புடிக்கலைன்னா புடிக்கலைன்னு சொல்லத்தான் வழி இருக்கே..//
    அப்படிதான் பண்ணனும் முரளி.. பார்க்கலாம்..

    ReplyDelete
  8. இளங்கோ..

    இந்தத் தேர்தலில் நமது எதிர்ப்பைக் காட்டுவோம்.. யாருக்கும் ஓட்டுப் போட விருப்பம் இல்லை என்றால், அதற்கான வசதியும் உள்ளது.. அதைப் பயன்படுத்தினால் எங்கே ஓட்டு வீணாகி விடுமோ என்ற உள்மன உறுத்தல் தான் காரணம்.. கடைசி கடைசிக்கு ஆளுங்கட்சியை இறக்கவாவது அந்த அஸ்திரத்தை உபயோகப் படுத்தலாம் என்று சிலர் என்னுகின்றனரோ என்னவோ...

    என்ன தென்றல் மாறி இருந்த இளங்கோவிடம் இருந்து ஒரு பெருங்கோபம்..???

    ReplyDelete
  9. நம்ம ஊருக்கு வந்ததும் நம்மளால முடிஞ்ச சில நல்ல காரியங்களைத் துவங்கலாம் என்று இருக்கிறேன்.. உங்கள் உதவி கட்டாயம் தேவை.. வந்த பிறகு சொல்கிறேன்...

    ReplyDelete
  10. @சாமக்கோடங்கி
    //என்ன தென்றல் மாறி இருந்த இளங்கோவிடம் இருந்து ஒரு பெருங்கோபம்..??? //
    என்ன பண்ணுறது, இங்க புலம்புறதத் தவிர வேற வழி தெரியலீங்க.. :(

    //நம்ம ஊருக்கு வந்ததும் நம்மளால முடிஞ்ச சில நல்ல காரியங்களைத் துவங்கலாம் என்று இருக்கிறேன்.. உங்கள் உதவி கட்டாயம் தேவை.. வந்த பிறகு சொல்கிறேன்... //
    எங்கள் ஆதரவு (தேர்தல் timing!!) எப்போதும் உங்களுக்கு உண்டு.. just fun.
    அது எங்களுக்கு மகிழ்ச்சியே..

    நன்றிகள் பிரகாஷ்..

    ReplyDelete